பக்தி நியூஸ் நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம் இன்னைக்கு நம்ம பார்க்க போற பதிவு கர்மாக்களை பற்றிய ஒரு பதிவு.
கர்மானா என்ன அது எப்படி வருது, அதை எப்படி போக்கிக்கலாம் போக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன அப்படிங்கறத பத்தி எல்லாம் இந்த பதிவுல தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
வாங்க கர்மாவை பத்தி நிறைய தெரிந்து கொள்ளலாம்.,
அவ்வையார் கிட்ட போய் கர்மானா என்ன அப்படின்னு கேளுங்க ஒரே வரியில சொன்னார்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முடிஞ்சு போச்சு அவ்வளவுதான்.
பட்டினத்து சுவாமிகள் சொல்றாரு கழுகு மரத்துல ஏத்தும்போது முன் செய்த தீவினை இங்கன்னே வந்து மூண்டதுவேன்னாரு அந்த கழுகு மரம் எரிஞ்சு சாம்பலா போயிடுச்சு அப்போ அவருக்கு எது முன் செய்த வினை அப்ப அவருடைய கர்மாவை பத்தி அவர் அங்க பேசுறார்.
கர்மா அப்படிங்கறது முன் செய்த வினை சரி வள்ளுவர் கிட்ட போய் கேட்டா வள்ளுவர் ஊழ் அப்படின்னு ஒரு அதிகாரமே கொடுத்துட்டார், நம்மளுக்கு ஊழி பெருவழி யாவுல அப்படின்னு கேட்டுட்டார் ஊழை விட மிக வலிமையானது
உலகத்தில் ஏதாவது இருக்கானா கிடையாது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாதிரி வள்ளுவர் வந்து ஆணித்தரமா எதா இருந்தாலும் சொல்லிடுவார் இதுதான் அவ்வளவுதான் அப்படின்னு சொல்லிடுறார்.
இதை சிலப்பதிகாரத்தினுடைய மிக முக்கியமான மையக் கருத்தாகவே நமக்கு சொன்னாங்க, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அப்படின்னே நமக்கு சொல்லிட்டாங்க, நீங்க அதுல இருந்து தப்பிச்சே போக முடியாது, எங்க போனாலும் அது பின்னாடியே வந்து அது செய்ய வேண்டியதை செஞ்சுட்டு தான் போகும், இதற்கு பெயர்தான் கர்மா.
இப்படி நம்ம எளிமையா, இது ஒரே பேர்ல வச்சுக்குவோமே, கர்மா அப்படிங்கிற பெயர்
இப்ப கர்மானா என்ன அப்படிங்கறது உங்களுக்கு புரிஞ்சிருக்கும், ஏற்கனவே பல கோடி பிறவிகளாக செய்து, செய்து சேர்த்து வைத்திருந்த ஒன்னு, இதுல மூணு வகை அப்படின்னு நமக்கு சொல்றாங்க.
நிறைய உள்வகைகள் இருக்கு, பொதுவா நம்ம எடுத்துக்கிட்டோம்னா ஒரு மூணு வகையாக இந்த கர்மாக்களை பிரிக்கலாம்.
முதல் வகை சஞ்சித கர்மா அப்படின்னு பேரு, அப்படின்னா என்ன இப்ப சொன்னேன் இல்லையா பல கோடி பிறவியா நமக்கு அவ்வளவு பிறவி இருக்கானா மாணிக்கவாசகர்ட்ட தான் நான் திரும்பவும் வரணும், அவர் அவ்வளவும் நமக்கு எழுதி இருக்கிறார் புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாய், பல் மிருகமாகி, பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லசுரராய், முனிவராய், தேவராய், செல்லா நின்ற இத்தாவர ஜென்மத்திலேயே எல்லா பிறப்பும் இப்ப இவ்வளவு பிறப்பு இன்னும் இன்னும் நிறைய இருக்கு வச்சுக்கோங்களேன்,
இந்த பிறவிகளில் எல்லாம் செய்த நல்வினை தீவினை இது ரெண்டையும் சேர்த்துக்கணும் கர்மாங்குறது நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு, ஆக இந்த நல்வினை, தீவினையினுடைய மொத்த தொகுப்பு இருக்கு பாருங்க, இதற்கு பெயர் என்ன அப்படின்னா சஞ்சித்த கர்மா அப்படின்னு பேரு,
இது வந்து நம்ம பேங்க்ல வச்சிருக்கிற ஃபுல் டெபாசிட் முழு டெபாசிட்டும், இதுதான் இப்ப இதை அப்படியே வச்சுக்கோங்க,
ரெண்டாவது பிராரப்த கர்மா அப்படின்னு அதுக்கு பேரு, அப்படின்னா என்ன இந்த டெபாசிட் ஒன்னு வச்சிருக்கிறோம்ல அந்த டெபாசிட்ல இருந்து கொஞ்சோண்டு காசு எடுத்து நாங்க இப்ப செலவு பண்ணிக்கிறதுக்கு, அக்கவுண்ட்ல தனியா போட்டு வச்சிக்கிறோம் அப்படின்னு ஒன்னு வச்சுக்கிறோம்ல, எனக்கு இப்ப செலவுக்கு வேணும் அப்படின்னு வச்சுக்கிறோம்ல, அது மாதிரி பல கோடி பிறவியா சேர்த்து வைத்த நல்வினை, தீவினையிலிருந்து இந்த பிறவியில இதை, இதை அனுபவிக்கணும் அப்படின்னு சில கர்மாக்கள் வந்து, இந்த பிறவியில நம்மகிட்ட இறங்கி இருக்கு இல்ல அதற்கு பெயர்தான் இரண்டாவது கர்மா அப்படின்னு சொல்லப்படக்கூடிய பிராப்த கர்மா,
அப்படின்னு அதுக்கு பேரு அது இந்த ஜென்மத்திலேயே நாம அனுபவிக்க வேண்டியது எளிமையா புரிஞ்சிருப்பீங்க,
அடுத்து மூணாவது ஒன்னு இருக்கு அதுக்கு பேர் என்ன அப்படின்னா ஆகாமிய கர்மா அப்படின்னு பேரு ஆகாமிய கர்மானா என்ன, அப்படின்னா இப்போ வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் நாம் செய்யக்கூடிய நல்வினையும் தீவினையும் திரும்ப ஒரு தொகையா சேர்ந்து அது போய் சஞ்சித கர்மாவுல சேரும் பாருங்க இப்போது நாம் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்த கர்ம வினைகளுக்கு நல்வினைக்கும்
தீவினைக்கும் பேர் என்ன அப்படின்னா ஆகாமிய கர்மா அப்படின்னு பேரு இப்ப மூணு வகையான கர்ம வழிகள் என்ன அப்படின்னு பார்த்துட்டோம்,
இப்ப கர்மாவை பத்தி தெரிஞ்சவங்களுக்கு இது எளிமையா புரிஞ்சிருக்கும், புதுசா இந்த வார்த்தையை நான் இப்பதான் கேட்கிறேன், கர்மானா என்னமா இப்ப நீங்க சொன்னோம்ல நாம என்ன செஞ்சோமோ, அதற்கு உண்டான எதிர்விளைவை நாமே நம்முடைய வாழ்க்கையில் அனுபவிப்போம், இப்ப எளிமையா இப்படி புரிஞ்சுக்கோங்களேன், ஒருத்தரை மனம் நோக பேசணும், அப்படின்னு வச்சுக்கோங்க அது ஒரு வினை, அந்த வினை இன்னொருத்தர் நம்மள மனம் நோக திட்டிருவார், அவர் மனசு எப்படி நொந்துதோ அது மாதிரி, நம்ம மனசும் நோகும், அதுதான் கர்மா
நீங்க ஒருத்தருக்கு என்ன செய்றீங்களோ அதை அப்படியே திரும்ப உங்களுக்கு வரும் ஒன்னு நல்லது செஞ்சா நல்லது வரும், கெட்டது செஞ்சா கெட்டது வரும் இவ்வளவுதான் இதைத்தான் கர்மா அப்படிங்கிறோம்,
இது பெருசு, பெருசாவே வச்சுக்கோங்களேன் நமக்கு எவ்வளவு பிரச்சனை வருது எவ்வளவு துன்பம் வருது இது எல்லாத்துக்கும் காரணம், முன்பு நாம் சேர்த்து வைத்திருக்கக்கூடிய இந்த டெபாசிட்ல இருக்கிற கர்மாதான், சரி இப்போ ஒரு பிறவியை எடுத்துட்டோம், இதே மாதிரி திரும்ப செஞ்சு செஞ்சு
டெபாசிட்டுக்கு அனுப்புறதை விட்டுட்டு இப்படியே இந்த பிறவியிலே முடிஞ்ச வரைக்கும் இதை கழிச்சுட்டே போறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னா இருக்கு.
அதற்கு உண்டான பிறவிதான் மனிதப் பிறவி இந்த மனிதப் பிறவியில நினைச்சா இந்த கர்ம வினைகளை நிறையவே நம்மால் குறைத்துக் கொள்ள முடியும்,
அதுல முதல் வழி என்ன அப்படின்னா தெய்வத்தை உள்ளம், உருகி சரணாகதியாகி வழிபாடு செய்தல், முதல்ல அதுதான் கடவுளை போய் டோட்டலா சரண்டர் ஆயிடுறது இந்த சும்மா இந்த வேணும்னா கும்பிடுறது வேணாம்னா விட்டுறது தேவைக்கு போய் வழிபாடு பண்றது அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்றது இது
இதெல்லாம் எதுவுமே கிடையாது எல்லாம் கடவுளால நல்லதா ஆமா கடவுள் தான் கொடுத்தார் கெட்டதா என் வினையால வந்தது தெளிவா முழு சரணாகதியா இறைவனைப் போய் இருக்க பிடித்துக்கொண்டு
கடவுளை மட்டுமே நம்பி நாம் நம்முடைய வாழ்க்கையை அப்படியே எடுத்துட்டு போகக்கூடிய ஒரு அறிவார்ந்த ஒரு ஞானமான ஒரு வழி அதுதான் முதல் வழி.
அதோட சேர்த்து இன்னும் சில விஷயங்களை நம்முடைய பெரியவங்க சொல்லி இருக்காங்க இதை செய்யுங்க உங்க கரும வினைகள் கொஞ்சம், கொஞ்சமா குறையும்,
அதுல நான் என்னுடைய ஒவ்வொரு பதிவிலையும் உங்களுக்கு சொல்றது மிக முக்கியமானது அன்னதானம் பிரதானமா அன்னதானம்,
அருளாளர்கள் இப்படி வழிமுறை வழிமுறையா நமக்கு சொல்லி இருக்காங்க என்ன சொல்லி இருக்காங்க உலகத்திலேயே நம்முடைய கர்ம வினைகளை குறைக்கக்கூடிய மிகப்பெரிய அளவு அன்னதானத்துல தான் இருக்கு, இது ஒரு
பர்சன்டேஜாவே நீங்க வச்சுக்கலாமே இதை செஞ்சா, இத்தனை பர்சன்டேஜ் வரும்,
இத செஞ்சா இத்தனை பர்சன்டேஜ் வரும்னு இன்னைக்கு நிறைய சதவீதங்களாக நம்ம பிரிக்கிறோம்ல
அப்படி இப்ப இருக்கிறவங்களுக்கு புரியனும்னா அந்த மாதிரி சொல்றேன் அதிகமாக ஒரு 70, 80 சதவீதத்தில் நம்முடைய கர்ம வினைகளை கழிக்கக்கூடிய புண்ணியத்தை சேர்க்கக்கூடிய ஒரு செயல் என்னன்னா அன்னதானம் தான் இந்த அன்னதானத்தை பலன் கருதியும் செய்யக்கூடாது, அதையும் நீங்க தெரிஞ்சுக்கணும் நான் இந்த அன்னதானம் பண்றேன்
எனக்கு இந்த நல்லது கிடைக்கும் அப்படின்னு செய்யவே கூடாது ஏன் தெரியுமா
அதுக்கு போய் நல்வினை சேர்ந்துரும், இந்த அன்னதானம் பண்ணின புண்ணியத்துக்கு நல்வினை போயிடும் இங்க கர்மா கழியாது அப்ப என்ன பண்ணனும் இறைவன் எனக்கு தந்ததை அடியார்களுக்கு தருகிறேன்,
இது அவர் அவர்களுக்குன்னு இறைவனால் என்னிடத்தில் தரப்பட்டது அப்படிங்கிற எண்ணத்தோட தான் எல்லா தானமும், பண்ணனும் நான் பண்றேன் நான் பண்றேன்னு எப்படி பண்ண முடியும் நான் பண்றேன் நான் பண்றேன்னு சொல்றதுக்கு என்ன தகுதி இருக்கு நான் வரும்போது ஏதாவது கொண்டு வந்தேனா இல்ல, இல்ல போகும்போது ஏதாவது கொண்டு போக போறேனா என்னோடதுன்னு இல்ல இல்ல
அப்ப எதுவுமே என்னோடது இல்லாம நான் பண்றேன்னா என்ன அர்த்தம் எல்லாம் இறைவன் தந்தது, அதை நான் அடியார்களுக்கு இப்படி தர்றேன், இந்த தெளிவோட நீங்க அன்னதானம் பண்ணீங்கன்னா, அந்த அன்னதானத்தின் முழு பலனும் நம்முடைய கர்ம வினைகளை அழித்துக் கொண்டே இருக்கும்.
இதை நான் என்னுடைய எல்லா விசேஷ பதிவுகளிலும் எல்லா பதிவுலயும் உங்களுக்கு சொல்லுவேன் அன்னதானம் பண்ணுங்க, அன்னதானம் பண்ணுங்க, அன்னதானம் பண்ணுங்க இப்போ நிறைய பேருக்கு ஒரு கேள்வி, எங்களால இப்போ நம்ம ஊர்லயும் அதாவது தமிழ்நாட்டுலயோ,
இந்தியாவுக்குள்ளயும் அன்னதானம் பண்ண ஆள் தேடினாலே சில இடங்கள்ல ரொம்ப கஷ்டம் தமிழ்நாட்டுல ஓரளவுக்கு நம்ம ஏதோ கொடுத்தா வாங்கிக்குவாங்க, ஆனா சில வெளி, மாநிலங்களுக்கு போனோம்னா கஷ்டம், அதைவிட கஷ்டம் வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்கு, அதனால எங்களுக்கு இதுக்கெல்லாம் வேற ஏதாவது ஆப்ஷன்ஸ் இருக்குதா வேற வகைகள் இருக்குதா அதெல்லாம் மூலமா நாங்க செய்ய முடியுமான்னு நிறைய பேர் கேக்குறீங்க,
அதுக்காகத்தான் இந்த பதிவே நான் உங்களுக்கு சிறப்பா கொடுக்கிறேன் என்னெல்லாம் நீங்க செய்யலாம் அதுல என்னென்ன வகையான தானங்கள் நமக்கு இந்த கர்மாக்களை போக்கும் அப்படின்னு நிறைய சொல்ல முடியலனாலும் ஒரு குறிப்பிட்ட சில விஷயங்களை உங்களோட நான் சொல்றேன் இந்த ஒரு பட்டியலை நான் கொடுக்கிறேன் இதை பாருங்க இதன் மூலமாகவே நமக்கு நிறைய நம்முடைய கர்ம வினைகளை போக்கிக் கொண்டு,
இறைவனைப் போய் அடைவதற்கு உண்டான இந்த ஆன்மாவை போய் தூய்மையாக்கி கடவுள்ட்ட ஒப்படைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு மானுடப் பிறவியிலேயே கிடைச்சாலும் கிடைச்சிரும்.
அதற்கான முயற்சி தானே செய்றோம் ஏன் முயற்சியே செய்யாம கிடைக்காது கிடைக்காதுன்னு நம்ம நினைப்பானே முயற்சிக்கலாமே அதுல என்னென்ன வகையான தானங்கள் இருக்கு என்னெல்லாம் செய்யலாம், அப்படிங்கறத இப்ப பார்ப்போமா அன்னதானம் அப்படிங்கிற வகையில
பார்த்தோம்னா பறவைகளுக்கு தண்ணீர் வைத்தல், பறவைகளுக்கு தானியங்களை வைத்தல், அதே மாதிரி நாய்களுக்கு உணவளித்தல், குளங்கள் ஏரிகள்ல இருக்கக்கூடிய மீன்களுக்கு உணவளிப்பது, குரங்கு இது போன்ற உயிரினங்களுக்கு நாம உணவு கொடுப்பது,
குறிப்பா பசுக்களுக்கு நாம அளிக்கக்கூடிய தீவனம், பசுக்களுக்கு தரக்கூடிய கீரை, வாழைப்பழம் இது போன்ற தீவனம், ஆடுகளுக்கு நாம தரக்கூடியது, இது எல்லாமே நமக்கு மிகப்பெரிய புண்ணிய பலனை பெற்றுத்தரும், அதே மாதிரி மரம், செடி, கொடி இவைகளுக்கு தண்ணீர் விடுவது கூட ஒரு மிகப்பெரிய நமக்கு புண்ணிய பலனை பெற்றுத் தரக்கூடியது.
தாய் தந்தையர்களை பேணி, பராமரித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்வது, ஆதரவற்ற முதியோர்களுக்கு நாம உணவு தருவது, சகோதர, சகோதரிகள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு நாம் உணவளித்து அவர்களுடைய துன்பத்தை பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு செய்யக்கூடிய நல்ல விஷயங்கள், ஒரு கர்ப்பஸ்திரீயை பார்த்தோம்னா அந்த கர்ப்ப ஸ்திரீக்கு தேவையான உதவிகள் செய்வது, ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்படுறவங்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தல்,
கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை ஏற்பட்டிருந்தா அந்த பிரச்சனையை சமாதானம் பண்ணி அவங்களை சேர்த்து வைக்க வாய்ப்பு இருந்தா, அவங்களை சேர்த்து வைக்கிறது, அனாத இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இதுபோல இல்லங்கள்ல இருக்கக்கூடியவர்களுக்கு உணவளிப்பது, நோயாளிகளுக்கு குறிப்பா, ரொம்ப ஏழ்மையில நோயுற்று மருத்துவமனையில உணவுக்கே கஷ்டப்படக்கூடிய நோயாளிகளுக்கு உணவு தருவது, விசேஷ காலங்கள்ல நம்முடைய அண்டை வீடுகள்ல, பக்கத்து வீடு எதிர்த்த வீடு அவங்களோடு உணவுகளை பலகாரங்களை பகிர்ந்து கொண்டு, அவங்களுக்கும் நாம அதை கொடுக்கிறது, கோவில்ல நடக்கக்கூடிய திருப்பணிகளுக்கு உதவி செய்தல்,
கோவில்கள்ல நடக்கக்கூடிய அன்னதானங்களுக்கு நாம உதவி செய்தல், அதே மாதிரி அன்னதானம் வெளியில எங்க யார் செஞ்சாலும், அந்த அன்னதானத்திற்கு நாம் உதவி செய்தல்,
அதே மாதிரி வாசல்ல யாராவது யாசகம் கேட்கிறாங்க, உண்மையிலேயே அவங்க யாசகமாதான் கேட்கிறாங்க, அப்படின்னா அவர்களுக்கு உணவு கொடுப்பது, இறைவனுக்கு நல்ல பூக்களை வாங்கி அதை நாமளே கையால கட்டி அதை மாலையாக்கி தொடுத்து இறைவனுக்கு போட்டு அழகு பார்ப்பது,
முன்னோர்களுக்கு தர வேண்டிய வேண்டிய நீர்தார் கடன் அதாவது திதி கொடுக்கிறது வருடம் தோறும் அவர்களுக்கு செய்ய வேண்டிய நினைவு நாளைக்கு இலை போட்டு படைக்கிறது,
முன்னோர் வழிபாடு இதை மறக்காமல் செய்பவர்களுக்கு ஏழை மாணவர்கள் படிக்கவே வசதி இல்லாது, ஏழையா இருக்கக்கூடிய மாணவர்கள் அந்த ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறது, இல்ல படிப்புக்கு ஏதாவது உதவி செய்வது இதுபோல காரியங்களை செய்தல் தெய்வீக சம்பந்தப்பட்ட காரியம் கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் இதுபோல எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு நாம் அந்த இடத்தில் போய் உதவி செய்வது,
விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான ஒரு ஏழை விவசாயி கஷ்டப்படுறாருன்னா அவருக்கு உணவோ அல்லது அவர் வளர்வதற்கு தேவையான விஷயங்கள் எதுவோ செய்வது
இப்படி நாம் செய்யக்கூடிய பல்வேறு வகையான தானங்களும் கர்ம வினைகள்ல இருந்து, நமக்கு ஒரு நல்ல விடுதலையை தரும், இப்போ நான் என்னால முடிந்த அளவுக்கு சில விஷயங்களை திரட்டி நான் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்,
இது இல்லாம நல்லது அப்படின்னு நிறைய உங்க கண்ணுக்கு தெரியும் இல்லையா இல்ல இந்த மாதிரி எனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க கல்யாணம் பண்ண வசதி இல்லைன்னு கேக்குறாங்க அவங்களுக்கு நாங்க கல்யாணத்துக்கு தானம் பண்ணலாமா நீங்க
கேட்பீங்க, அதனால எளிமையா நான் ஒரு வழிமுறையை நான் உங்களுக்கு சுலபமா சொல்லி இருக்கிறேன்,
ஏன் நான் இதுல காக்கா குருவி புறா இதெல்லாம் நான் சேர்த்து சொல்றேன்னா வெளிநாடுகள்ல இருக்கக்கூடியவர்களுக்கு பசுமாடு நிறைய கிடைக்கிறது இல்லை, சில நாடுகள்ல காகத்துக்கு எல்லாம் உணவு வைக்கவே, முடியாது அங்கெல்லாம் புறாக்கள் இருக்கும் அந்த மாதிரி எளிமையா நீங்க செய்யலாம், அப்படிங்கறதுக்கு தான் நான் இவ்வளவு வழிகளை உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்,
ஒரு உயிர் கஷ்டப்படுது, அந்த கஷ்டத்தை போக்குறதுக்கு, உங்களால ஏதாவது செய்ய முடியுமா எல்லாத்தையும் செய், அப்படின்னு நான் சொல்லல ஒரே ஏதாவது ஒரு சதவீதம்னு நீங்க முடிவு பண்ணி வச்சுக்கோங்க, நீங்க சம்பாதிக்கிறதுல இருந்து இத்தனை சதவீதம் எனக்கு ஒரு பத்து ரூபாய் கிடைக்குதா, நான் அதுல ஒரு அஞ்சு பைசா எடுத்து வைக்கிறேன், நான் ஒரு பைசா எடுத்து வைக்கிறேன் ஒரு 50 பைசா எடுத்து வைக்கிறேன், ஒரு ரூபாய் நான் எடுத்து வைக்கிறேன்.
உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி வச்சுக்கோங்க ஏன்னா தனக்கு மிஞ்சி தான் தான தர்மம்னு சொல்றாங்கம்மா நீங்க பாட்டுக்கு சொல்றதெல்லாம் இப்படி தான தர்மம் பண்ணிட்டு நாங்க போய் யார்கிட்டயாவது கேட்டா எங்களுக்கு அவங்க இல்லன்னு தானே சொல்லுவாங்க அப்படின்னு சொல்ல வரல நான் உங்களுக்கு சொல்றது உங்ககிட்ட என்ன இருக்கோ, நீங்க ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கிறீங்களா அதுல ஒரு ரூபாயோ ஒரு ரெண்டு ரூபாயோ ஒரு மாசத்துல ஒரு நாள் இதை இந்த ஒரு ரூபாயை நீங்க இப்படி சேர்த்து வச்சு பாருங்க,
அது ஒரு மாசத்துக்கு நமக்கு ₹30 சேர்ந்துரும் அந்த ₹30 ரூபாய்ல நீங்க ஏதோ ஒரு பொருள் வாங்கி ஏதோ ஒரு உயிரினத்துக்கு தானம், பண்ணுங்களேன் இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா நாம செய்ய செய்ய நம்முடைய கர்மாக்கள் என்பது குறையும்,
அதை விட்டுட்டு கர்மானா பயப்படாதீங்க, இப்ப நிறைய பேர் பயந்து, கர்மானா அப்படி கர்மானா இப்படி, கர்மாவை அப்படி பண்ணனும் இப்படி பண்ணனுங்கிறாங்களே எல்லாரும் இது பயப்பட வேண்டிய விஷயமே இல்லை.
நம்ம பண்ணது தானே நம்ம பண்ணத நம்ம தான் தீர்க்க முடியும் வேற இன்னொருத்தர் வந்தா நமக்கு தீர்த்து வைக்க போறார் கிடையாது, அதனால நம்மளால முடிஞ்ச அளவு நல்வினைகளை அதிகப்படுத்திக் கொண்டே போனால் தீவினைகள் தானாக குறைந்து கொண்டு வரும்.
அந்த நல்லதுக்கும் இறைவன் தந்ததை இறைவன் தராருன்னா புண்ணியமே இல்லாம போயிடும் அப்ப நம்ம கணக்க நம்மளே மிகச் சரியாக செட்டில் பண்ணிரலாம்
அப்ப அதை கடவுள் அருளோட நாம இந்த கர்ம வினைகளை நீக்கிக் கொண்டு இதுபோல நல்ல தானங்களை எல்லாம் பண்ணி இறையருளைப் பெற்று மகிழ்ச்சியா சந்தோஷமா, ஒரு பரிபூரணத்துவம் பெற்ற ஆன்மாவாக நமக்கு ஒரு நல்ல ஆசீர்வாதத்தை இறைவன் தரணும் அப்படின்னு இந்த நேரத்துல நானும் இறைவன் கிட்ட உள்ளன்போடு பிரார்த்தனை பண்ணிக்கிறேன்.
இந்த தகவலை உங்களுடைய நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்க அவர்கள் இந்த விஷயம் தெரியும்போது
அவங்களுக்கும் நம்முடைய கர்ம வினைகளை எப்படி குறைச்சிக்கிறது அப்படின்னு பயனுள்ளதாக இருக்கும் அதே மாதிரி இன்னொரு விஷயத்தையும் எல்லாரும் ஞாபகம் வச்சுக்கோங்க இதற்குப் பிறகாவது இந்த பதிவை கேட்ட பிறகாவது நாம நம்முடைய வாழ்க்கையில ரொம்ப கர்ம வினைகளை சேர்த்துக்காம வாழ்வது எப்படி அப்படின்னு ஒரு நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிக்க மற்றவர்களுக்கும் அது உதவியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ஆன்மீக தகவல்கள்
இதையும் படிக்கலாமே: அறுபடை வீடு
இதையும் படிக்கலாமே: திருப்புகழ்
இதையும் படிக்கலாமே: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
இதையும் படிக்கலாமே: முருகனை அரை நிமிடம் இப்படி வழிபடுங்கள் நடப்பதை பாருங்கள்