முருகனை அரை நிமிடம் இப்படி வழிபடுங்கள் நடப்பதை பாருங்கள்
முருகப்பெருமானை அரை நிமிடம் உள்ளம் உருகி வழிபாடு பண்ணினா நமக்கு வாழ்க்கையில என்னெல்லாம் கிடைக்கும் அப்படிங்கறத பத்தி தான் இன்றைய பதிவுல பார்க்க போறோம்
வாங்க முருகன் அப்படின்னு சொன்னாலே, மறக்க முடியாத இன்னொரு பெயரையும் நாம ஞாபகம் வச்சுக்கணும் அருணகிரிநாதர்.
அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட்டியது போல ஒரு கருணையை எல்லா உயிர்களும் பெற
வேண்டும் என்கின்ற ஒரு பேர் எண்ணத்தோடு அருணகிரி பெருமான் திருப்புகழ்ல எல்லாத்தையும் அப்படியே நமக்கு பதிவு பண்ணி கொடுத்திருக்கிறார்.
அதுல அருணகிரிநாத சுவாமி ரொம்ப அழகா நமக்கு ஒரு விஷயம் சொல்றார், அரை நிமிஷம் உள்ளம், உருகி கண்ணீர் பெருகி உண்மையான அன்போட உண்மையான பக்தியோட உண்மையான காதலோட வேறு எதுவும் வேண்டாம் முருகா நீ மட்டும்தான் எனக்கு வேணும்,
அப்படின்னு யார் ஒருத்தர் அவனுடைய திருவடியை பிடிக்கிறாங்களோ, அவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் அப்படின்னு ஒரு நீண்ட பட்டியலையே தன்னுடைய திருப்புகழ்ல நமக்கு சொல்லி இருக்கிறார் இன்னைக்கு
கடவுள் கிட்ட நம்ம போய் நின்னோம் அப்படின்னா பலபேரும் ஒரு பெரிய லிஸ்ட்டோட தான் நிக்கிறோம் எனக்கு இது கொடு, எனக்கு அது கொடு எனக்கு இது வேணும் எனக்கு அது வேணும், கேளுங்க என்ன வேணாலும் கேளுங்க ஆனா நம்மை பெற்ற தாய் தந்தைக்கு நமக்கு என்ன செய்யணும்,
அப்படிங்கறது நல்லா தெரியும் இல்லையா, நாமாக ஒன்றை கேட்டு பெறுவதை விட இறைவன் நமக்கு என்ன கொடுக்கிறார் என்று அவரே கொடுத்தால் அது மிக உயர்ந்ததாக இருக்கும்.
நமக்கு சரியா கேட்கத் தெரியாது அதனால்தான் இறைவன் கொடுப்பது எதுவாக இருந்தாலும் அதை உயர்வாக நல்லதாக இந்த ஆன்மாவுக்கு இது தேவையானது என பார்த்து
ஒரு தாய் போல தருவார் அதை நீ பெற்றுக் கொள்வதற்கு தயாராக இரு அப்படின்னு அருணகிரி பெருமான் நம்மை பக்குவம் படுத்துகிறார்
அதிலும் முருகப்பெருமானுடைய வழிபாட்டைப் பற்றி சொல்லுகிறபோது முருகன் ரெண்டு கையில கொடுக்கிறவரோ, நாலு கையில கொடுக்கிறவரோ, ஆறு கையில கொடுக்கிறவரோ கிடையாது 12 கையில தரக்கூடியவர் கேட்டவருக்கு கேட்ட வரங்களை அல்ல, நினைத்தவருக்கு நினைத்த வரத்தை விட அதீதமான நலன்களை வாரி வாரி வழங்கக்கூடியவர்.
அவர் 12 கையில கொடுப்பார் வாங்குறதுக்கு நமக்கு தான் ரெண்டு கை பத்தாது அப்பேற்பட்ட வள்ளலாக விளங்கக்கூடியவர் முருகப்பெருமான்.
அவர் வள்ளல்ன்னா பக்கத்துல இருக்கிற அம்மா சும்மா கிடையாது. அவள் வள்ளி இவர் ஒன்னு கொடுத்தா, அந்த அம்மா ரெண்டா குடுங்க என்பாளாம், அப்படி கணவனும், மனைவியும் போட்டி போட்டுக்கிட்டு நமக்கு கொடுக்க தயாரா இருக்குறாங்க வாங்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், அவரை நினைக்கணும் எப்படி நினைக்கணும் அரை நிமிஷமாவது நினைக்கணும்னார்,
அரை நிமிஷம் எப்படி நினைக்கணும் எனக்கு கொடுப்பார் எனக்கு கொடுப்பார் எனக்கு கொடுப்பாருன்னு நினைக்கக்கூடாது,
முருகப்பெருமானை உள்ளம் உருகி அந்த உள்ளம் உருகுகிற போதே நமக்கு அப்படியே கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் அப்படியே பெருகும் அந்த கண்ணீர் பெருக முருகப்பெருமானை முழுமையாக ஒரு ஆன்மா சரணாகதி அடைந்து,
முருகா நீ எனக்கு என்ன கொடுத்தாலும் சரி உன் அடியாராக உன் மெய்த்தொண்டராக என்னை நீ ஏற்றுக்கொள் அப்படின்னு அவன்கிட்ட ஒரு விண்ணப்பம் வச்சிட்டு
நீங்க இந்த திருப்புகழை சொல்லி பாருங்க என்னவெல்லாம் கொடுப்பார் அப்படின்னு இந்த திருப்புகழலையே அருணகிரியார் சொல்றார் பார்க்கலாம் வாங்க
சரண கமல் ஆலயத்தை அரை நிமிஷம் நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத
சகட சட மூட மட்டில் பவ வினையிலே ஜனித்த தமியன்
விடியால் மயக்கம் உருவேனோ கருணை புரியாதிருப்ப
எனக்கு இவ்வேளை செப்பு கயிலைமலை
நாதர் பெற்ற குமரோனே கடகப் புய மீதி
ரத்ன மணி அணிப்பொன் மாலை
செச்சை கமழும் மனம் மார் கடப்பம் அணிவோனே தருணமிதையாம்
மிகுத்த கணமது நீள் சவுக்கிய சகல செல்வ யோக மிக்கப் பெரும் திருவாழ்வு தகைமை
சிவ ஞானமுக்தி பரகதியும் நீ கொடுத்து உதவி புரிய வேணும்
நினைத்த வடிவேலா அருணதள பாதபத்மம்
மதுநிதமுமே துதிக்க அரிய தமிழ் தான்
அளித்த மயில்வீரா அதிசயம் அநேகமுற்ற பழனிமலை மீதுத்த அழகத் திருவேரகத்தின் முருகோனே
இந்த பாடல்ல அருணகிரிநாத சுவாமிகள் ரெண்டு விதமாக நமக்கு சொல்றார் அரை நிமிஷம் நேரம்
முருகப்பெருமானை நினைச்சா என்னெல்லாம் வரும், அப்படின்னு சொன்னவரு
அரை நிமிஷம் நினைக்காததுனாலதான் நான் இந்த பிறவி எடுத்து கஷ்டப்படுறேன் அப்படிங்கறத தான் முதல்ல பதிவு பண்றார்
அரை நிமிட நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத அறியாத எனக்கு என்ன கிடைச்சது
சகட சட மூட மட்டில் பவவி வினையிலே சனித்து தமன் மிடியால் மயக்கம் உருவேனோ அப்படிங்கிறார்
அப்ப இந்த உலகத்தை அவர் எப்படி நமக்கு சொல்றாரு இந்த ஒரு பாழா போன உலகத்துல மறுபடி மறுபடி நான் பிறந்து மறுபடி மறுபடி ஒவ்வொரு பிறவியாக வந்து இதுல எப்படி மிடினா வறுமை வறுமை ஏற்பட்டு வாழ்க்கையில
மயங்கி இப்படி வாழ்வதே ஒரு வேலையாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எதனால
உன்னை அரை நிமிஷம் நான் ஒழுங்கா நினைக்காததுனால நினைக்காததுனால இப்படி வாழ்ற நானு உன்னை
இனிமே இந்த பிறவியில நினைக்கிறேன் எனக்கு நீ என்னெல்லாம் கொடுக்கணும் அப்படிங்கறத தனக்காகவா கேட்டார் அருணகிரிநாதர் இல்லையே
அவர்தான் முருகனை நேருக்கு, நேரா பார்த்துட்டார் முருகனுடைய அருளைப் பெற்றுவிட்டார் முருகப்பெருமானே
அவரை திருப்புகழை பாடுன்னு சொன்னார் அவர் திருப்புகழும் பாடிட்டு இருக்கிறார் அவருக்காக கேட்கல பின்னாடி வர்ற நமக்காக அருணகிரிநாத சுவாமிகள் அப்பவே கேட்டு வச்சார்
அப்ப இந்த திருப்புகழ்ல நமக்கு சொல்லி இருக்கிற மாதிரி அரை நிமிஷம் நினைக்கலன்னா ஒன்னும் இல்லைங்க திரும்பத், திரும்ப பிறந்துகிட்டே இருக்க வேண்டியதுதான் பிறப்பு, இறப்பு வாழ்க்கையில இன்பம், துன்பம் வறுமை, கஷ்டம் எல்லாம் அது பாட்டுக்கு போகும்
அதுக்கு நம்ம ஒன்னும் செய்ய வேண்டாம் வேண்டாம் என்னால இந்த துயர் பட முடியாது சொல்லுவோம் இல்ல பட்டது, போதும் இனி பட முடியாத துயரம் முருகா உன் திருவடி நிழலில் எனக்கு இடம் கொடு,
என் வாழ்க்கையை நல்ல வாழ்க்கையாக மாற்று என் வாழ்க்கையில் எல்லா உயர்வுகளும் எனக்கு கிடைக்கணும் என் வாழ்க்கையிலே எல்லா நலன்களும் எனக்கு
கிடைக்கணும் அப்படின்னு நினைக்கிறீங்களா
பின்னால அருணகிரிநாத சுவாமி நமக்கு சொல்றார்
இந்த திருப்புகழ அன்றாடம், நீங்க பாராயணம் பண்ணனும். இந்த திருப்புகழை பாராயணம் பண்ண எவ்வளவு நேரம் ஆகும் ஒரு ஒரு நிமிஷம் ஆகுமா,
அதுவும் மனப்பாடம் ஆயிடுச்சுன்னா வேகமா கடகட கடகடன்னு நம்ம பாட்டுக்கு சொல்லிருவோம். ஆனா நான் உங்களுக்கு படிக்கும்போதே கொஞ்சம் பொறுமையா தான் படிச்சேன் வார்த்தைகளை பிரித்து அதனுடைய பொருளை உணர்ந்து நாம் படிக்கணும் என்னெல்லாம் சொல்றாரு
தகைமை சிவ ஞான முக்தி பரகதியும் நீ கொடுத்து அப்ப அதுக்கு மேல் உலக நலன் அதை தரக்கூடியவர் கிரியா சக்தி தெய்வ யானை அம்மையார் அப்போ உலக நலம் வேணுமே சகல செல்வ யோக மிக்கப் பெருவாழ்வு அதை தரக்கூடியவர்.
இச்சாசக்தி வள்ளியம்மை ரெண்டுத்துக்கும் தேவையான ஞானத்தை தரக்கூடியவர் ஞானசக்தி கையில வேலா இருக்கு, இது மூணும் யார்கிட்ட இருக்கு முருகன் கிட்ட இருக்கு
அப்ப இது எல்லாமே வேணும்னு நினைக்கிறவங்க என்ன பண்ணனும் அரை நிமிஷம் கண்ணை மூடிக்கோங்க எந்த முருகர் உங்களுக்கு பிடிக்குதோ இதுல கூட அவர் ரெண்டு முருகனை சொல்றார்,
அதிசயம் அநேகமுற்ற பழனிமலையில் இருக்கிற முருகனை நீ நினைச்சாலும் சரி திருப்பரங்குன்றத்தில இருக்கிற முருகனை நினைச்சாலும் சரி
நான் இன்னும் கூடுதலாக உங்களுக்கு பிடிச்ச முருகன் எது வேணாலும் நினைச்சுக்கோங்கன்னு சொல்றேன் எந்த முருகனா இருந்தாலும்,
சரி அரை நிமிஷம் கண்ணை மூடி வேற எதையும் மனசுல வைக்காதீங்க முருகனை கண்ணுக்கு முன்னாடி கொண்டு வாங்க
அவரை அப்படியே உங்களுடைய மனசுல நினைங்க முருகா என்னுடைய மனதில் இருந்து என்கிட்ட இருக்கக்கூடிய தீயவற்றை எல்லாம் நீக்கி உன் அடியாராய் வாழ்வதற்கு உண்டான நல்ல தகுதியை மட்டும் எனக்கு கொடு
அப்படின்னு நீங்க கேளுங்க இந்த திருப்புகழை படிங்க உங்கள் வாழ்க்கையில சகல செல்வ யோகங்களையும் முருகப்பெருமான் நிச்சயமாக அருளுவார்.
அற்புதமான பாடல் இந்த பாடல் இதை எல்லாருமே படிக்கலாம் முடிஞ்சவங்க உங்களுடைய நண்பர்கள் உற்றார் உறவினர்கள் எல்லாருக்கும் சொல்லி படிக்க சொல்லுங்க.
எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை எல்லாருக்கும் முருகப்பெருமானுடைய அருள் கிடைக்கும் அப்படின்னா, அதுவே ஒரு பெரிய மகிழ்ச்சி இல்லையா முருகப்பெருமானை இவ்வாறு நாம் வணங்கி அரை நிமிஷம் செலவு பண்ணுங்க சகல செல்வ யோகத்தோடு சந்தோஷமா முருகன் உங்களை வாழ வைப்பார்,
அப்படிங்கிறதை உங்கள் அனைவருக்கும் அன்போடு அறியத் தந்து இந்த பதிவை உங்களுடைய நண்பர்கள் உற்றார், உறவினர்களோடு கண்டிப்பா பகிர்ந்து கொள்ளுங்க
Also Read: திருப்புகழ்
Also Read: வேல் மாறல்
Also Read: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
Also Read: அருணகிரி நாதர் அருளிய கந்தர் அனுபூதி
Also Read: அறுபடை முருகன் அருட்பாமாலை