Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஆன்மீக தகவல்கள்பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அருமருந்து மந்திரம் வேல் மாறல் | Vel Maral reading benefits...

பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அருமருந்து மந்திரம் வேல் மாறல் | Vel Maral reading benefits & method

பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அருமருந்து மந்திரம் வேல் மாறல் | Vel Maral reading benefits & method

 

இன்னைக்கு நம்ம பார்க்க போறது வேல் மாறலினுடைய சிறப்புகளும் வேல் மாறலை எப்படி படிக்கணும் அதனுடைய பலன்கள் என்ன அப்படிங்கிற அனைத்து தகவல்களையும் இந்த பதிவுல தெரிந்து கொள்ளலாம்

நிறைய பேருக்கு வேல் மாறல்னா என்ன வேல் வகுப்புனா என்ன அதைஎப்படி படிக்கணும் அப்படின்னு சமீப காலமாக நிறைய கேள்வி நிறைய யோசனை இருக்கு

முதல்ல வேல் வகுப்புன்னா என்ன வேல் மாறல்னா என்ன அப்படிங்கறத தெரிஞ்சுக்கலாமா அருணகிரிநாத சுவாமிகள் நமக்கு திருப்புகழ் அருளிச் செய்தார்

திருப்புகழைப் போலவே அவர் அருளிச் செய்ததுதான் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி இப்படி நிறைய தொகுப்புகள் அதுல மணி மந்திர அவுஷத நூல் அப்படின்னு ஒரு மூன்று வகுப்புகளை நமக்கு சொன்னார் அவர் பல விருத்தங்களும் பாடியிருக்கிறார்

பல வகுப்புகளும் பாடியிருக்கிறார், அதுல மணி மந்திர அவுஷதமாக ஒரு மூன்று வகுப்புகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது

முதல்ல சீர்பாத வகுப்பு அப்படின்னு ஒரு வகுப்பு இது மணியாக நமக்கு சொல்லப்பட்டது அடுத்தது தேவேந்திர சங்க வகுப்பு

இரண்டாவது அது மந்திரமாக நமக்கு சொல்லப்பட்டது அடுத்தது மூன்றாவதாகத்தான் வேல் வகுப்பு இது அவுஷதமாக நமக்கு சொல்லப்பட்டது

அவுஷதம் அப்படின்னா என்ன மருந்து அப்படின்னு அர்த்தம் மருந்து எதுக்கு உண்டு நோய்க்கும் உண்டு பிறவி நோய்க்கும் உண்டு

ஆக நம் வாழ்க்கையில என்ன ஒரு பிரச்சனைனாலும் அந்த பிரச்சனைக்கு ஒரு மருந்து தேவை இல்லையா அந்த மருந்து அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த அழகான அற்புதமான வகுப்புதான் வேல் வகுப்பு

இந்த வேல் வகுப்பை தான் பின்னால ஒரு மந்திரத் தொகுப்பாக மாற்றணும் அப்படின்னு அருணகிரிநாத சுவாமிகள் மேல ரொம்ப விருப்பம் கொண்டவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் இந்த வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் என்ன பண்றாரு முருகப்பெருமானுக்கு இந்த வேல் வகுப்பை ஒரு மந்திரத் தொகுப்பாக மாற்றுகின்றார்.

அப்படி அருணகிரிநாத சுவாமி பாடிய வேல் வகுப்பினுடைய தொகுப்புகளை எடுத்துக்கொண்டு அதை முன்னும் பின்னுமாக மேலும் கீழுமாக மாற்றி மாற்றி மாற்றி மாற்றி அமைத்து 64 பாக்கள் அமைந்தது போல, ஒரு மந்திர நூலாக இந்த நூலை அவர் உருவாக்குகிறார் மொத்தம் வேல் வகுப்பிலே 16 பாடல்கள் உண்டு,

இந்த 16 பாடல்களையும் நான்கு முறை திருப்பித் திருப்பி போட்டால் எப்படி நாம படிக்கலாமோ அதுபோல மாற்றி மாற்றி போட்டு நமக்கு 64 பாடல்கள் வருவது போல அமைத்த ஒரு அழகான தொகுப்புதான் இந்த வேல் மாறல்,

அப்படிங்கறது சில பேர் கேக்குறீங்க வேல் வகுப்பு படிச்சாலும் ஒன்னாதான் இருக்கு வேல் மாறல் படிச்சாலும் ஒன்னாதான் இருக்கு அப்படின்னு முதல்ல இதற்கான வித்தியாசத்தை

நீங்க தெரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காக இதை நான் சொன்னேன் வேல் வகுப்பே தான் வேல் மாறல் வேல் மாறல்ல அது பலமுறை திரும்பத் திரும்ப திரும்ப திரும்ப நான்கு முறை மேலும் கீழுமாக இதுல சில பேர் கேக்குறீங்க,

இந்த வேல் வகுப்புல வந்து வரக்கூடிய வரிசை கிரமமாக வேல் மாறல்ல வரலையே அப்படின்னா இல்ல அவர் அதை மந்திரத் தொகுப்பாக வேறு வடிவத்தில் அதை மாற்றித் தந்தார்.

அதனால இந்த வேல் மாறல் அப்படிங்கறது ஒரு மிகப்பெரிய ஆற்றல் நிறைந்த அற்புதமான பதிகம் இது வேல் வகுப்பை இப்படியே படிச்சாலும் சரி அல்லது வேல் மாறலாக நீங்கள் இதை படித்தாலும் சரி வேலினுடைய

வலிமையும் வேலினுடைய ஆற்றலும் நமக்கு கிடைக்கும் முருகப்பெருமானுடைய கையில சாதாரணமா ஒரு ஆயுதமாக இருக்கக்கூடியது தானே வேலு அப்படின்னு யாரும் நினைக்கவே கூடாது

ஏன்னா முருகப்பெருமானுடைய ரூபமே இல்லாது வேலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஆலயங்கள் பல அமைத்து அந்த வேலை மட்டுமே வழிபாடு செய்து நம்முடைய முன்னோர்கள் நிறைய நமக்கு வேலின் சிறப்பை காட்டி இருக்கிறார்கள்

நம்முடைய நாட்டிலேயே பல கோவில்கள்ல நீங்க பார்த்தீங்கன்னா வேலை மட்டுமே மூலஸ்தானத்தில் வைத்து வழிபடக்கூடிய பல இடங்கள் உண்டு, அதே மாதிரி இலங்கை நாட்டிலேயும்

நீங்க பார்த்தீங்கன்னா வேலை மூலஸ்தானமாக வைத்து வழிபடக்கூடிய பல ஆலயங்கள் அப்படிங்கறது உண்டு வேல் என்பது மூலஸ்தானத்திலேயே இருந்து அனுக்கிரகம் செய்யக்கூடிய அளவுக்கு ஆற்றல் நிறைந்தது,

முருகப்பெருமானுக்கு மொத்தம் மூன்று சக்திகள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி இந்த இச்சா சக்தியாக வள்ளியும், கிரியா சக்தியாக தெய்வயானையும், ஞான சக்தியாக வேலாயுதத்தையும் சுவாமி வச்சிருக்கிறார்.

எதை செய்தாலும் ஞானம் என்பது வேணும் இல்லையா, ஞானம் இல்லாம எந்த வேலையும் நம்ம செய்ய முடியாது இல்லையா,

அப்போ அந்த ஞானமாகிய வேலுக்கு, மிக மிகப்பெரிய ஆற்றல் உண்டு சிவபெருமான் சூரசம்ஹாரத்திற்கு முருகனை புறப்படு அப்படின்னு சொல்லுகிறபோது அவர் 11 கரங்களுக்கும் 11 ஆயுதம் கொடுத்தார்,

மொத்தம் முருகப்பெருமானுக்கு 12 கை அதுல ஒரு ஆயுதம் மட்டும் இல்லாம ஒரு கை மட்டும் சும்மா இருந்துச்சு தேவேந்திரனுக்கு ஒரு பயம் வந்துருச்சு, எங்க இந்த முருகன் இந்த ஒரு கையை அபயவரதமா காட்டிட்டாருன்னா

என்ன பண்றது அப்படின்னு பயந்து நடுங்கி நிற்கிறபோது சிவபெருமான் என்ன பண்ணாரு உலகத்தில் இருக்கிற அனைத்து சக்திகளையும், அண்டம் முழுவதும் நிறைந்து இருக்கக்கூடிய அனைத்து ஆற்றல்களையும், ஒன்றாக திரட்டி அதை

அப்படியே ஒரு வார்ப்புல ஊத்தி எடுத்தா, எப்படி தக தக தக தகன்னு மின்னும் ஒரு ஆயிரம் கோடி சூரியன் சரியா ஆயிரம் கோடி, சூரியன் ஒரு சூரிய பிரகாசத்தையே நம்மளால தாள முடியல ஆயிரம் கோடி சூரியனை பிடிச்சு அதை அப்படியே உருக்கி அதை ஒரு வேல் மாதிரி ஒரு அச்சு பண்ணி,

அதுல ஊத்தி வார்த்தை எடுத்தா எப்படி தக தக தகன்னு மின்னுமோ அப்படி மின்னியது அந்த வேல் அந்த வேலை அப்படியே தூக்கி முருகன் கையில சிவபெருமான் கொடுக்கல, அதை யார் கையில தெரியுமா கொடுத்தாரு அம்பாள் கையில கொடுத்தார், கொடுத்து என்ன தெரியுமா சொன்னாரு இந்த வேலை சக்தி வேலாக நீ முருகனிடத்தில் கொடு

அப்படின்னு அவர் சொல்ல அம்பாள் வாங்கி அந்த வேல்ல தன்னுடைய சக்தியை அவள் சேர்க்கிறாள் சேர்த்த பிறகு அந்த வேலை முருகப்பெருமானுக்கு அம்பாள் தான் கொடுக்கிறார்,

அப்ப அந்த வேல்ல என்ன ஆற்றல் இல்லன்னு நினைக்கிறீங்க எல்லா ஆற்றல்களும் அந்த வேலுக்கு இருக்கிறது அது அழிக்கும், ஆயுதம் மட்டும் கிடையாது, அது காக்கும் பொருளும் கூட ஒரு ஆயுதம் அழிக்கத்தானே செய்யும் அது எப்படி காக்கும் அப்படின்னு நாம நினைக்கலாம் கத்தி இருக்குது அந்த கத்தியை வச்சு கொலையும் பண்ண முடியும் ஆனா அதே கத்தியை வச்சு ஆபரேஷனும் பண்ண முடியும் இல்லையா

அந்தப் பொருளை யார் பயன்படுத்துகிறார்கள் எந்த நோக்கத்திற்கு பயன்படுத்துகிறார்கள் அப்படிங்கறது மிக மிக முக்கியமானது,

வேல் என்பது பகைவர்களுக்கு அழிக்கும் பொருளாகவும், பக்தர்களுக்கு காக்கும் பொருளாகவும் இருந்து நம்மை அரணாக காக்கக்கூடியது.

அதனால்தான் முருகப்பெருமானுக்கு வேல் என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதம். முருகனை எங்கெல்லாம் நினைக்கிறோமோ அங்கெல்லாம் வேலை நினைக்காம நம்மளால இருக்கவே முடியாது முருகன்னாலே வேல், மயில், சேவல் இது எல்லாமே நமக்கு ஞாபகம் வரும்.

அப்பேற்பட்ட அழகான வேலை நாம பூஜை செய்யலாமா, வீட்ல வச்சுக்கலாமா இது நிறைய பேருக்கு ஒரு கேள்வி இருக்கு

நான் இதுக்கு ஏற்கனவே நான் பதில் சொல்லி இருக்கிறேன், ஆனா சமீப காலமாக நிறைய பேருக்கு இந்த வேலை பற்றிய ஒரு ஆராய்ச்சி இந்த வேலை பற்றி நிறைய விஷயங்களை நாங்க கேள்விப்படுறோம்

நிறைய விஷயங்கள் நாங்க படிக்கிறோம் இதெல்லாம் நாங்க வச்சுக்கலாமான்னா நான் எப்போதுமே நான் சொல்றது உண்டு வீட்டு அப்படிங்கறது நமக்கு ஒரு சக்தி என்ன இருக்கோ

எந்த அளவுக்கு நம்மளால அங்க வச்சு பராமரிக்க முடியுமோ அந்த அளவுக்கான பொருட்களை வச்சுக்கலாம் வேல் வச்சுக்கலாம் அப்படின்னு ஆள் உயரத்துக்கு கொண்டு போய் வீட்டுக்குள்ள நம்ம வேலை வச்சு பூஜை பண்ண முடியுமானா

முடியாது நமக்கு ஏற்றார் போல எளிமையா, சின்னதா நம்ம வச்சிக்கிற அளவுக்கு பூஜை பண்ணுகிற அளவுக்கு தகுதியான ஒரு வேலை நீங்க வச்சுக்கலாம் வேல்

கொஞ்சம் பெருசா இருக்கு இல்லைன்னா அந்த வேலினுடைய முனை என்பது ரொம்ப கூறியதாக இருக்கிறது

அப்படின்னா கண்டிப்பாக அதுல எலுமிச்சம் பழம் அப்படிங்கறது குத்தி வைக்கணும் நீங்க முருகப்பெருமானுடைய கோவில்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னா

வேல் சாத்தும்போது அதுல ஒரு எலுமிச்சம் பழம் வைப்பாங்க ஏதோ அது கூர்மையா இருக்குங்கறதுக்காக வைக்கிறது கிடையாது அதுல ரெண்டு விஷயம் அது ஒன்னு

ஆயுதம் அந்த ஆயுதத்தை நாம பயன்படுத்துகிற போதுதான் ஆயுதம் மற்ற நேரங்கள்ல அதை நாம காப்பாற்றுகிற பொருளாக பயன்படுத்துறோம் அதனால வெற்றிக்கனியை அந்த வேல் மேல நாம வைக்கணும்.

அப்படிங்கறது ஒன்னு இன்னொன்னு மேருகிரி என்கின்ற மலையை சிவபெருமான் வில்லாக வச்சிருக்கிறார், ஆனா முருகப்பெருமான் அதை எப்படி வச்சிருக்கிறார் தெரியுமா தன்னுடைய வேலுக்கு மேல ஒரு எலுமிச்சம் பழம் மாதிரி வச்சிருக்கிறாராம்

அப்ப அந்த வேலுக்கு எவ்வளவு ஆற்றல்ங்கிறத தெரிஞ்சுக்கணும்ல அதை காட்டுறதுக்காக தான் வேலுக்கு மேல ஒரு எலுமிச்சம் பழம் வைக்கணும் அப்படின்னு நமக்கு சொன்னாங்க எலுமிச்சம் பழம் வைக்கிற

அளவுக்கு வேல் இல்ல அப்படின்னா வேலுக்கு கீழேயாவது ஒரு எலுமிச்சம் பழம் வச்சுக்கோங்க வேலை நாம அன்றாடம் அபிஷேகம் பண்ணனுமா இது நிறைய பேருக்கு ஒரு கேள்வி வாய்ப்பு இருந்தா செய்யுங்க முடியலையா செவ்வாய்க்கிழமை இல்லைன்னா வெள்ளிக்கிழமை இல்லனா

ஞாயிற்றுக்கிழமை கூட நாம பண்ணலாம் பாலு தண்ணி அவ்வளவுதான் எளிமையா ஒரு அபிஷேகம் பண்ணி ஒரு மலர் போட்டு நாம ஒரு சந்தன குங்குமம் வச்சிட்டு வழிபாடு பண்ணலாம் இப்ப நிறைய பேர் கேட்பீங்க எங்களுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் வாங்கி வச்சு கும்பிடனும்னு ஆசையாதான்மா இருக்கு ஆனா வீட்ல அந்த அளவுக்கு வசதி

இல்லை தனி பூஜை அறை கிடையாது நாங்க ரொம்ப சின்னதா தான் நாங்க வச்சிருக்கிறோம் ஆனா முருகர் படம் இருக்கு அப்படின்னா முருகர் படத்துல வேல் இருக்கும் இல்லையா அந்த வேலுக்கு சந்தனம் குங்குமம் வைங்க ஒரு பொட்டு வைங்க முருகருக்கு ஒரு பூ போடுங்க

அந்த வேலை நினைச்சே நீங்க வழிபாடு பண்ணலாம் வாய்ப்பு இருக்குங்கிறவங்க சின்னதா வச்சுக்கோங்க எப்பவுமே ரொம்ப பெருசா பூஜை அறை என்பதோ நம்முடைய வழிபாடு என்பதோ ரொம்ப பெருசா காட்டணும் நிறைய காட்டணும். நிறைய அடிக்கடிக்கு வச்சுக்கணும் நிறைய நம்முடைய என்ன சொல்றது நம்முடைய ஆடம்பரத்தை நம்முடைய பக்தியை

எல்லாத்தையும் பெருசா நம்ம காட்டணும் அப்படின்னு பூஜை அறையில மட்டும் நாம நினைக்கவே கூடாது பூஜை அறைங்கிறது எளிமையா இருக்கணும்

பூஜை அறை அப்படிங்கறது சுத்தமா இருக்கணும் பூஜை அறை அப்படிங்கறது தெய்வீக தன்மையோட நிறைந்திருக்கணும்

அவரவர்களுக்கு என்ன முடிகிறதோ எளிமையா செய்யுங்க முடிஞ்சா சின்னதா ஒரு வேல் வச்சுக்கோங்க முடியலையா முருகர் படத்துல இருக்கிற வேலையே நீங்க ஒரு சந்தனம் குங்குமம் வச்சு தொட்டு கும்பிட்டுட்டு

இந்த வேல்மாலை படிங்க இதை பலரும் தினந்தோறும் நாம படிக்கலாமா அப்படின்னு கேக்குறீங்க படிக்கலாம் சிலருக்கு ஒரு கேள்வி இது

கொஞ்சம் பெருசா இருக்கே அப்ப வேல் வகுப்பு படிச்சா இதே பலன் கிடைக்குமா அப்படின்னா ரெண்டுமே ஒன்னுதான் நான் ஆரம்பத்திலேயே நான் சொல்லிட்டேன் ஒரு பிரச்சனையில இருக்கிறீங்க அந்த பிரச்சனையிலிருந்து நீங்க வெளிய வரணும்

அப்படின்னு நினைச்சா ஒரு வைராக்கியமா ஒரு 48 நாள் நீங்க எடுத்துக்கிட்டு அந்த 48 நாளும் இந்த வேல் மாறலை பெருசா இருக்கு பிரச்சனையும் பெருசுதான அப்ப அதற்கு தகுந்த மாதிரி நாம இந்த வேல் மாறலை பாராயணம் பண்ணலாம்,

இல்ல வேல் வகுப்பு அன்றாடம் நாங்க படிக்கிறோம் பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லமா எளிமையா எங்களுக்கு வேலை ரொம்ப பிடிச்சிருக்கு

முருகனை பிடிச்சிருக்கு அதனால நாங்க இதை படிக்கிறோம் அப்படின்னாலும் நீங்க வேல் வகுப்பையும் நீங்க படிக்கலாம் ரெண்டும் ஒரு சேர நமக்கு பலன் தரக்கூடிய ஒரு அதி அற்புதமான உன்னதமான மந்திரத் தொகுப்பு.

Also Read: வேல் மாறல் – வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்

Also Read: திருப்புகழ்

Also Read: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

Also Read: அருணகிரி நாதர் அருளிய கந்தர் அனுபூதி

Also Read: அறுபடை முருகன் அருட்பாமாலை

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments