Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஆன்மீக தகவல்கள்கடன், உடல் நோய், மனநோய் & எதிரிகளால் ஏற்பட்ட ரணங்களைப் போக்கும் ரணபலி முருகன் |...

கடன், உடல் நோய், மனநோய் & எதிரிகளால் ஏற்பட்ட ரணங்களைப் போக்கும் ரணபலி முருகன் | Ranabali Murugan

இன்றைக்கு முருகப்பெருமான் எழுந்தருளி அருள் புரியக்கூடிய ஒரு அதி அற்புதமான திருக்கோயிலை பத்திதான் உங்களோடு பகிர்ந்து கொள்ளனும் அப்படின்னு நான் நினைச்சேன் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய ரணபலி முருகர் அப்படிங்கிற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளி அருள் புரிகின்ற ஒரு அதிசக்தி வாய்ந்த கோவில்தான் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்

இந்த ஆலயத்தை பற்றிய தகவல்களோடு இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய அதிசயமான வேலின் சக்தியை பத்தியும் இன்னைக்கு இந்த பதிவுல நாம தெரிந்து கொள்ளலாம் வாங்க,

முருகப்பெருமானுக்கு எத்தனையோ கோடான, கோடி திருநாமங்கள் உண்டு அருணகிரி நாதர்ட்ட போய் முருகனுக்கு எத்தனை நாமங்கள் இருக்கு அப்படின்னு கேட்டா அவர் ஒரே வரியில சொல்லிடுறார், வெகுகோடி நாம சம்பு குமாரா நமோ நம அப்படின்னு சொல்றார் எத்தனை கோடி நாமங்கள் அவருக்கு இருக்கு, அப்படின்னு நாம எண்ணி அளவிடவே முடியாது, அப்படி நாமங்கள் படைத்த அந்த முருகப்பெருமானுக்கு இப்படி ஒரு நாமமா

அப்படின்னு யோசிக்கிற அளவுக்கு ரொம்ப பயங்கரமா இருக்குது இல்ல, இந்த பெயரை கேட்கும்போதே ரணபலி முருகர் அப்படின்னு பேரு இந்த ரணபலி முருகருடைய ஆலயம் அநேகமான தெரியாத ஒரு ஆலயமாகவே இருக்கு,

இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் அதிசக்தி வாய்ந்த முருகராகவும் இங்கே இருக்கக்கூடிய வேல் ஆற்றல் நிறைந்த அதாவது இயற்கையாகவே கடலில் இருந்து நமக்கு கிடைத்த ஒரு அற்புத பொக்கிஷமாகவே விளங்கக்கூடிய ஒரு வேலாகவும் இது நமக்கு விளங்குகின்றது.

இந்த கோயில் எப்படி வந்தது இந்த வேல் இவங்களுக்கு எப்படி கிடைச்சது இந்த ஆலயம் உருவான வரலாறு என்ன அப்படிங்கறத முதல்ல தெரிஞ்சுக்குவோமா,

ராமநாதபுரத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் மன்னன் கிழவன் சேதுபதி அப்படிங்கிற மன்னர், அந்த கிழவன் சேதுபதியினுடைய ஆட்சியில அவருக்கு நிறைய தளபதிகள் இருந்தாங்க அதுல ஒரு தளபதியாக இருந்தவர்தான் சாத்தப்பன் அப்படிங்கிற பெயருடைய வைரவன் சேர்வை என்று அழைக்கப்படுகிற ஒரு தளபதி அவருக்கு முருகர் மேல ரொம்ப ரொம்ப பக்தி அதி தீவிரமான முருகபக்தர் அப்படின்னே சொல்லணும், முருகப்பெருமானை திருச்செந்தூர்ல வந்து தரிசனம் பண்ணலன்னா அவருக்கு அன்னைக்கு பொழுதே போன மாதிரியே இருக்காது.

எப்பெல்லாம் அவருக்கு முருகனை பார்க்கணும் அப்படின்னு தோணுதோ அப்பெல்லாம் நேரா திருச்செந்தூருக்கு வந்துருவார் திருச்செந்தூர் முருகன் மேல அவருக்கு அப்படி ஒரு பிரியம், அப்படி ஒரு காதல் யாருக்கு தான் அவரை பிடிக்காது செந்தில் ஆண்டவரை பிடிக்காதவங்கன்னு இந்த உலகத்துல யாராவது இருக்கிறாங்களா, அப்படி அந்த முருகன் மேல அதி தீவிரமான பக்தி கொண்ட அந்த வைரவன் சேர்வைக்கு ஒரு நாள் திருச்செந்தூருக்கு போக முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது,

பொதுவாவே நம்ம ஒரு விஷயத்தை தொடர்ந்து பண்ணிட்டு இருக்கிறோம் நடுவுல அதை செய்ய முடியல அப்படின்னா, உடனே நமக்கு மனசுல ரொம்ப கவலை ஆயிடும் இத்தனை வருஷம் இதை நான் தொடர்ந்து பண்ணேனே, இப்ப என்னால இதை பண்ண முடியாம போயிடுச்சே, என்ன காரணமோ தெரியலையே இறைவன் இதை ஏற்றுக்கொள்ளலையா இல்ல என்னுடைய வினையின் பலனா அப்படின்னு ரொம்ப புலம்புவோம் இல்லையா, அது மாதிரி வைரவன் சேர்வையும், என்னடா இது முருகா இப்படி ஒரு சோதனை, உன்னை வந்து என்னால பார்க்கவே முடியலையே ஏன் இப்படி அப்படின்னு ரொம்ப புலம்பி அழுது இறைவனிடத்திலே முறையிட்டுவிட்டு தூங்கிட்டார் அன்றைக்கு இரவு முருகப்பெருமான் அவருக்கு கனவுல வந்து காட்சி கொடுக்கிறார்.

காட்சி கொடுத்து சொல்றார் அப்பா இனிமே என்னை தேடி திருச்செந்தூருக்கு, நீ வர வேண்டாம் உன்னை தேடி நானே வந்திருக்கிறேன், அப்படின்னு சொல்றார் என்னை தேடி முருகா நீயே வந்திருக்கிறியா, எங்க இருக்கிற நான் உன்னை எப்படி பார்க்கிறது எப்படி கும்பிடுறதுன்னு ஆவலோடு இவர் முருகன்ட்ட கேட்கிறார்.

அப்போ முருகப்பெருமான் சொல்றார் தேவிப்பட்டம் கடற்கரையில கண்ணாமுனை அப்படிங்கிற ஒரு பகுதி இருக்கு அந்த கண்ணாமுனை என்கின்ற பகுதியில நான் அடியில கடலுக்கு அடியில இருக்கிறேன் வள்ளி, தேவசேனா சகிதராக ஒரு அற்புதமான ஆற்றல் நிறைந்த வேலோடும் நான் அங்க இருக்கிறேன்.

நான் எந்த இடத்துல இருக்கிறேனோ, அந்த இடத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டு உனக்கு அடையாளம் காட்டும், கருடனுக்கு நேரா கீழே எலுமிச்சம் பழங்கள் மிதக்கும், அந்த இடத்துல தான் நான் இருக்கேன், நீ வந்து என்னை எடுத்துட்டு வந்து வச்சு கோவில் கட்டி, கும்பிடு அப்படின்னு அவருக்கு முருகப்பெருமான் கனவுல உரைத்தார், இந்த கனவை கண்ட உடனே அவருக்கு எப்படி இருக்கும், யோசிச்சு பாருங்க தூக்கமே இல்லை அவருக்கு எப்படா பொழுது விடியும், அப்படின்னு பார்த்துக்கிட்டே உட்கார்ந்து இருக்கிறார் போய் எங்க இருக்கிறார் முருகர்னு கண்டுபிடிக்கணும் இல்லையா,

ஆவலோடு அவர் உட்கார்ந்து இருக்கிறார், இதே மாதிரி ஒரு கனவு உத்தரகோச மங்கையினுடைய குருக்களாக விளங்கக்கூடிய ஆதிமங்களேஸ்வர குருக்கள் அப்படிங்கறவருக்கும், இதே கனவு தோணுது உத்தரகோச மங்கையிலிருந்து அவரும் வர்றார், ரெண்டு பேரும் சந்திக்கிறாங்க முருகப்பெருமான் ரெண்டு பேருக்கும் இந்த கனவை உணர்த்தி இருக்கிறாரே, அப்ப முருகன் இங்கதான் இருக்கிறார், நம்ம போய் தேடுவோம் அப்படின்னு கடல்ல மூழ்கி தேடக்கூடிய ஆட்களோடு ரெண்டு பேருமே கிளம்பி பண்ணி போறாங்க, போனா கடல்ல தேடுறாங்க தேடுறாங்க அவங்களால கண்டுபிடிக்கவே முடியல உள்ள போறவங்களுக்கெல்லாம் ரத்த காயம் ஏற்படுகிறது உடம்பெல்லாம் ரன்னகளம் ஆகுது அப்படின்னு சொல்லுவோம் இல்லையா,

அது மாதிரி ஏதோ போர்க்களத்துல போய் சண்டை போட்டவங்க மாதிரி உடம்புல காயங்களோடு அவங்க திரும்பி வராங்களே தவிர யாரு கையிலேயும் அந்த முருகரும் கிடைக்கல, வள்ளிதேவ சேனையும் கிடைக்கல, வேலும் கிடைக்கல, எல்லாருக்கும் ரொம்ப வருத்தம், இவருக்கு ரொம்ப ரொம்ப வருத்தம் வைரவன் சேர்வைக்கு முருகன் நான் இருக்கேன்னு சொன்னாரே, நான் கண்ட கனவு பொய் இல்ல நிஜம் நான் கண்ட கனவு பொய் இல்லை என் மனசுல தோன்றினது அப்படின்னா

அதே கனவு எப்படி குருக்கள் ஐயாவுக்கும் வரும் அவருக்கும் இதே கனவு வந்திருக்கே அப்ப முருகன் என்ன சொன்னாரு நீ வந்து என்னை எடுன்னு தானே சொன்னாரு நான் ஆள அனுப்புனது நான் தப்பு நானே கடல்ல குதிக்கிறேன், நானே தேடுறேன் அப்படின்னு அவரே கடல்ல குதிக்கிறார்,

அவரே கருடன் வட்டமிட்ட அந்த இடத்திலும், எலுமிச்சம் பழம் மிதந்த அந்த இடத்திலும் உள்ள போய் அவர் தேடுறார், இன்றைக்கு நாம் வழிபடக்கூடிய முருகனும் வள்ளிதேவ சேனையும் அந்த கடல்ல இருந்து தான் கிடைக்கிறாங்க, அதோட ஒரு அதிசக்தி வாய்ந்த வேலும், அந்த கடல்ல இருந்து வருதுங்க எவ்வளவு அற்புதமா இருக்கு தெரியுமா

அந்த வேல் அந்த வேலை பார்த்தவுடனே எல்லாருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம் ஏன்னா இதுவரை பார்த்திராத அதிசய அமைப்புல, அந்த வேல் இருக்கு, வேல்னா எப்போதும் வேல் மட்டும்தான் நம்ம பார்ப்போம், ஆனா வேலுக்குள்ளே முருகனுடைய உருவம் பொறித்த மாதிரி ஒரு அற்புதமான வேல், இன்னைக்கும் அதுபோல ஒரு வேல் வேற எந்த இடத்திலேயும் நம்மளால பார்க்கவே முடியாது, அவ்வளவு அற்புதமான வேல் சத்ரு சம்ஹார வேல் அப்படின்னு முருகப்பெருமான் சொன்னதற்கு இணங்க அந்த வேலும் அமைந்திருக்குது.

இப்படி எல்லா பொக்கிஷங்களோடும் கரைக்கு வரார் மன்னரிடத்தில் நடந்ததெல்லாம் சொல்றாங்க மன்னர் பார்த்தார் தான் இங்கே அரண்மனையை புதுப்பித்து அரண்மனைக்கு செலவு செய்யணும்னு, வச்சிருந்த பொற்காசுகள் எல்லாவற்றையும் இந்த கோயில் கட்டி முருகப்பெருமானை அங்க வச்சு ஸ்தாபனம் பண்ணி கும்பாபிஷேகம் பண்ணிடுறார்.

சுவாமிக்கு பேர் பேரு சிவ சுப்பிரமணியர் அப்படின்னு பேரு, ஆனா இந்த முருகனை கடல்ல தேடுனவங்க எல்லாம் ரணங்களோட திரும்பி வந்ததுனால அன்னையிலிருந்து இந்த முருகனுக்கு ரணபலி முருகர் அப்படிங்கிற ஒரு சிறப்பு பெயரும் அமைந்திருக்குது, சரி இந்த பெயர் முருகனுக்கு புதுசா அப்படின்னு கேட்டா கிடையவே கிடையாது,

அது எப்படிங்க புதுசா ஒரு பெயர் முருகனுக்கு வந்துருமா அருணகிரிநாதர் சொல்லாம ஒரு பெயர் முருகனுக்கு எங்காவது நமக்கு இருக்குமா, இருக்காது நிறைய பேருக்கு தெரியுமான்னு எனக்கு தெரியல, அருணகிரிநாத சுவாமி முருகப்பெருமானை வாழ்த்தியது போலவே தன்னுடைய திருப்புகழ்ல அம்பாளை பத்தியும் பாடியிருக்கிறார், அதே மாதிரி சிவனைப் பத்தியும் பாடியிருக்கிறார், விநாயகரையும் பாடியிருக்கிறார், பெருமாளையும் பாடியிருக்கிறார் அதுல அம்பாளை பத்தி பாடுகிறபோது அநேகமான திருப்புகழ்ல ரணகுலக்காரி அப்படிங்கிற ஒரு நாமத்தை அவர் பயன்படுத்தி இருப்பார்,

கனக சபை மேவும் எனது குருநாதன் அப்படின்னு ஆரம்பிக்கக்கூடிய சிதம்பரம் திருப்புகழ்ல ரணகுலக்காரி அப்படின்னு அம்பாளை வர்ணனை செய்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள் அதே மாதிரி நினது திருவடி அப்படின்னு ஆரம்பிக்கிற ஒரு திருப்புகழ்ல ரண பைரவி அப்படின்னு அம்பாளை சொல்றார் அம்பாளுக்கு அப்ப பேர் என்ன இரணகுலக்காரி அதாவது ரணகுலக்காரி அந்த ஈனாவை நாம மறைச்சு தான் சொல்லுவோம் அதனால ரணகுலக்காரி அப்படின்னு அம்பாளுக்கு பேர்

அம்பாளுக்கு அப்படி ஒரு பேர் இருந்தா முருகனுக்கு ஏன் இப்படி ஒரு பேர் வரக்கூடாது அதனால முருகனுக்கு இங்கே ரணபலி முருகர் அப்படிங்கிற பேரு அம்பாளோடு தொடர்பு பட்டு தான் வந்திருக்கிறது அப்படிங்கறத திருப்புகழை படிக்கிறபோது

நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அதிசக்தி வாய்ந்த அற்புதமான ஆற்றல் நிறைந்த சத்ரு சம்ஹார வேல்.

அப்படி அதிசக்தி வாய்ந்த தாக விளங்கக்கூடியது தான் இந்த சத்ரு சம்ஹார மூர்த்தி வேல் இந்த முருகரை பத்தி கேட்கும்போதே இவரை பார்க்கணும்னு எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்கு, அப்படின்னு உங்களுக்கு தோணும்

சில பேருக்கு இந்த கோவில் பத்தின தகவலும் தெரிஞ்சிருக்கும் இப்படிப்பட்ட அழகான கோயில் எந்த ஊர்ல இருக்கு தெரியுமா பெருவயல் அப்படிங்கிற ஒரு கிராமத்துல தான் இருக்கு ஆதியில இந்த ஊர் நிறைய வயல்கள் சூழ்ந்து இருந்ததுனால பெருவயல் அப்படிங்கிற பெயர் அமைந்திருக்கிறது ராமநாதபுரத்தில் இருந்து போனீங்கன்னா சுமார் ஒரு 14 km இருக்கும்.

தேவிப்பட்டினத்திலிருந்து போனீங்கன்னா ஒரு ஏழுல இருந்து 8 km தூரத்துல அமைந்திருக்கக்கூடியதுதான் இந்த பெருவயல் அப்படிங்கிற கிராமம் ரணபலி முருகர் கோவில் அப்படின்னு நீங்க கூகுள் மேப்ல போட்டாலே நேரா கோவிலுக்கே போய் சேர்ந்துரலாம்.

இந்த கோயில் பார்த்தீங்கன்னா ரொம்ப அழகா அற்புதமா ஒரு கிராமத்துக்குள்ள இருக்கிற ஒரு கோயிலை போய் நம்ம வழிபாடு பண்ணோம்னா எப்படி இருக்கும் அந்த மாதிரி அமைப்புல இருக்கக்கூடிய ஒரு கோயில் இந்த கோவில்ல வெறும் முருகரை மட்டும்தான் நம்ம பார்க்க போறோம் அப்படின்னு நினைச்சுட்டு போனீங்கன்னா உங்களுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்துக் கொண்டிருக்கும்.

ஏன்னா இங்க ராமநாதர் சுவாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் இங்கே எழுந்தருளி இருக்கிறாங்க, ஏன்னா இவருக்கு வைரவன் சேர்வைக்கு இந்த ராமநாத சுவாமி மேலயும் தீராத காதல் உண்டு அதனால அவர் என்ன பண்ணாரு இந்த கோவில்லையே முருகனோடு சேர்த்து, ராமநாத சுவாமி அதே மாதிரி பர்வதவர்த்தினி அம்பாளையும் அங்க பிரதிஷ்டை பண்ணி இருக்கிறார்,

இந்த கோவிலுக்கு உண்டான ஒரு தனிப்பெரும் சிறப்பு என்ன அப்படின்னா, இங்க வந்து வழிபாடு பண்ணா, திருச்செந்தூருக்கும், ராமேஸ்வரத்துக்கும் சென்று ஒரே நேரத்துல வழிபாடு பண்ணினா என்ன பலனோ, அந்த பலன் இந்த ஒரே முருகர் கோவில்ல வந்து வழிபாடு பண்ணினா கிடைக்கும்.

அப்படிங்கறதுதான் இந்த கோவில்ல திருச்செந்தூர் மாதிரியே திருவிழாக்கள் நடைபெறுகிறது,

அப்படிங்கறதுதான் மேலும் சிறப்பான ஒரு விஷயம்னே சொல்லலாம் மாசியில எப்படி திருச்செந்தூர் கோவில்ல சிகப்பு சாத்து, பச்சை சாத்து, வெள்ளை சாத்து இருக்கோ,

அதே மாதிரி இங்கேயும் மாசியில சிகப்பு, பச்சை, வெள்ளை சாத்தி முருகப்பெருமான் எழுந்தருளி அருள் புரிகிறார்.

இங்க உற்சவமாகவே அது கொண்டாடப்படுகிறது. அதே மாதிரி சஷ்டி எப்படி ரொம்ப விசேஷமானதோ, இங்கேயும் அந்த சஷ்டி ரொம்ப ரொம்ப விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

குறிப்பா இந்த சத்ரு சம்ஹார வேலோடு அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த சத்ரு சம்ஹார வேல் இருக்கு பார்த்தீங்களா, அதை நீங்க பார்த்தீங்கன்னாலே தெரியும் அவ்வளவு ஆற்றல் நிறைந்த ஒரு வேல் அந்த வேலுக்குள்ள முருகரை நீங்க பாருங்க, எவ்வளவு அழகா ஒரு காலை மடிச்சு எவ்வளவு அற்புதமா உட்கார்ந்து, இருப்பார் தெரியுமா,

இது மாதிரி ஒரு வேலினுடைய அமைப்பை எங்குமே நம்மளால பார்க்க முடியாது, அப்படிங்கறத அந்த வேலை நாம பார்க்கும்போதுதான் நமக்கு உள்ளத்துல தோன்றும்.

ரணபலி முருகர் அப்படிங்கிற இந்த பேரை கேட்கும்போதே மனசுக்குள்ள கொஞ்சம் ஒரு யோசனையா இருக்கு, அப்படின்னு நீங்க நினைக்கலாம் அன்னைக்கு அவங்களுக்கு ரணமானதுனால, இவருக்கு ரணபலி முருகர் அப்படின்னு பேரா அப்படின்னா கிடையாது நம்முடைய வாழ்க்கையில

நமக்கு ஏற்படக்கூடிய கடனை அடைத்து கடன் பிரச்சனையிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடிய ஒரு தெய்வமாகவும், இந்த முருகப்பெருமான் விளங்குகிறார் அதேபோல உடல்ல ஏற்படக்கூடிய நோய் பிரச்சனைகள், நோய் வந்தாலே உடம்பு என்னவா மாறிருது, ரணமாக மாறிப்போய்விடுகிறது.

அந்த ரணத்தில் இருந்து நம்மை காக்கக்கூடிய தெய்வமாகவும், இந்த முருகன் விளங்குகிறார், மனத்தில் ஏற்படக்கூடிய ரணங்கள் மனசுல எவ்வளவு கவலை சில பேர் சொல்லுவாங்க, அப்படியே எனக்கு மனம் ரணமா போயிடுச்சுங்க, அவ்வளவு துன்பம் இருக்கு அப்படின்னு சொல்றோம் இல்லையா,

அப்படி மனதில் ஏற்படக்கூடிய எல்லா வகையான துன்பங்களையும், போக்கக்கூடிய முருகனாக இந்த முருகப்பெருமான் விளங்குகிறார், இது இல்லாம பில்லி, சூனியம் ஏவல், செய்வினை இதுல எல்லாம் எங்கள் வாழ்க்கையில நிறைய துன்பம் வந்துருச்சு அப்படின்னு சொல்றாங்க இல்ல,
அது அத்தனையும் வேரோடு நீக்கக்கூடிய ஒரு அதிசக்தி வாய்ந்த முருகனாக இவர் விளங்குகிறார்.

அதனால்தான் இங்க இருக்கக்கூடிய அந்த வேலுக்கு பேர் பாருங்க சத்ரு சம்ஹார வேல் அப்படின்னு சொல்றாங்க அப்ப எதிரிகள் கிட்ட இருந்து நம்மை காக்கக்கூடிய ஒரு அதிசக்தி வாய்ந்த வேலாகத்தான், இங்கே இந்த வேலும் விளங்கிக் கொண்டிருக்கு.

அப்போ வேலும் சரி முருகனும் சரி அதிசக்தி வாய்ந்த அற்புத தெய்வமாக இந்த கோவில்ல எழுந்தருளி அருள் புரியுறாங்க, இந்த கோவில்ல இருக்கக்கூடிய முருகப்பெருமானை நாம போய் தரிசனம் பண்ணினோம்னா, நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய ரணங்கள் எல்லாம் நீங்கி, ஒரு சுகமான ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அப்படிங்கறது, எல்லாருக்கும் நிச்சயமாக அமையும். அப்படிங்கறது நிதர்சனமான உண்மை.

இதை கேட்கக்கூடிய முருக பக்தர்கள் எத்தனையோ முருகப்பெருமானுடைய கோயிலுக்கு போறீங்க, ஆறுபடை முருகன் கோயிலுக்கு போறீங்க, அதே மாதிரி பல்வேறு மாநிலங்கள்ல பல்வேறு மாவட்டங்கள்ல இருக்க கூடிய

முருகப்பெருமானையும் போய் வழிபாடு பண்றீங்க, எல்லாரும் என்ன கேட்டா ஒரு முறையாவது இந்த ரணபலி முருகர் கோவிலுக்கு போகணும் ரொம்ப சக்தி வாய்ந்த இந்த ரணபலி முருகரை போய் ஒரு முறை நீங்க வழிபாடு பண்ணி பாருங்க,

உங்களுடைய வாழ்க்கையில எவ்வளவு மாற்றங்கள் நிகழ்கிறது அப்படிங்கறத நீங்க அனுபவித்த பிறகு அதை உங்களைச் சார்ந்தவர்களுக்கு நீங்க சத்தியமா சொல்லுவீங்க, ஏன்னா முருகப்பெருமானை நம்பிக்கையோடு இந்த திருத்தளத்திலே வந்து யார் வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் அவர்களுக்கு நிதர்சனமா கருணை காட்டக்கூடிய சக்தி வாய்ந்த தெய்வம்,

அதனால இந்த கோயிலுக்கு எல்லாரும் ஒருமுறை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு போயி, இங்க இருக்கக்கூடிய முருகனை வழிபாடு பண்ணுங்க, வேலை வழிபாடு பண்ணுங்க, முருகப்பெருமானுடைய அருளால, எல்லாருக்கும் எல்லா நலனும் கிடைக்கணு,ம் அப்படின்னு நானும் ரன்னபலி முருகரை உள்ளன்போடு பிரார்த்தனை செய்து மகிழ்கின்றேன்,

இந்த பதிவை உங்களைச் சார்ந்த நண்பர்கள், உற்றார், உறவினர்கள், முருக பக்தர்களுக்கெல்லாம் கண்டிப்பா பகிர்ந்து கொள்ளுங்கள்.

Also Read: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

Also Read: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

Also Read: முருகப் பெருமானின் அறுபடை வீட்டிற்கான திருப் புகழ்

Also Read: ஆன்மீக தகவல்கள்

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments