முருகனின் இந்த தரிசனம் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துவித பிரச்சினைகளும் நீங்கும் | முருகா
முருகப்பெருமானைப் பற்றிய சிறப்புகளையும் முருக வழிபாட்டை முறையாக நாம எப்படி செய்தால் என்னென்ன பலன்களை பெற முடியும், யாமிருக்க பயம் ஏன் அப்படிங்கிற இந்த தாரக மந்திரத்தை நமக்கு தந்த நம்முடைய சொந்தக் கடவுள் கந்தக் கடவுளை இந்த அழகான பதிவின் வாயிலாக தொடர்ந்து நாம சிந்தனை செய்யலாம்,
முருகனை பத்தி உங்களுக்கு எடுத்துட்டு வந்திருக்கிற தலைப்பு என்ன அப்படின்னா விஸ்வரூப தரிசனம் சில நேரங்கள்ல வாழ்க்கையில நமக்கு பிரச்சனைகள் வருது அந்த பிரச்சனை சின்னதா வந்துட்டு சின்னதா போயிடுச்சு அப்படின்னா அந்த பிரச்சனை பத்தியும் நம்மளுக்கு கவலை இல்லை
நமக்கு கடவுளை பத்தின நினைப்பும் நிறைய வர்றது இல்லை ஆனா சில நேரங்கள் வாழ்க்கையில சில பிரச்சனை எடுக்கும் பாருங்க
விஸ்வரூபம் அப்படி விஸ்வரூபமா பிரச்சனை நம்ம முன்னாடி நிற்கும்போது நமக்கு கை காலு மனசு எல்லாம் சோர்ந்து போயி ஏன்டா வாழ்றோம்
அப்படிங்கிற நிலைமைக்கு நம்ம ஆளாகி எங்கடா போறது யார் காலடா பிடிக்கிறது அப்படின்னு தெரியாம அல்லாடிட்டு இருந்தா
அப்போ நமக்கு சுவாமி தான் முருகப்பெருமான் தான் நம்மளை காக்கும் கடவுளாக நமக்கு விளங்கக்கூடியவர்
அவருடைய விஸ்வரூபத்தை பத்தியும் அந்த விஸ்வரூபத்தினுடைய தரிசன சிறப்புகளை பத்தியும் தான் இந்த பதிவுல உங்களுக்கு நான் சொல்லப்போறேன்.
முருகப்பெருமானுடைய ஆலயங்கள்ல காலையில நடைபெறக்கூடிய தரிசனத்துக்கு விஸ்வரூப தரிசனம் அப்படின்னு பேரு சில கோவில்கள்ல விஸ்வரூபம்னே எழுதி போட்டிருப்பாங்க.
சில கோவில்கள்ல திருவனந்தல் அப்படின்னு எழுதி போட்டிருப்பாங்க.
இது கோவிலுக்கு கோயில் மாறுபடும், இப்ப முருகப்பெருமானுடைய கோவில்களை நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னா திருச்செந்தூர்ல விஸ்வரூப தரிசனம் அப்படின்னே சொல்லி நாம பார்க்க முடியும்
பழனியிலையும் விஸ்வரூப தரிசனம்னு பார்க்கலாம்,
ஆனா பழமுதிர்ச்சோலை போனீங்கன்னா திருவனந்தல் பூஜை அப்படின்னு அந்த பூஜைக்கு பேரு
உங்க ஊர்ல ஒரு முருகர் கோயில் இருக்கா அங்க இருக்கிற முருகப்பெருமான் கோவில்ல கூட காலையில முதன்முதல்ல நம்ம சுவாமியை பார்க்கிற அந்த தரிசனத்துக்கு பேர்தான் விஸ்வரூப தரிசனம் அப்படின்னு பேரு சரி இந்த விஸ்வரூப தரிசனம்னா என்ன அதை பத்தி ஏன் இப்ப சொல்லணும்னு நான் நினைச்சேன் அப்படின்னா அதுக்கு ஒரு காரணம் உண்டு
ஒரு அன்பர் ஒருத்தர் ஒரு பிரச்சனைன்னு சொன்னார் அப்ப அவருக்கு நான் சொன்னேன் நீங்க உங்க ஊர்ல
பக்கத்துல இருக்கிற முருகர் கோயிலுக்கு போங்க காலையில முதன் முதல்ல இந்த விஸ்வரூப தரிசனத்தை பாருங்க, முருகப்பெருமான் கிட்ட இந்த பிரச்சனையை சொல்லுங்க சரியாயிடும் உடனே அவர் கேட்டாரு அப்படின்னா என்னன்னே எனக்கு தெரியாதே,
அப்படின்னாரு இந்த மாதிரி நிறைய பேரு விஸ்வரூபம்னா என்னன்னே தெரியாது தெரியாது தெரியாதுன்றாங்க அதனாலதான் ஓ தெரியாமலே இன்னும் நிறைய பேருக்கு இருக்கு அதை நாம சொல்லணும்,
அப்படிங்கறதுக்காக தான் விஸ்வரூபம் என்றால் என்ன அப்படிங்கறத நான் இப்போ உங்களுக்கு தெரியாதவங்களுக்கு தெரியப்படுத்துறேன் முருகப்பெருமான்
தன்னுடைய அவதாரத்துல விஸ்வரூப தரிசனம் அப்படிங்கறத கந்தபுராண நூல்ல நம்ம படிக்கும்போது சில இடங்கள்ல, அவர் நமக்கு காட்டுகிறார் தேவர்களுக்கு தான் யார் என்பதை புரிய வைப்பதற்காக விஸ்வரூபமாகி காட்டுறாராம்மா,
ஏன்னா தேவர்கள் மனசுல அதுவும் குறிப்பா தேவேந்திரன் மனசுல ஒரு சந்தேகம் இருந்தது.
சிவபெருமானுடைய சக்தி இல்லாத, இன்னொரு சக்தி என்னை அழிக்க முடியாது அப்படின்னு வரம் வாங்கி இருக்கிற சூரபதுமன் கிட்ட ஒரு சின்ன குழந்தையை முருகப்பெருமானை அனுப்புறாரே சிவபெருமான் இவர் எப்படி நம்மள காப்பாத்திருவாரு, அப்படிங்கிற ஒரு எண்ணம் இருந்தது.
அவர் முருகனை எப்படி பார்க்கிறார் ஏதோ ஒரு குட்டி குழந்தை சின்ன பையன் அப்படின்னு நினைச்சு பார்க்கிறார்.
இந்த எண்ணம் தேவர்களுக்கும் இருந்தது, அதனால சுவாமி என்ன பண்ணாராம் தேவாதி, தேவர்கள் எல்லாம் தான் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒரே உருவமாக விஸ்வரூபமாக அவர் காட்சி தருகிறாராம்
அந்த விஸ்வரூப தரிசனத்தை வீரபாகுதேவருக்கும், முருகப்பெருமான் காட்டுகிறார் வீரபாகுதேவர்னா யாரு அப்படின்னு தெரியாதவங்களுக்காக நான் சொல்றேன் வீரபாகுதேவர் முருகப்பெருமானின் உடைய துணைவர்கள்ல தம்பிமார்கள்ல ஒருத்தர்
நவீரர்கள் ஒன்பது பேர் முருகனுக்கு தம்பி, லட்சத்தி ஒன்பது பேர் முருகனுக்கு துணைவர்கள் அந்த லட்சத்தி ஒன்பது பேர்ல ஒன்பது பேர்ல ஒருத்தர் இந்த வீரபாகுதேவர், அந்த வீரபாகுதேவர்தான் முருகப்பெருமானுடைய தூதுவராக சூரபதுமனை பார்ப்பதற்கு வீரமகேந்திரபுரிக்கு போறார், அப்போ தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை வீரபாகுதேவர் மூலமாக இறைவன் காட்டினார்,
அவருக்காக இரண்டாவது ஆச்சா இன்னொரு முறை அதுதான் இருக்கிறதிலேயே ரொம்ப உயர்ந்த விஸ்வரூபம்னு சொல்லலாம் எங்க காட்டுறார் தெரியுமா, போர்க்களத்துல அதிலும் யாருக்கு காட்டுறார் தெரியுமா சூரபதுமனுக்கு காட்டுறாருங்க.
சூரபதுமன் போர்க்களத்துல வந்து முன்னால நிக்கிறார் முன்னால முருகன் எப்படி இருக்கிறாராம் குழந்தையா இருக்கிறாராம் சின்ன குழந்தை அதை கந்தபுராணத்தில் கச்சியப்பர் சொல்றபோது ரொம்ப, ரொம்ப அழகா சொல்வார் தண்டையும், சிலம்பும் மார்க்கும் சரணமும் தெரியக்கண்டான் அப்படின்னு சொல்லுவார்.
புண்டரன் நுதலும் மூன்று வரியில திருநீறு பூசி இருக்கிறாராம்மா கோல மார்பும் அழகான சின்ன மார்பு குட்டி உடம்பு அழகான முகம் அவருடைய முகத்தில் இருக்கக்கூடிய புன்னகை அந்த புன்னகை எப்படி இருக்குதாம் முண்டகம் மலர்ந்தது என்ன மூவிரு முகமும்
அந்த ஆறு முகமும் அழகா அப்ப பூத்த பூ மாதிரி இருக்குதாம்மா, இந்த குட்டி குழந்தையை பார்த்த உடனே சூரன் சொன்னான், முருகா உன்னோட எல்லாம் என்னால சண்டை போட முடியாது, நீ சின்ன பையன் நீ கிளம்பி போ, உன்னை கொன்னுட்டா உங்க அம்மா பார்வதி வேற அழுவா, அதனால நீ போ உங்க அம்மா கிட்ட போய் விளையாடு, அப்படின்னு சூரன் ரொம்ப இளக்காரமா பேசினான்.
முருகர் சிரிச்சிக்கிட்டே சொன்னாரு விளையாட தான்ப்பா வந்திருக்கிறேன் ஆனா எங்க அம்மா கூட இல்ல, உன்கூட இவ்வளவு சின்ன பையனா இருக்கிற ஏன் உயரத்துக்கு கூட,
நீ சமம் இல்லையே நீ எப்படி என் கூட விளையாடுவ, அப்படின்னு கேட்டவுடனே முருகப்பெருமான் சொன்னார் நான் யாருங்கிறதை உனக்கு காட்டுறேன்
அப்படின்னு விஸ்வரூப தரிசனம் எடுக்கிறாராம். போர்க்களத்துல விண் உலகத்தை தாண்டி சூரிய மண்டலத்தை தாண்டி அவருடைய சிரசு போய்க்கிட்டே இருக்கு
அவருடைய திருவடி எந்த பாதாளத்துக்கு போச்சுன்னே அவனுக்கு தெரியல, இதுக்கு மேல அவனால பார்க்கவே முடியல, அப்படி பார்க்க முடியாதவனுக்கு போர்க்களத்தில் இறைவன் ஞானக்கண்ணையும் கொடுக்கிறார், நான் யார் என்பதைப் பார் அப்படின்னு ஞானக்கண்ணை கொடுத்த உடனே சூரபதுமனுக்கு தாரதாரையா கண்ணீர் வருதாம்.
இந்த பெருமானையா நான் எதிர்த்தேன் இவரையா நான் குழந்தைன்னு சொன்னேன் இவரை வணங்கணும் இவரை நான் வாழ்த்தனும்,
இவருக்கு நான் தொண்டு செய்யணும், இவருக்கு பணிவிடை செய்யணும்னு, அப்படியே அவனுடைய மனம் கரைந்து விட்டது.
அவன் ஏற்கனவே சூரனாக பதுமனாக இருந்து முருகப்பெருமானை அடைய வேண்டும் என்று தவம் செய்தான், அந்த தவத்தின் பலனாக இப்ப விஸ்வரூப தரிசனத்தையும் ஞானக்கண்ணையும் கொடுத்து அதற்குண்டான பலனை நிறைவு செய்துட்டார்.
இப்ப சூரபதுமனாக வந்திருக்கிறான் இப்ப அவனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்கணும்ல அதனால முருகப்பெருமான் என்ன பண்ணாராம் அந்த ஞானக் கண்ணை அப்படி கொஞ்சம் அகற்றினாராம்,
அகற்றின உடனே சூரபத்மன் பார்த்தான் ஆஹா ஏதோ மாய வேலை செஞ்சு நீ என்னை ஏமாத்துற அப்படின்னு முருகப்பெருமானை மீண்டும் எதிர்த்தான் போர்க்களத்துல பகைவனுக்கு எம்பெருமான் விஸ்வரூப தரிசனம் காட்டினார்
அப்படின்னா எப்பேர்ப்பட்ட கருணையின் பிம்ப மானவர் முருகப்பெருமான் பக்தருக்கு இல்லைங்க பகைவனுக்கும், கருணை காட்டுவதில் நம் கந்தக் கடவுளைப் போல இணை வேற யாரையுமே சொல்ல முடியாது
அப்பேற்பட்ட முருகப்பெருமானுடைய விஸ்வரூப தரிசனத்தை நாம் அதிகாலையில இரவு சுவாமிக்கு அந்த பள்ளியேற பூஜை எல்லாம் நிறைவு பண்ணிட்டு அடுத்த நாள் காலையில வந்து அந்த கோவில் உடைய நடை திறப்பாங்க.
பொதுவா நம்ம கோவில்ல போய் வழிபாடு செய்கிற போது, அந்த இடத்தை நாம அனுபவிக்கணும் திருச்செந்தூர்ல நீங்க பார்த்தீங்கன்னா காலையில நடத்த பிறந்த உடனேயே பள்ளியறை பூஜை நடக்கும் அந்த பள்ளி எழுச்சி திருப்பள்ளி எழுச்சி முருகனுக்குன்னே பாடுவாங்க,
திருப்பள்ளி எழுச்சி முருகனுக்குன்னே பாடி முருகனை முருகா செந்திலாண்டவா எங்கள் குறையை தீக்க நீ எழுந்து வா வள்ளி தெய்வயானை சகிதராக விளங்குகிற பெருமானே எங்கள் துன்பத்திலிருந்து காப்பாற்று
அப்படின்னு திருப்பள்ளி எழுச்சி பாடி சுவாமி அப்படியே அங்கிருந்து வலமாக வந்து கோவிலுக்கு உள்ள போனதுக்கு அப்புறமா இரவு முதல் நாள் எப்படி வந்து நடை சாத்தும் போது அலங்காரத்தில் இருந்தாரோ அப்படியே காலையில
அவர் திறந்த உடனேயே சிரிச்ச முகமா அப்படியே கோடி சூரிய பிரகாசத்தோட நம்முடைய பிரச்சனை எல்லாம் நான் சரி பண்ணிடுறேன்
நான் இருக்கேன் அப்படின்னு சுவாமி காட்டுறார் பாருங்க அந்த தரிசனத்துக்கு தான் விஸ்வரூப தரிசனம் அப்படின்னு பேரு அது கோவில்ல
நேரம் அந்த நேரம் என்பது கோவிலினுடைய பூஜை நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறும் சஷ்டி காலத்துல ஒரு நேரம் இருக்கும் மற்ற காலத்துல ஒரு நேரம் இருக்கும் அதை நீங்க என்னங்கிறத பார்த்துட்டு போங்க ஒரு நாலு மணிக்கு
விஸ்வரூபம் அப்படின்னா நாலுல இருந்து அஞ்சரை மணி ஆறு மணி வரைக்கும் அந்த விஸ்வரூபம் அபிஷேகம் ஆகுற வரைக்கும் தொடர்ந்துகிட்டே இருக்கும் அந்த நேரத்துல நம்ம முருகப்பெருமானை பார்க்கிறபோது அவ்வளவு ஒரு அழகு அவ்வளவு ஒரு ஆனந்தம் அவ்வளவு ஒரு சந்தோஷம்.
எவ்வளவு பிரச்சனையா இருந்தாலும் அவன்ட்ட கொடுத்துடுங்க அவன் விஸ்வரூபமா நிற்கக்கூடியவன் என்ன சின்னதாக கூட கிடையாது எல்லா பிரச்சனையும் நான் எடுத்துக்கிறேன் நீ சந்தோஷம் சந்தோஷமா இரு அப்படின்னு அவர் நமக்கு பதில் சொல்லி நம்முடைய வாழ்க்கையில நமக்கு இருக்கக்கூடிய துன்பங்களை எல்லாம் நீக்கி
நம்மை மகிழ்ச்சியாக இன்பமாக வாழ வைப்பார் உண்மையான சரணாகதி உண்மையான அன்போடு அந்த நேரத்தில் அவனை நாம வழிபாடு பண்ணினோம் அப்படின்னா நிச்சயமாக
முருகப்பெருமானுடைய அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும் இதை ஏற்கனவே அனுபவித்து இருக்கிறீங்க அப்படின்னா உங்களுடைய அனுபவத்தை கீழ கமெண்ட்ஸ்ல சொல்லுங்க முருக பக்தர்கள்
அதை படிச்சு பார்க்கும்போது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும் வாய்ப்பு இருக்கிறவங்க இதுபோல உங்களுக்கு எந்த கோவில்ல
அந்த தரிசனம் கிடைக்கும் நீங்க எங்க இருக்கிறீங்க நீங்க அதுக்கு பக்கத்துல எந்த கோவில்ல இருக்கு அப்படின்னு பாருங்க
என்னைக்காவது ஒருமுறை முருகப்பெருமானை நாம இதுபோல தரிசனம் பண்ணி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாவற்றிலும் இருந்து நாம விமோசனம் அடைந்து முருகனுடைய
அருளை பரிபூரணமாக பெறணும் அப்படின்னு இந்த நேரத்துல உங்கள் அனைவருக்கும் அன்போடு
இந்த தகவலை அறியத் தருகிறேன் முருகப்பெருமானுடைய இந்த விஸ்வரூப தரிசனத்தை நாம தரிசனம் பண்ணினோம் அப்படினாலே நம்முடைய வாழ்க்கையில நமக்கு விஸ்வரூப வெற்றி அப்படிங்கறது கண்டிப்பாக கிடைக்கும்
அதுல எந்த மாற்றமும் நமக்கு கிடையாது முருகப்பெருமானுடைய திருவடியை நம்பிக்கையா நாம பிடிச்சு வாழ்க்கையில
எல்லா வகையான நன்மைகளையும் பெறணும் அப்படின்னு இந்த நேரத்துல உங்கள் அனைவருக்கும் அன்போடு அறிய தந்ததுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
Also Read: திருப்புகழ்
Also Read: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
Also Read: அருணகிரி நாதர் அருளிய கந்தர் அனுபூதி