முருகனின் தம்பியர்கள் யார்? நவ வீரர்கள் யார்? லட்சத்து 9 பேர்கள் யாவர்?
முருகப்பெருமானுடைய சகோதரர்களைப் பற்றி இன்னைக்கு இந்த பதிவுல பார்க்கலாம் வாங்க முருகப்பெருமானைப் பற்றியும் அவருடைய சிறப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஒரு அழகான பகுதியாக இந்த பகுதியை நம்ம துவங்கி இருக்கிறோம்
இன்னைக்கு நாம முருகனுக்கு தம்பிமார்கள் யாரெல்லாம் இருக்கிறாங்க, தம்பியா முருகனுக்கா அப்படிங்கிற ஒரு கேள்வி வரும் ஏன்னா முருகன் தான கடைசி பையன் அவருக்கு எப்படி தம்பி இருக்கும், அப்படிங்கிற ஒரு கேள்வியோட தான் உள்ள வந்திருப்பீங்க.
முருகப்பெருமானுடைய அவதாரத்தின் நோக்கமே சூரனை சம்ஹாரம் செய்வதற்கு ஒரு சம்ஹாரம் அப்படின்னா யுத்தத்துக்கு போகும்போது, அவருக்கு துணை
அப்படின்னு யார் இருப்பாங்க, உதாரணமா நம்முடைய நாட்டுச்சொல்லா சில விஷயங்கள் சொல்லுவாங்க வாகனம் உடையான் வழிப்பயணத்திற்கு அஞ்சான், நல்ல ஆடை உடையான் சபைக்கு அஞ்சான், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் அப்படின்னு சொல்லுவாங்க அப்போ ஒரு பெரும் படையை திரட்டிக் கொண்டு போயி சூரபத்மன் என்கின்ற ஒரு பெரிய அசுரனை அழிப்பதற்கு முருகனுடைய அவதாரம் நிகழ்ந்திருக்கிறது.
அப்படின்னா அந்தப் படைக்கு துணையாக தம்பிமார்கள் வந்திருப்பாங்க தானே, அந்த தம்பிமார்கள் யார் அப்படிங்கறத பத்தி தான் இன்னைக்கு நான் உங்களுக்கு சொல்லப்போறேன் சிவபெருமான் கிட்ட போய் தேவர்கள்
எல்லாரும் முறையிடுறாங்க எங்களுக்கு உன்னைப் போலவே, ஒரு குழந்தையை கொடு, அப்பதான் சூரபத்மனுடைய துன்பத்திலிருந்து நாங்கள் வெளிவர முடியும், அப்படின்னு சிவபெருமான் என்ன பண்றாரு தன்னுடைய உடைய நெற்றிக் கண்ணை திறக்கிறார், கண்ணை திறந்த உடனே அந்த அக்கினியை தாங்கிக் கொள்ள முடியாது எல்லாரும் ஓடுறாங்க, எல்லாரும் ஓடுகின்ற போது உமாதேவியாரும் ஓடுகிறார், சிவனில் சரி பாதிதான், ஆனாலும் அங்கு இப்படி ஒரு செயல் நடைபெறுகிறது, இது கடைசில தான் நமக்கு புரியும் ஏன் இப்படி நடக்குது அப்படின்னு அப்ப அம்பிகையும் பயந்து ஓடுவது போல் ஓடுகிறபோது அவளுடைய காலில்
அணிந்திருந்த நவரத்தினங்கள் நிறைந்த சிலம்பு, இந்த பாதச்சிலம்புன்னு சொல்றோம் இல்லையா, அந்த பாதில சிலம்பிலிருந்து நவரத்தினங்களும் தெரித்து சிதறி ஓடுகிறது, அப்படி சிதறிய அந்த நவரத்தினங்களையும், சிவபெருமான் தன்னுடைய கடைக்கண்ணினாலே பார்க்கிறார், ஒவ்வொரு ரத்தினங்களும் ஒவ்வொரு பெண்ணாக மாறுகிறது, ஒவ்வொரு பெண்ணாக மாறி ஒன்பது பெண்களும் நிற்கிறபோது, அந்த பெண்களை அருட்பார்வையினால் எம்பெருமான் பார்க்க அந்த ஒன்பது பெண்களும் கருவுறுகிறார்கள், இத பார்த்துக் கொண்டே இருந்த அம்பாளுக்கு கோபம் வந்தது, அந்த நவ சக்திகளையும் பார்த்து அம்பாள் சொல்லுகிறாள்
நீங்கள் பல காலம் இந்த கர்ப்பத்தை சுமக்கக் கடவது, அப்படின்னு ஒரு சாபம் கொடுத்தறார், இந்த கதை இப்படியே இதோட நிக்குது.
இங்க முருகப்பெருமானுடைய அவதாரம் நிகழ்கிறது, அத நம்ம நிறைய பார்த்திருக்கிறோம் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட கனலில் இருந்து 1008 இதழ் அடுக்கு தாமரையிலே முருகப்பெருமான் அழகானதொரு குழந்தையாக இந்த உலகிற்கு வருகிறார்.
கச்சியப்ப சிவாச்சாரியார் அருவமும், உருவமுமாகி, அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற சோதி பிழம்பு அது ஒரு மேனியாகி கருணைக்கு முகங்கள் ஆறும் கரங்கள் 12ம் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கே உதித்தனன் உலகம் உய்ய அப்படின்னு முருகனுடைய அவதாரத்தைப் பற்றி நமக்கு சொல்லிட்டார். இப்ப முருகன் அவதாரம் பண்ணிட்டார்.
இந்த நவசக்திகளும் தங்களுடைய கருவை சுமந்து கொண்டே இருக்கிறார்கள், நீண்ட நெடிய காலம் ஆகிறது, கருவில் இருக்கிற குழந்தை வளர்ந்து அவர்கள் சிவயோகம் செய்கின்ற அளவுக்கு பெரிய குழந்தைகளாக மாறிவிட்டார்கள், ஆனால் இன்னமும் அவர்களுக்கு பிரசவிக்க அனுமதி கிடைக்கவில்லை.
அப்போ இந்த ஒன்பது பேரும் போய் சிவபெருமான் பெருமானிடத்திலே முறையிடுகிறார்கள் சிவபெருமான் சொல்றார் இதை யார் கொடுத்தாரோ அவர்கிட்டயே போய் கேளுங்க.
அம்பாளே உங்களுக்கு கருணை செய்வாள் அப்படின்னு சொன்னதும் நவசக்திகளும் பராசக்தியை போய் வேண்டி சிரித்த முகத்தோட சந்தோஷமா பெண்களே ஆற்றலில் சிறந்த அரும்புதல்வர்களை பெறக்கடவது,
அப்படின்னு சொல்லி வரமளிக்கிறார் அப்படி அம்பிகையினுடைய அனுமதியைப் பெற்ற அந்த நவசக்திகளும் சென்று ஒன்பது குழந்தைகளை ஒவ்வொருவரும் ஈன்றெடுக்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தும் யார் யாரெல்லாம் அவதரிச்சாங்க அப்படின்னு பார்க்கலாமா
மாணிக்க வள்ளியிடமிருந்து வீரமிக்க வீரபாகுதேவர் தோன்றினார்.
மௌதீக வள்ளியிடமிருந்து வீரகேசரி தோன்றினார்
புஷ்பராக வள்ளியிடமிருந்து வீர மகேந்திரர் தோன்றினார்
கோமேதக வள்ளியிடமிருந்து வீர மகேஸ்வரர் தோன்றினார்
வைடூரிய வள்ளியிடமிருந்து வீரபுரந்தரர் தோன்றினார்
வைரவல்லியிடமிருந்து வீர ராக்கதர் தோன்றினார்
மரகத வள்ளியிடமிருந்து வீர மார்த்தாண்டரும், பவளவள்ளியிடமிருந்து வீராந்தகரும், இந்திர நீல வள்ளியிடமிருந்து வீரதீரரும் தோன்றுகிறார்கள்
இப்படி ஒன்பது வீரர்களும் நவவீரர்கள் என்கின்ற பெயரோடு ஒன்பது வகையான பெண்களிடம் இருந்த நவசக்திகளிடம் இருந்து பிறக்கின்றார்கள்.
இவர்கள் வருகிறபோதே அந்த பெண்களினுடைய வியர்வைகளில் இருந்து ஒவ்வொரு குழந்தையாக அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியும் ஒரு குழந்தையாக மாறி லட்சம் குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள்
அங்க ஒரு லட்சம், இவர்கள் ஒரு ஒன்பது லட்சத்தி பேரும் வந்து சிவபெருமான் முன்பு நிற்கிறார்கள் அப்போ சிவபெருமான் பார்த்தார் முருகப்பெருமானுக்கு சூரனை அழிப்பதற்கு படை இப்போதே தயாராகிவிட்டது.
லட்சத்தி ஒன்பது பேரும் நீங்கள் முருகனுக்கு துணைவர்களாக இருக்கக் கடவது. அப்படின்னு சொல்லி இந்த நவவீரர்களையும் அழைக்கிறார்.
ஒன்பது பேருக்கும் மிக அற்புதமான ஆயுதங்களை எல்லாம் கொடுத்து நீங்கள் முருகனுக்கு என்றும் துணைவர்களாக உடன் பிறந்த தம்பிகளாக இருந்து முருகப்பெருமானுக்கு என்றென்றைக்கும் காவலாக விளங்கக் கடவது அப்படின்னு சொல்லி ஆசீர்வாதம் செய்து அவர்களை அனுப்புகிறார்.
அந்த லட்சத்தின் துணைவர்களும் சென்று, முருகப்பெருமானை வணங்கி தங்களுடைய சகோதரனாக முருகப்பெருமான் அவர்களை ஏற்றுக்கொண்டு முருகப்பெருமானோடு அந்த லட்சத்தி ஒன்பது துணைவர்களும் வளர்கின்றார்கள்.
அப்படித்தான் முருகப்பெருமானுக்கு தம்பியர்கள் தோன்றினார்கள், இப்ப முருகப்பெருமானுக்கு தம்பிமார்கள் எவ்வாறு உருவானார்கள் அப்படிங்கறத நம்ம பார்த்துட்டோம்.
லட்சத்தி ஒன்பது துணைவர்கள் முருகப்பெருமானுக்கு அப்ப நீங்க யோசிச்சு பாருங்க எப்பேர்ப்பட்ட ஒரு அண்ணனாக இந்த தம்பிமார்களை எல்லாம் வழிநடத்தக்கூடிய ஒரு தலைவனாக அவர் அந்த படைக்களத்துல விளங்கி இருப்பார் அப்படிங்கறதை யூகிக்க முடியுதா.
இதுல வீரபாகுதேவருக்கு அப்படின்னு தனிப்பட்ட சிறப்பு நிறையவே இருக்கு முடிந்ததுன்னா உங்களுக்கு வீரபாகுதேவருடைய வழிபாடு அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய சிறப்புகளை பத்தி, ஒரு தனி பதிவாகவே உங்களுக்கு கொடுக்கிறேன். ஏன்னா வீரபாகுதேவர் அவ்வளவு சாதாரணமானவர் கிடையாது. வீரபாகுதேவர் தான் கந்தபுராணத்தினுடைய மிக முக்கிய கதாபாத்திரமாகிய காவியத் தூதராகவும் நமக்கு விளங்கியவர்.
இன்றைக்கும் வெற்றி வேல், வீரவேல் அப்படின்னு சொல்லி அந்த படையை நடத்திக் கொண்டு சென்றவர் யாரு அப்படின்னு பார்த்தீங்கன்னா வீரபாகுதேவர் தான்.
நாம அவரை ஏதோ சும்மா முருகப்பெருமானுக்கு ஒரு தம்பி, அப்படின்னு மட்டும் நாம நினைச்சுக்கிறோம்.
நான் ஒரே ஒரு உதாரணம் உங்களுக்கு நான் சொல்றேன் திருச்செந்தூருக்கு எவ்வளவோ பெயர் இருக்கு, ஆனா திருச்செந்தூருக்கு பழமையான பெயர்கள்ல ஒன்னு என்ன தெரியுமா வீரபாகு பட்டினம் அப்படின்னு அந்த ஊருக்கு பேரு ஏன்னா வீரபாகுதேவர்,
அந்த திருச்செந்தூரில் இருந்து தான் விஸ்வரூபம் எடுத்து இலங்கைக்கு போவதற்கு அதாவது சூரபத்மன் ஆட்சி செய்த வீர மகேந்திரபுரி என்கின்ற நகரத்துக்கு போறதுக்கு
இங்கிருந்து முருகனின் தூதுவராக புறப்பட்டார், திருச்செந்தூரிலிருந்து அவர் புறப்பட்டார். அது மட்டும் கிடையாது திருச்செந்தூர் கோவிலுக்கு நாம போறோம், முருகப்பெருமானை பார்க்கிறோம், செந்திலாண்டவரை தான் நம்ம பார்க்கிறோமே தவிர, அவரை சுத்தி இருக்கிற பல விஷயங்களை நம்ம கவனிக்கிறதே கிடையாது.
எல்லா கோவில்களிலும் சுவாமிக்கு முன்னாடி காவலாக சில பேரை நம்மளால பார்க்க முடியும், இப்ப சிவன் கோவிலுக்கு போறோம்னு வச்சுக்கோங்களேன் அங்க துவார பாலகர்கள் இருப்பாங்க,
அம்பாளுடைய கோயிலுக்கு போனா, துவார பாலகிகள் இருப்பாங்க இங்க முருகப்பெருமானுடைய கோவில்ல கூட ரெண்டு பேர் வாசல்ல நிப்பாங்க நம்ம என்ன நினைச்சுக்குவோம் ஓ முருகனுக்கு காவலா நிக்கிற துவாரபாலகர்கள் போல இருக்கு
அப்படின்னு பலரும் அவங்களை கண்டுக்கிறதே கிடையாது, அந்த ரெண்டு பேரும் யார் தெரியுமா ஒருத்தர் வீரமிக்க வீரபாகுதேவர் இன்னொருத்தர் வீர மகேந்திரர் இவங்க ரெண்டு பேரும்தான் முருகப்பெருமானுக்கு காவலாக நிற்கிறார்கள் செந்திலாண்டவருக்கு காவலாக அவர் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கக்கூடியவர் வீரபாகுதேவர் இத்தனை சிறப்பு பெற்றவரா வீரபாகுதேவர் அப்படின்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லையா
இதோட மட்டும் இல்லைங்க இப்போ சிவகோத்திரம், அப்படின்னு நாம சொல்றோம் அதே மாதிரி விஷ்ணு கோத்திரம் அப்படின்னு சொல்றோம், நிறைய கோத்திரங்கள் பத்தி நம்ம சொல்றோம் இல்லையா
அதுல கூட வீரபாகுதேவருக்குன்னே ஒரு கோத்திரம் இருக்கு, அந்த வீரபாகுதேவர் கோத்திரத்துக்கு கீழ பல பிரிவுகள் இருக்கு எல்லாருமே முருகனை தலைவனாக வழிபடக்கூடியவர்கள்,
முருகனை தலைவனாக வழிபட்ட வீரபாகுதேவர் தான் சேனாதிபதி அதாவது ஒரு படைக்கு ஒரு சேனையை வழிநடத்திச் செல்லக்கூடிய சேனாதிபதி எப்படி இருக்கணும் அப்படிங்கறதுக்கு
வீரபாகுதேவர் தான் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு,
அதனால முருகப்பெருமானுடைய வேலுக்கு இணையான ஆற்றல் அப்படிங்கறது வீரபாகுதேவர் கிட்ட இருக்கு,
அப்படிங்கறதுனாலதான் முருகப்பெருமான் வீரபாகுதேவரை தூதாக அனுப்புகிறார், நீ போய் சொல்லு அப்பதான் சூரபத்மனுக்கு தெரியும்.
அப்படின்னு அவர் வந்து முருகப்பெருமானை இடத்திலே அண்ணா முதலையும் மூர்க்கனும் கொண்டதை விடாது, சூரன் திருந்த மாட்டான்.
ஆகவே உங்கள் வேல் ஒன்றுதான் அவனுக்கு பதில் சொல்லும் வாருங்கள் யுத்தத்திற்கு புறப்படலாம்,
அப்படின்னு முருகப்பெருமானுடைய சேனைகளை எல்லாம் திரட்டிக் கொண்டு வெற்றி வாகையை
சூடி வருவதற்கு வித்திட்டவர் அப்படின்னா அது வீரபாகுதேவர் தான்,
அவர் முருகப்பெருமானுக்கு தம்பி அதனால முருகனைப் பற்றி முருக வழிபாட்டைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கக்கூடிய நமக்கு அவருடைய படைத் தளபதியாக அவருக்கு பிரியமான தம்பியாக ஆக இருக்கக்கூடிய வீரபாகுதேவரை பத்தியும் நவீரர்களைப் பத்தியும் லட்சத்தொன்பது வீரர்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்காக தான் இன்னைக்கு இந்த தகவலை உங்களோட பகிர்ந்து இருக்கிறேன்.
முருகன் உங்களுக்கு இஷ்டமான கடவுளா முருகனை நீங்க ரொம்ப விருப்பமா கும்பிடுறீங்களா அப்போ வீரபாகுதேவரையும் உள்ளன்போடு வழிபாடு பண்ணுங்க.
அவருடைய கருணையும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த முருகன் அடியார்கள் அன்பர்கள் எல்லோருக்கும் இதை வந்து ஷேர் பண்ணுங்க, நிறைய பேருக்கு வீரபாகுதேவர்,
இவ்வளவு சிறப்பு இருக்குதா அப்படிங்கறது தெரியாது எல்லாருமே தெரிஞ்சுக்கட்டும் முருகப்பெருமானுடைய தம்பினா என்ன சும்மாவா அதனால முருகப்பெருமானுடைய அற்புத ஆற்றல்களை சிந்திக்கக்கூடிய நமக்கு தொடர்ந்து
பக்தி நியூஸ்
இணைய தளத்தில் நிறைய முருகனைப் பற்றிய, முருகன் சார்ந்த தகவல்களையும் நாம தெரிந்து கொள்ளலாம்.
Also Read: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
Also Read: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
Also Read: முருகப் பெருமானின் அறுபடை வீட்டிற்கான திருப் புகழ்
Also Read: ஆன்மீக தகவல்கள்