கார்த்திகை சோமவார விரதம் 2024 – விரத முறை | கார்த்திகை மாதம் செய்ய வேண்டியவை | Somavara viratham
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சோமவாரத்துல எப்படி நாம விரதம் இருக்கணும் சோமவார விரதத்தினால் நமக்கு என்னவெல்லாம் பலன்கள், அப்படிங்கிற அனைத்து தகவல்களையும், இந்த பதிவுல தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க,
சிவபெருமானை வழிபடக்கூடிய அஷ்ட விரதங்களிலே மிக முக்கியமானது ஒரு விரதமாக விளங்கக்கூடியது தான் இந்த சோமவார விரதம் சோமவாரம்
அப்படின்னா என்னங்கிறதை முதல்ல தெரிஞ்சுக்கலாம் திங்கட்கிழமைக்கு சோமவாரம் அப்படின்னு பெயர் சோமனாகிய சந்திரன், சிவபெருமானை வழிபட்டு நலன் பெற்று தான் பெற்ற நலனை எல்லோரும் பெற வேண்டும் என்று இறைவனிடத்திலே விண்ணப்பம் செய்த நாள்.
அதனால் இந்த நாளுக்கு சோமவாரம் அப்படின்னு பெயர்,தமிழ்ல திங்கட்கிழமை அப்படின்னு நம்ம சொல்லுவோம் இந்த அழகான திங்கட்கிழமை அன்று சிவபெருமானுக்கு இருக்கக்கூடிய விரதங்கள்,
அஷ்ட விரதங்களிலே ஒன்றாக நமக்கு சொல்லப்பட்டிருக்கு பலரும் வாரம்தோறும் வரக்கூடிய எல்லா மாசத்திலேயும், வாரம்தோறும் வரக்கூடிய திங்கட்கிழமையில சிவபெருமானுக்கு விரதம் இருப்பாங்க,
அப்படி எங்களால ஒரு ஆண்டு முழுவதும் இருக்க முடியல அப்படின்னா, ஒரு ஆண்டுல வரக்கூடிய கார்த்திகை மாதத்தில் நமக்கு கிடைக்கின்ற ஐந்து சோமவாரங்களை பயன்படுத்தி அந்த ஐந்து நாட்களும் விரதம் இருந்தோம் அப்படின்னா மிக அற்புதமான பலன்கள் நமக்கு கிடைக்கும் முதல்ல என்ன கிடைக்கும் அப்படிங்கறத தெரிஞ்சுக்கிறதுக்கு தான் இன்னைக்கு எல்லாருக்குமே ரொம்ப ஆர்வமா இருக்கு,
இதை செய்தா நமக்கு என்ன பலன் கிடைக்கும், இந்த வழிபாடு பண்ணினா நமக்கு இது கிடைக்குமா, இத்தனை நாள்ல இதை நாம செய்து கொள்ள முடியுமா அப்படிங்கிற ஒரு கேள்வி வந்துருச்சு,
நம்ம மனசுலயும் சில விஷயம் தோணும் இல்லையா இது நடக்காது நமக்கெல்லாம் இது கிடைக்குமா நமக்கெல்லாம் இப்படி ஒரு செயல் நடந்துருமா,
நம்ம வாழ்க்கையிலும் இப்படி ஒன்று கைகூடுமா அப்படின்னு நாமே நம்முடைய மனதில் நடக்காது, கிடைக்காது அப்படின்னு
நினைச்ச காரியங்கள் கூட இந்த சோமவார விரதம் இருப்பதனால் நடக்கும். அப்படிங்கறத மனதுல தீர்மானமா நீங்க பதிவு பண்ணிக்கோங்க
அப்படியே நீங்க தெரிஞ்சுக்கோங்க இந்த சோமவாரத்தில் எவ்வளவு வலிமை இருக்கிறது எவ்வளவு சிறப்பு இருக்கிறது.
அப்படிங்கறத அதுமட்டுமில்ல திருமணத்திலிருந்து குழந்தை பெயரிலிருந்து நீண்ட காலமான நோயிலிருந்து விடுதலை அடையனும்
அப்படின்னு எந்த பிரார்த்தனையை நாம வச்சாலும் அந்த பிரார்த்தனை முழுவதுமாக நிறைவேறக்கூடிய ஒரு அழகான விரத நாள் அப்படிங்கறதுதான் இந்த சோமவார நாள் சோமவாரமாகிய
இந்த திங்கட்கிழமையில சிவபெருமானுடைய வழிபாடு எவ்வளவு சிறப்புக்குரியதோ அதேபோல முருகப்பெருமானுடைய வழிபாடும் சிறப்புக்குரியது சிவபெருமான் வேற
முருகப்பெருமான் வேற, அப்படின்னு நம்ம பார்க்கிறதே இல்லை செம்மான் மகளை திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல் அற என்றதும் அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேனே அப்படின்னு அருணகிரிநாத சுவாமிகள் நமக்கு சொல்றார்
எப்படி சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் இல்லையோ அதுபோல முருகப்பெருமானுக்கும் இறப்பும், பிறப்பும் கிடையாது. சிவனே முருகன் முருகனே சிவன் அப்படின்னு என்னுடைய குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமி அவர்கள் அநேக முறை சொல்லி நம் எல்லோருடைய மனதிலும் பதிந்து போன ஒரு விஷயம்.
அப்போ முருகப்பெருமானுடைய வழிபாட்டுக்கும் இந்த கார்த்திகை சோமவாரம் மிக மிக விசேஷமானது.
இந்த ஆண்டு நமக்கு எத்தனை சோமவாரங்கள் வருகிறது அதுல எப்படி நாம விரதம் இருக்கணும் அப்படிங்கிற தகவலை இப்ப முதல்ல பார்த்துட்டு வந்துருவோம்
16/11/2024 நமக்கு கார்த்திகை மாதம் துவங்கும் தொடங்குகிறது.
15/12/2024 கார்த்திகை மாதம் நமக்கு நிறைவடைகின்றது,
இதுல 18/11/2024, 25/11/2024, 2/12/2024, 9/12/2024 இந்த நான்கு சோமவாரமும் கார்த்திகை மாதத்திலேயே நமக்கு அமைந்திருக்கிறது.
கடைசி சோமவாரமாக மார்கழி ஒன்று அன்று வரக்கூடிய 16/12/2023 நான்கு என ஐந்து சோமவாரங்கள் இந்த ஆண்டு நமக்கு வந்திருக்கு.
பொதுவா சோமவார விரதம் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா, கார்த்திகை மாதத்தில் வரக்கூடியது நான்காகத்தான் இருக்கும், ஏன்னா ஒரு மாசத்துல நான்கு வாரங்கள் அப்படிங்கறதுதான் நமக்கு ஒரு கணக்கா வரும், ஆனா இந்த கடைசி சோமவாரம் என்பது மார்கழி மாதத்தில் வரக்கூடியதை கணக்கிட்டு தான் எடுப்பாங்க, இந்த ஆண்டு ரொம்ப தள்ளி எல்லாம் போகல ஒரே ஒரு நாள்தான் அதனால மார்கழி ஒன்றாம் தேதி அன்றே நமக்கு கடைசி.
சோமவாரம் அமைந்திருக்கிறது. அதனால இந்த ஆண்டு ஆண்டும் நமக்கு ஐந்து சோமவாரங்கள் அப்படிங்கறது கிடைச்சிருக்கு.
இந்த ஐந்து சோமவாரங்களும் நாம் ஏன் சிறப்பாக எடுத்துக் கொள்கிறோம் அப்படின்னா சிவபெருமானுக்கு ஐந்து என்கின்ற எழுத்து மிக மிக விசேஷமானது.
அவருக்கு பஞ்சாக்ஷரன் அப்படின்னு பேர் அவருடைய எழுத்து ஐந்து எழுத்து அதனாலதான் சிவபெருமானை வழிபடக்கூடிய இந்த விரத நாள்ல ஐந்து திங்கட்கிழமைகளை எடுத்துக் கொள்வது மிக மிக சிறப்புக்குரியது.
சரி இப்ப திங்கட்கிழமை விரதம் சோமவார விரதம் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா என்ன இந்த மாதிரி இந்த விரதத்தை நம்ம ஆரம்பிக்கணும்.
விரதம்னு சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வர்றது, நான் எப்போதும் சொல்ற விஷயம்தான் நம்முடைய தேவைகளை பொறுத்து,
நம்முடைய உடல் வலிமையை பொறுத்து, நம்முடைய வயதை பொறுத்து, நம்முடைய வேலையை பொறுத்து உங்களுடைய விரதத்தை நீங்க அமைச்சுக்கோங்க.
உங்களுக்கு இளம் வயது கல்யாணம் ஆகணும், நல்ல மணவாழ்க்கை எனக்கு கிடைக்கணும்னு நினைக்கிறீங்களா,
பட்டினியோட விரதத்தை இருக்கலாம், சிலர் வந்து இல்லைங்க நாங்க வந்து உடல் ரீதியாக சில பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக்கிட்டு இருக்கிறோம்.
அதனால எங்களுக்கு விரதம் இருக்க முடியாது அப்படிங்கறவங்க பட்டினி இல்லாமல் ஒரு பொழுதாவது ஏதோ பால், பழம் அந்த மாதிரி எளிமையான உணவுகளாக, எடுத்துக்கொண்டு விரதத்தை எடுத்துக்கோங்க,
குழந்தைக்காக காத்திருக்கிறவர்களும் இந்த விரதத்தை எடுத்துக்கொள்ளலாம்.
நோய் உள்ளவர்களும், நோய் நீங்கணும் அப்படின்னு இந்த விரதத்தை எடுத்துக்கலாம். அதனால யாருக்கு என்ன முறையில எடுத்துக்கிறீங்களோ,
அந்த மாதிரி இந்த விரதத்தை முதல்ல தீர்மானம் பண்ணிக்கோங்க,
திங்கட்கிழமை அன்று விரதம் இருக்கிறோம், அப்படிங்கறதுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவே நிறைய சாப்பிட்டு வச்சுக்குவோம்,
திங்கட்கிழமை வந்து நம்ம விரதம் இருக்க போறோம் அப்படிங்கிற எண்ணம் கூட ஒரு சிலருக்கு இருக்கு,
அது ரொம்ப ரொம்ப தவறு ஞாயிற்றுக்கிழமை,
இரவே நீங்க என்ன பண்ணனும்னா எளிமையான உணவுகள் தான் எடுத்துக்கணும். திங்கட்கிழமை காலையில எழுந்து தலைக்கு குளிச்சிட்டு,
இதுல வேற நிறைய பேருக்கு ஒரு கேள்வி விரதம் இருக்கும்போது தலைக்கு குளிக்கணுமா தலைக்கு குளிக்கணுமான்னு,
அதுவும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பொறுத்து சைனஸ் இருக்கு எனக்கு தலைவலி பிரச்சனை இருக்கு எனக்கு வந்து ஒத்த தலைவலி இருக்கு,
மைக்ரேன் இருக்கு அப்படிங்கறவங்க, எல்லாம் மருத்துவர் சொல்றத கேளுங்க உடம்பு ஆரோக்கியமா இருக்குறவங்க தலைக்கு குளிச்சுக்கோங்க ஒன்னும் தப்பு இல்லை.
அதனால காலையில எழுந்த உடனே தலைக்கு குளிச்சிட்டு நம்ம வீட்ல இருக்கக்கூடிய சிவபெருமானுடைய திருவுருவப்படம் அல்லது லிங்கம் இருந்ததுன்னா லிங்கம் இல்ல முருகப்பெருமானை வழிபாடு பண்ண போறீங்கன்னா, முருகப்பெருமானுடைய திருவுருவப்படம் என்ன உங்ககிட்ட இருக்கோ, அதை எடுத்து வச்சுக்கோங்க எடுத்து வச்சுக்கிட்டு வில்வத்தால அன்னைக்கு சுவாமிக்கு அர்ச்சனை பண்ணனும்,
இந்த சோமவாரம் முழுவதும் யார் ஒருவர் வில்வா அர்ச்சனை செய்கிறார்களோ கோடி மலர்களால் இறைவனை அர்ச்சித்த பலன்
அப்படிங்கறது அவர்களுக்கு கிடைக்கும் மிக மிக சிறப்பு சிறப்புக்குரியது. வில்வா அர்ச்சனை முருகனுக்கும் வில்வத்தால் அர்ச்சனை பண்ணலாம் சிவபெருமானுக்கும் வில்வத்தால அர்ச்சனை பண்ணலாம்.
ஞாபகம் வச்சுக்கோங்க வில்வம் எங்களுக்கு ஒன்னு, ரெண்டு தான்மா கிடைச்சிருக்கு நாங்க வெளியூர் வெளி மாநிலத்தில் இருக்கிறோம்னா வேறு மலர்கள் கிடைச்சாலும் எடுத்துக்கோங்க,
தீபம் வந்து நெய் தீபம் எப்போதும் நான் சொல்ற மாதிரி ஒரு மண் விளக்குல நீங்க நெய் விட்டு பஞ்சு திரி போட்டு நீங்க தீபம் ஏத்தலாம் ஷடோண தீபம் இந்த நாள்ல ஏற்றுவதும் ரொம்ப ரொம்ப விசேஷமானது எப்படி,
ஷடோண தீபம் ஏத்தனும்னு உங்க எல்லாருக்குமே தெரியும், நான் படத்துலயும் காட்டுறேன், அதே மாதிரி ஷடோண தீபமும் நீங்க ஏத்திக்கலாம்.
இதுக்கு நெய்வேத்தியமா என்ன வச்சுக்கலாம், எளிமையா ரெண்டு வாழைப்பழம் வெத்தலை பாக்கு வச்சுக்கோங்க, ஆப்பிள் இருந்தா ஆப்பிள் வச்சுக்கோங்க, இல்லனா கல்கண்டு முந்திரி காய்ச்சின பால் தேன் கலந்து ஒரு டம்ளர்,
ஏதோ ஒரு பொருள் நெய்வேத்தியமா வச்சுக்கோங்க வச்சுக்கிட்டு என்ன பாராயணம் பண்ணனும் சிவ வழிபாடுன்னு சொன்ன உடனே நான் எப்போதும் முதல்ல சொல்றது சிவபுராணம் தான்
சிவபுராணத்தை நீங்க பாராயணம் பண்ண பண்ண மன அமைதி அப்படிங்கறது உங்களுக்கு நிறையவே கிடைக்கும். வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும் அதனால சிவபுராணம் பாராயணம் பண்ணுங்க,
கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணுங்க
திருப்புகழ் பாராயணம் பண்ணுங்க,
கந்தர் அலங்காரம் பாராயணம் பண்ணுங்க
என்னெல்லாம் உங்களுக்கு தெரியுதோ, அது எல்லாத்தையும் பாராயணம் பண்ணிட்டு சுவாமிகிட்ட உங்களுடைய விண்ணப்பத்தை வைங்க.
பெருமானே நான் இந்த ஒரு விஷயத்துக்காக நான் இந்த விரதத்தை எடுத்திருக்கிறேன். எனக்கு நிச்சயமாக இதை நீ நிறைவேற்றிக் கொடு அப்படின்னு பிரார்த்தனை பண்ணிட்டு அப்படியே உங்களுடைய விரதத்தை தொடருங்க
இந்த நெய்வேத்தியமா வச்ச பொருளை பாலை நாங்க எடுத்துக்கலாமானா எடுத்துக்கலாம் இப்ப உபவாசமா இருக்கு அப்படியே உங்களுடைய உபவாசத்தை தொடருங்க மாலை 6:00 மணிக்கு இப்ப எப்படி நாம சுவாமிக்கு வில்வ அர்ச்சனை பண்ணோம் மலர்களால் அர்ச்சனை பண்ணோம்.
அதே மாதிரி மாலையில ரெண்டு வில்வம் வச்சிட்டு திரும்பவும் மாலையில நெய் விளக்கு ஏத்தி ஆறு மணிக்கு மேல உங்களுடைய விரதத்தை பூர்த்தி பண்ணிக்கலாம் சிலர் வந்து சாதம் சாம்பார் வடை பாயாசம் வச்சு திங்க்கிழமை இலை போட்டு நாம இந்த விரதத்தை நிறைவு பண்றதுன்னு ஒரு வழக்கம் வச்சிருப்பாங்க
சிலர் டிபன் சாப்பிடுறதுன்னு ஒரு வழக்கம் வச்சிருப்பாங்க.
அப்படி டிபன் சாப்பிட போறீங்க அப்படின்னா சுவாமிக்கு ரெண்டு பழம் வச்சு நெய்வேத்தியம் பண்ணிடுங்க.
இல்ல நாங்க சாதம் படையல் போடுறோம் அப்படின்னா நீங்க படையல் போட்ட சாதத்தையே நெய்வேத்தியத்தையே நீங்க பிரசாதமா எடுத்துக்கிட்டு உங்களுடைய விரதத்தை பூர்த்தி பண்ணிக்கலாம்.
இது முதல் வார திங்க்கிழமை நீங்க ஆரம்பிக்க வேண்டியது. இதே மாதிரி ஐந்து வாரங்களும் தொடர்ந்து இருக்கணும்,
இந்த விரதம் இருக்கக்கூடிய காலத்துல கண்டிப்பா செய்ய வேண்டிய விஷயங்கள்,
அப்படின்னு ஒன்னு இருக்கு அது என்னன்னா தானம், அன்னதானத்தை நிச்சயமா இந்த கார்த்திகை சோமவாரம் அன்னைக்கு நீங்க செய்து கொண்டு விரதம் இருந்தால்தான் முழு பலனும் கிடைக்கும்.
ரெண்டு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க, மூணு பேருக்கு வாங்கி கொடுங்க, அஞ்சு பேருக்கு வாங்கி கொடுங்க, உங்களுடைய வசதிக்கு தகுந்த மாதிரி, அன்னதானம் பண்ணுங்க.
அது இந்த கார்த்திகை சோமவாரம் செய்யக்கூடிய அன்னதானம் இருக்கு பாருங்க அது சொல்லற்கு அரிய அற்புதமான பலன்களை தரக்கூடியது.
அதனால விரதம் இருக்கிறவங்க இதை மறந்துடாதீங்க,
இப்ப நிறைய பேரு பெண்களுக்கு அடுத்த கேள்வி வரும் முதல் சோமவார விரதம் இருந்தோமா, இரண்டாவது சோமவாரம் மாதவிளக்கு வந்துருச்சு நாங்க என்ன பண்றது பூஜை அறைக்கு போக வேணாம், விரதத்தை தொடர்ந்து கொள்ளுங்க, எங்களுக்கு கணவன், இல்லம்மா ஆனாலும் இந்த விரதத்தை நாங்க இருக்கலாமா அப்படின்னு எப்போதுமே நான் உங்களுக்கு சொல்றதுதான்மா பெண்கள் எப்பயுமே தெளிவா ஒரு விஷயத்தை மனசுல வச்சுக்கோங்க.
குடும்பம் நல்லா இருக்கணும், நம்முடைய பிள்ளைகள் நல்லா இருக்கணும், பேரப்பிள்ளைகள் நல்லா இருக்கணும், நான் நல்லா இருக்கணும் அப்படின்னு கடவுளிடத்தில் நீங்கள் வேண்டுவதற்கு எந்த தடையும் கிடையாது.
எந்த பூஜையும் நீங்க செய்யலாம். சுமங்கலி பூஜையை தவிர மத்த அனைத்து பூஜைகளையும் வழிபாடுகளையும் எல்லா பெண்களுமே செய்யலாம். உங்க குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் அப்படிங்கறது உங்களுக்குத்தான் தெரியும் அதனால எல்லா பெண்களுமே, இந்த விரதத்தை தாராளமா எடுத்துக்கலாம்,
குழந்தைங்க கூட இந்த விரதம் இருக்கலாமான்னு சில பேர் கேக்குறீங்க உங்க ஆரோக்கியத்தை பொறுத்து குழந்தைகளும் இந்த விரதத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இப்ப அஞ்சு சோமவாரமும் எங்களால விரதம் இருக்க முடியல, ஏதாவது ஒரு சோமவாரம் சொல்லுங்க, அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா நான் உங்களுக்கு எதை பரிந்துரை செய்வேன்.
அப்படின்னா கடைசி சோமவாரத்தை தான் நான் பரிந்துரை செய்வேன் ஏன்னா மத்த நாளும் இருக்கணும் முடியல அப்படின்னா கண்டிப்பா கடைசி சோமவாரமாவது இருந்து பாருங்க,
அது உங்களுக்கு நிச்சயமா நல்ல பலன்களை பெற்றுத்தரும் இதை ஞாபகம் வச்சுக்கோங்க, அதே மாதிரி இந்த கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டினுடைய வாசல்ல விளக்கேற்றி வைங்க.
அது வீட்டுக்கு ரொம்ப ரொம்ப நல்லது, இதற்கு விளக்கிடு மாதம் அப்படின்னு ஒரு பெயர் இருக்கு, அதனால தினந்தோறும் நிலைவாசலுக்கு வெளிப்புறத்துல நான் தெளிவா சொல்றேன்.
நிலைவாசலுக்கு வெளிப்புறத்துல ரெண்டே ரெண்டு மண் விளக்கு, சாதாரணமான நல்லெண்ணெய் ஊத்தி, பஞ்சு, திரி போட்டு தினந்தோறும் மாலையில ஏத்தி வைங்க.
அது ரொம்ப ரொம்ப விசேஷமான பலன்களை பெற்றுத்தரும்.
அதே மாதிரி இந்த கார்த்திகை மாதத்துல கோவில்கள்ல நடக்கக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்க.
சோமவாரத்தில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகம் மிக மிக சிறப்புக்குரியது. நீங்க வீட்ல லிங்கம் வச்சிருக்கிறீங்க அப்படின்னா, நீங்க விரதம் இருக்கிறபோது சுவாமிக்கு அபிஷேகம் பண்றோம் இல்லையா, பாலு, தேனு, தயிறு, சந்தனம் அப்படின்னு அதோட சங்குல கொஞ்சம் தீர்த்தம் வச்சு,
அதுல ஒரு ரூபாய் நாணயம் போட்டு, அதுல வந்து கொஞ்சம் மலர்கள் போட்டு, சிவாய நம அப்படிங்கிற நாமத்தை நாம ஒரு 108 முறை உச்சரித்து
அந்த சங்குல இருக்கிற தீர்த்தத்தை சுவாமிக்கு அபிஷேகம் பண்ணினோம், அப்படின்னா இந்த கார்த்திகை சோமவாரத்துல ரொம்ப ரொம்ப விசேஷமான பலன்கள் நமக்கு கிடைக்கும்.
அதே மாதிரி இந்த கார்த்திகை மாதத்துல உங்களால முடிஞ்ச அளவு விளக்குகள் வாங்கி கொடுங்க. கோவில்கள்ல கார்த்திகை தீபத்துக்கு விளக்கு வைப்பாங்க இல்லையா அது மாதிரி மண் விளக்கு உங்களால எவ்வளவு முடியுது
ஒரு பத்து விளக்கோ, 20 விளக்கோ ஏன்னா கோயில் முழுக்க விளக்கு வைப்பாங்க, அதனால ஒரு 20 விளக்கோ 30 விளக்கோ மண் விளக்கு வாங்கி கொடுங்க.
அது ரொம்ப ரொம்ப விசேஷமானது.
கார்த்திகை மாதத்தில் இது போன்ற தான, தர்மங்களை நாம் செய்கின்ற போது மேலும் நம்முடைய வேண்டுதலுக்கு அது வலிமை சேர்க்கும்.
இன்னும் இந்த கார்த்திகை சோமவாரத்தில் மௌன விரதம் இருப்பது அப்படிங்கறது ரொம்ப ரொம்ப விசேஷமானது.
வாய்ப்பு இருக்கு அப்படிங்கறவங்க சோமவாரத்துல மௌன விரதம் இருந்து பாருங்க அது அதி விசேஷமான பலன்களை நமக்கு கண்டிப்பாக பெற்றுத்தரும்.
இத்தனை சிறப்புக்குரியதா இந்த கார்த்திகை சோமவாரம் அப்படின்னு நீங்க மலைச்சு பாக்குறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயமும்,
நான் உங்களுக்கு சொல்லிடுறேன், திருவிளையாடல் புராணம், அந்த திருவிளையாடல் புராணத்துல சிவபெருமான் பாண்டிய மன்னர்களுக்கும் சரி சேர, சோழ மன்னர்களுக்கும் சரி, யாருக்கு பிரச்சனை வந்தாலும்,
அந்த பிரச்சனையிலிருந்து அவர்கள் வெளியே வரணும்னா சிவபெருமானே இருக்க சொன்ன விரதம், என்ன தெரியுமா இந்த கார்த்திகை சோமவார விரதம் தான்.
சிவனே ஒரு விரதம் இரு அப்படின்னு சொன்னாருன்னா அந்த விரதம் எவ்வளவு சிறப்புக்குரிய விரதமாக இருக்கும்.
அப்படிங்கறத நீங்க முடிவு பண்ணிக்கோங்க. அதனால இந்த கார்த்திகை மாதம் எவ்வளவு சிறப்புக்குரியது, இதுல என்னெல்லாம் செய்யணும், அப்படிங்கறதையும் பார்த்தோம், அதோட சேர்த்து கார்த்திகை மாதத்தில் நமக்கு வரக்கூடிய ஐந்து சோமவாரங்களையும் எப்படி நாம வழிபாடு பண்ணனும்,
அப்படிங்கறதையும் நாம பார்த்தோம், கண்டிப்பா இதுல உங்களுக்கு ஏற்ற சோமவாரம் என்ன அப்படிங்கறத தீர்மானம் பண்ணி என்ன கேட்டா
முடிஞ்சா ஐந்து சோமவாரமும் இருங்க இல்லைன்னா, கடைசி சோமவாரமாவது இந்த விரதத்தை கண்டிப்பா கடைபிடிங்க, இதை உங்களுடைய
நண்பர்கள் உற்றார் உறவினர்களோடு எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்க.
Also Read: அறுபடை வீடு
Also Read: திருப்புகழ்