கார்த்திகை தீபம் 2024 – ஏற்றும் நேரம், முறை, எண்ணிக்கை, விரத முறை & முக்கியத்துவம் | Karthigai Deepam
இன்னைக்கு நம்ம பார்க்கப்போறது கார்த்திகை தீபத் திருநாளைப் பற்றிய சிறப்பு பதிவுதான் தீபத் திருநாள் அன்னைக்கு எப்படி விரதம் இருக்கணும், என்ன வழிபாடுகள் செய்யணும், என்ன பதிகங்கள் படிக்கணும், அப்படிங்கிற அனைத்து தகவல்களையும் இந்த பதிவுல தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க,
சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புதமான விரத நாட்கள்ல ஒன்று இந்த தீபத் திருநாள் தீபம், அப்படின்னு சொல்லக்கூடிய இந்த நாள் சிவபெருமானுக்கு மட்டுமல்ல முருகப்பெருமானுக்கும் ரொம்ப, ரொம்ப விசேஷமான நாளும் கூட,
கார்த்திகை அப்படிங்கிற இந்த திருநாமத்துக்கும், முருகப்பெருமானுக்கும் அநேகமான தொடர்பு உண்டு நம்ம நிறையவே பார்த்திருக்கிறோம், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட காரணத்தினால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் அப்படிங்கிற ஒரு திருநாமம் அமைந்திருக்கிறது, அதனால ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய கார்த்திகை என்று சொல்லக்கூடிய அந்த நட்சத்திரத்துல முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்கிற போது, அநேகமான நலன்கள் நமக்கு கிடைக்கிறது, அப்படிங்கறத நம்ம நிறையவே பார்த்திருக்கிறோம், முருக வழிபாட்டை பத்தி நம்ம பேசும்போதும் கார்த்திகை விரதத்தை பத்தி பேசும்போதும் நாம நிறையவே அதை சிந்தனை பண்ணி
இருக்கிறோம். அப்போ கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அந்த கார்த்திகை நட்சத்திரத்திற்கு எவ்வளவு சிறப்பு இருக்கு அப்படிங்கறது எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயமா தான் இருக்கும்.
ஆக சிவ வழிபாட்டுக்கும் முருக வழிபாட்டுக்கும் ஒரு உன்னதமான ஒரு நாள் அப்படின்னா அது இந்த தீபத் திருநாள்தான்.
இந்த தீபத் திருநாளை பொறுத்தவரைக்கும் சிவபெருமானுக்கு உண்டான ஒரு விரத நாள் என்பதோடு மட்டும் இல்லாது, சிவபெருமான் நம் எல்லோருக்கும் ஒரு பெரிய ஞானத்தை புகட்டிய ஒரு நாள் நான்தான் உயர்ந்தவன் நான்தான் பெரியவன் என்னால் எல்லாம் ஆகும் என்கின்ற
எண்ணத்தை ஒவ்வொரு மனிதனும் வேரோடு அழித்துவிட்டால், இந்த உலகத்துல எப்படி பிரச்சனை இருக்கும் நீங்க யோசிச்சு பாருங்க, இந்த ஆணவம் ஒன்றினால் தான் பல்வேறு வகையான பிரச்சனைகள் உலகத்துல மட்டுமல்ல குடும்பத்திலேயும் நமக்கு உற்பத்தி ஆகிறது.
பொதுவா ஒரு மனிதனுடைய அழிவுக்கு வித்திடக்கூடிய முதல் விஷயம் என்ன அப்படின்னா ஆணவம் தான், அந்த ஆணவம் எங்கே தலை தூக்குகிறதோ ஆணவம் எங்கே நம்மையும் மீறிச் செல்கின்றதோ, அந்த இடத்துல மனிதனை அடக்குவதற்கு நிறைய விஷயங்களை பெரியவங்க சொல்லி இருக்காங்க, அதுல ஒன்னுதான் இந்த வழிபாடு இந்த வழிபாட்டுல நீங்க பாருங்க மேல போய் நான்
எப்படியும் நான் பார்த்துருவேன் என்னால முடியை பார்க்கவா முடியாது, அப்படிங்கிற ஆணவத்தோடு தான் போனார் பிரம்மா, ஆனா அவரால பார்க்க முடிஞ்சதா முடியல கீழ போய் தேடினார் நாராயணர், அவரால பார்க்க முடிஞ்சதா முடியல இரண்டு பேருக்கும் காண முடியாமல் அடி முடி காணாத நிலையில இறைவன் நின்றதனால் அம்மலைக்கு அண்ணா மலை அப்படிங்கிற பெயர் ஏற்பட்டது.
அண்ணுதல் அப்படின்னா நெருங்குதல் அண்ணா அப்படின்னா நெருங்க முடியாத மலை அப்படின்னு பெயர், அந்த மலையே ஒரு முடியாத மலை அதனால்தான் அதற்கு அண்ணாமலை அப்படின்னு பேர் அந்த மலையின் ரூபமாக இறைவன் இன்னைக்கு நம்ம மலைதான் பார்க்கிறோம்.
ஆனா அன்னைக்கு இறைவன் ஜோதி பிழம்பாக, அக்கினி சொரூபமாக நின்ற இடம் அதனால்தான் இந்த திருத்தலமே இன்னைக்கும் அக்கினி திருத்தலமாக நமக்கு விளங்கிக் கொண்டிருக்கு இன்றைக்கும் இந்த திருத்தலத்துக்கு நீங்க போனீங்கன்னா உள்ள போய் சுவாமியை பார்க்கிறபோது அந்த அக்கினியினுடைய தன்மையை நம்மால உணர முடியும்,
அப்படி உயர்ந்த இறைவன் ஆணவமே ஒரு மனிதன் இருக்கக்கூடாது அந்த பக்குவத்தை தர வேண்டும் என்று ஒரு ஆண்டுக்கு ஒரு முறையாவது அதை நினைவு கூறுங்கள் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு நாளாகத்தான் இந்த திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்பது அமைகிறது
இதை ஒவ்வொரு ஆண்டும் நமக்கு விளக்கும் வண்ணமாக இந்த நாள்ல நாம விரதம் இருந்து சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபடனும் பொதுவா இந்த விரதம் அப்படின்னு சொல்லும்போது நான் நிறைய பேருக்கு சொல்றது உண்டு, அது அவரவர்களினுடைய விருப்பத்துக்கு எடுத்துக்கோங்க, அப்படின்னு நம்முடைய பிரச்சனைகள் என்ன அந்த பிரச்சனைக்கு நாம் எப்படி விரதம் இருக்கணும், அப்படிங்கறத அவங்க அவங்கதான் தீர்மானம் பண்ணிக்கணும் இன்னொருத்தவங்களை பார்த்து அவங்க அப்படி இருக்குறாங்க, அதனால நான் அப்படி இருக்கிறேன் அப்படின்னு நீங்க நினைக்கவே
வேண்டாம் ஒருத்தவங்க விரதம் இருக்குறாங்க என்னால இருக்க முடியல அப்ப நான் ஏதோ பாவம் பண்ணிட்டேனா அப்படின்னா கிடையவே கிடையாது.
அவர்களுக்கு உடம்புல ஆரோக்கியம் இருக்கு அவர்களால இருக்க முடியுது உங்களால இருக்க முடிஞ்சா அதை நீங்க எடுக்கலாம் இல்லையா உங்கள் சூழ்நிலை அன்றைக்கு அப்படி அமையலையா அதை பத்தி கவலைப்படாதீங்க எளிமையான உணவுகளாக எடுத்து கொண்டு நீங்கள் அன்றைக்கு விரதத்தை துவங்கலாம்.
பொதுவாக கார்த்திகை விரதம் என்பது பரணியினுடையது, இரவு பொழுதிலிருந்தே ஆரம்பிக்கும் இன்னும் சிலர் கடுமையாக பரணி முழுவதுமே சாப்பிட
மாட்டாங்க கார்த்திகை முழுவதுமே சாப்பிட மாட்டாங்க, அதெல்லாம் பழக்கமாக இருப்பவர்களுக்கு இல்லைன்னா பரணி இரவு அன்னைக்கு எளிமையா பால், பழங்கள் எடுத்துட்டு கார்த்திகை தீபத்தை அன்னைக்கு காலையில எழுந்த உடனே முதல்ல குளிச்சிடுங்க, நிறைய பேரு இன்னமும் கேக்குறீங்க விரதம்னா காலையில தலைக்கு குளிக்கணுமா தலைக்கு குளிக்கணுமான்னு, அதுவும் அவரை அவர் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து என்னை கேட்டீங்கன்னா தலைக்கு தான் குளிக்கணும் அப்படின்னு நான் சொல்லுவேன் சைனஸ் இருக்குறவங்க குளிக்கணுமான்னு கேட்டா குளிக்க வேணாம் அப்படின்னு தான் நான் சொல்லுவேன்.
அதனாலதான் நான் ரெண்டுமே உங்களுக்கு சொல்றேன் நீங்க நல்லா இருக்குறீங்களா, கண்டிப்பா காலையில தலைக்கு குளிச்சிட்டு காய வச்சுக்கோங்க தலைக்கு காலையில குளிச்சிட்டு உங்களுடைய விரதத்தை நீங்க துவங்க ஆரம்பிச்சிருங்க அன்னைக்கு முழுக்க உபவாசமாக இருந்தால் மாலை 6:00 மணிக்கு மேல தான் நம்ம ஏதாவது சாப்பிடணும் இடையில தண்ணீர் நிறைய குடிச்சுக்கணும் இளநீ குடிக்கலாம் தண்ணி எடுத்துக்கலாம் பால் எடுத்துக்கலாம் பழச்சாறுகள் எடுத்துக்கலாம் இதெல்லாம் கண்டிப்பா நீங்க எடுத்துக்கலாம் ஒன்னும் தப்பு கிடையாது உப்பில்லாத உணவு கூட சில பேர் கிருத்திகை
அன்னைக்கு எடுக்கிற வழக்கம் உண்டு அது மாதிரி இருந்ததுன்னா உப்பில்லாத பால் சாதம் அல்லது உப்பில்லாத தயிர் சாதம் நீங்க எடுத்துக்கலாம் அதுவுமே ரொம்ப நல்லது இல்லம்மா பட்டினில எல்லாம் எங்களால இருக்க முடியும் அப்படிங்கறவங்க காலையில இருந்து உபவாசமே இருங்க ஆனா நிறைய தண்ணி குடிச்சுக்கோங்க மறந்துடாதீங்க நான் ஒவ்வொரு இந்த பண்டிகையின் போதும் விரதத்தின் போதும் தண்ணி குடிங்க தண்ணி குடிங்க நிறைய சொல்றேன் ஏன்னா நீங்க கோயிலுக்கு போறீங்க அங்க நிறைய கூட்டமா இருக்கு அப்படின்னா உடம்புல நீர்ச்சத்து இல்லைன்னா மயக்கம் ஏற்பட்டுடும் அது
பின்னால நமக்கு தான் பிரச்சனை அதனால தயவு செஞ்சு விரதம் இருக்கிறவங்க நிறைய தண்ணி குடிச்சுக்கோங்க, மாலையில தீபம் ஏத்தணும் தீபம் ஏத்துறதுக்கு நாம எப்போதும் நம்ம வீட்ல எவ்வளவு தீபம் ஏத்துற வழக்கம் இருக்கோ, அவ்வளவு தீபம் ஏத்துங்க, தீபத் திருநாள் அன்னைக்கு வீடு முழுக்க தீபம் ஏத்தலாம் 100 தீபம் 150 விளக்குகள் கூட நம்ம ஏத்தலாம், இப்ப நிறைய பேர் கேக்குறீங்க இந்த ரெடிமேட்ல விளக்கு வைக்கிறாங்களே, அந்த மாதிரி வைக்கலாமா அப்படின்னு அது நாம வந்து அலங்காரத்துக்கு பயன்படுத்தக்கூடியது தீபத் திருநாள் அன்னைக்கு மண் விளக்குல நல்ல எண்ணெய் ஊத்தி அதுல பஞ்சு திரி போட்டு அதுல தீபம் ஏற்றி பாருங்க அது ரொம்ப ரொம்ப விசேஷமானதாக இருக்கும்.
அதனால கொஞ்சம் தீபத் திருநாள் அன்னைக்கு அப்படி விளக்குகள் ஏற்றுவதற்கு முயற்சி பண்ணி பாருங்க எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும் குறைந்தபட்சம் 27 தீபங்களாவது ஏத்தணும், அதிகம் நீங்க எவ்வளவு வேணாலும் ஏத்திக்கலாம் அது உங்களுடைய சௌகரியத்தை பொறுத்து எங்கெல்லாம் தீபம் வைக்கணும் அப்படின்னா முதல்ல பூஜை அறையில வைக்கணும் பூஜை அறையில நிறைய பேர் போன ஆண்டு என்கிட்ட கேட்டீங்க, ஏற்கனவே நாங்க தீபம் ஏத்துறோம் அது கணக்கு இல்லைன்னு
நீங்க சொல்லிட்டீங்க அன்னைக்கு தீபம் உள்ள எத்தனை வைக்கணும் அப்படின்னு நான் பரணி தீபத்துக்கு அஞ்சு விளக்கு வைங்கன்னு சொல்றேன் இல்லையா, அதே மாதிரி நீங்க கார்த்திகை தீபத்தை அன்னைக்கு ஷடோண தீபம் வேணா ஏத்துங்க அது ரொம்ப ரொம்ப விசேஷமானது ஏற்கனவே ஷடோண தீபம் பத்தி நான் நிறையவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேன் அதை படமாகவும் நான் இப்போ உங்களுக்கு காட்டுறேன் சரவண பவ அப்படின்னு போட்டு இருக்கக்கூடிய இந்த ஷடோண தீபத்தை நீங்க ஏத்துனீங்கன்னா ஆறு விளக்கு நீங்க உள்ள வைக்கலாம், அது இன்னும் விசேஷமானது முருகனுக்கும் சிறப்பு சிவபெருமானுக்கும்
நம்ம தீபம் ஏத்துறோம் அதனால எல்லா தெய்வங்களையும் இந்த தீபத் திருநாள் அன்னைக்கு வழிபாடு பண்றோம் அதனால இந்த சடோண தீபமும் நீங்கள் ஏற்றிக் கொள்ளலாம் அதேபோல கார்த்திகை தீபத்தை அன்னைக்கு வீட்ல இருக்கிற எல்லா இடங்களிலும் ரெண்டு ரெண்டு விளக்கு வைங்க அடுப்படியில வைக்கணும்,
அதே மாதிரி முன்வாசல்ல வைக்கணும் பின்வாசல்ல வைக்கணும் கழிவறைகள்ல கூட வைக்கணும் நம்ம வந்து பால்கனி சொல்றோம் இல்லையா பால்கனில வைக்கணும் ஸ்டோர் ரூம்ஸ் வச்சிருக்கீங்கன்னா ஸ்டோர் ரூம் ரூம்ல வைக்கணும் மொட்டை மாடி இருக்குன்னா மொட்டை மாடியில வைக்கணும் தோட்டம் இருக்குன்னா
தோட்டத்துல வைக்கணும், கிணறு இருக்குதுன்னா கிணத்து மேடையில வைக்கணும் இல்ல ஆடு மாடு எல்லாம் வச்சிருக்கிற கொட்டகை இருக்கு அப்படின்னா ஆட்டு மாட்டு கொட்டகை எல்லாம் கொண்டு போய் வைக்கணும், என்ன இடங்கள் நம்ம வீடு முழுக்க வச்சிருக்கிறோமோ எல்லா இடங்களிலும் வைங்க படுக்கை அறைகள்ல கூட ரெண்டு ரெண்டு விளக்கு கண்டிப்பா வைக்கணும்.
நீங்க எத்தனை படுக்கை அறை இருக்கோ அத்தனை படுக்கை அறையில ரெண்டு ரெண்டு விளக்குகள் வைங்க மாடிப்படிகள்ல வைக்கலாம், எல்லா இடங்களிலும் நம்ம வைக்கலாம், அலுவலகத்துல ஏத்தலாம் வீட்ல கடையில எல்லா இடங்கள்ல ஏத்தலாம் இப்ப
நீங்க நினைப்பீங்க ஒரு சிலருக்கு இந்த எண்ணம் இருக்கும் வீடே எங்களுக்கு சின்னது, ஒரே ஒரு ஹால் ஒரு கிச்சன் தான் இருக்கு படுக்குறது அங்கதான் எல்லாமே அங்கதான் அப்படின்னா நீங்க அந்த ஹால்லையே நல்லா அழகா தீபம் ஏற்றுங்க அதே மாதிரி வாசல்லையும் நல்ல தீபம் ஏற்றலாம் வாசல்ல வந்து காத்துக்கு ரொம்ப நிக்காது, அதனால கொஞ்சமா தீபம் வச்சுக்கோங்க, நிறைய பேருக்கு வாசல்ல அழகா கோலம் போட்டு அதுல ஒரு குத்து விளக்கு வச்சு சுத்தி தீபங்கள் வச்சு ஏற்றக்கூடிய வழக்கம் இருக்கு, காத்தடிக்கலைன்னா பரவாயில்லை காத்து அடிச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனாலும்
வாசல்ல ரெண்டு தீபம் வைக்கணும் நான் பலமுறை சொல்றேன்.
முதல்ல தீபம் ஏற்ற வேண்டியது வாசல்ல, அதுக்கப்புறம் தான் வீட்ல வந்து பூஜை அறையில ஏத்தணும் பூஜை அறையில ஏத்துனதுக்கு அப்புறம் தான் மற்ற இடங்கள் அனைத்திலேயும் ஏத்தணும், இப்ப எங்கெல்லாம் ஏத்தணும் அப்படின்னு தெரிஞ்சாச்சா எத்தனை மணிக்கு ஏத்தணும் அப்படிங்கறது கார்த்திகை அன்னைக்கு எல்லாருக்கும் தெரியும் 6:00 மணிக்கு தான் தீபம் ஏத்தணும், அந்த ஆறு மணிக்கு தீபம் ஏத்துறதுக்கு முன்னாடி நமக்கு ஒரு வேலை இருக்கு
என்ன வேலை அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரரா வர்ற காட்சியை பார்த்துட்டு தான் நாம போய் தீபம் ஏத்தணும், நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க ஆண்டுக்கு ஒரே ஒரு முறைதான் அதுவும் ரெண்டு மூணு நிமிஷம் தான் இந்த காட்சி கிடைக்கும் இன்னும் கொஞ்சம் இருக்க மாட்டியா சுவாமி அப்படின்னு கெஞ்சி கேட்டா கூட அந்த மூணு நிமிஷத்துக்கு மேல சுவாமி நிற்கவே மாட்டார், உள்ள இருந்து வரும்போதே அப்படி ஆனந்தமயமாக வருவார், வந்து நம்மளை எல்லாம் ஆனந்தப்படுத்துவார் காலையிலிருந்து இருந்த பட்டினி தெரியாது உடல் கலைப்பு தெரியாது ஒரு ஆண்டு இயங்கிய இயக்கத்துக்கு அந்த மூணு நிமிஷம் தான் அவர் கொடுக்கிறது பரிசு
அற்புதமா ஆனந்தமா அர்த்தநாரிஸ் ஸ்வரூபரா சுவாமி உள்ள இருந்து வந்து நமக்கு காட்சி கொடுத்த அடுத்த வினாடியே மலையில தீபம் ஏற்றப்படும் தீபம் ஏற்றப்பட்ட உடனேயே அண்ணாமலைக்கு அரோகரா அப்படின்னு சொல்லி அவரை நாம வணங்கிட்டு அதுக்கப்புறமா போய்தான் இந்த தீபத்தை ஏத்தணும், ஒரு அஞ்சரை மணிக்கு எல்லாம் தயார் பண்ணி வச்சிடுங்க தீபத்துக்கு எல்லாம் தயாரா எடுத்து வச்ச பிறகு நீங்க அண்ணாமலையாரை தரிசனம் பண்ணுங்க தரிசனம் பண்ண பிறகு 6:00 மணிக்கு இந்த தீபத்தை நீங்க ஏத்திக்கலாம் மௌனவிரதம் இருக்கிறது அப்படின்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா 6:00 மணிக்கு தீபம்
ஏற்றின பிறகு முதல்ல அண்ணாமலைக்கு அரோகரா அப்படின்னு சொன்ன பிறகு உங்களுடைய மௌனத்தை பூர்த்தி பண்ணிட்டு அப்புறமா போய் நீங்க தீபம் ஏற்றிக் கொள்ளலாம் மௌன விரதம் இந்த நாள்ல இருப்பது ரொம்ப ரொம்ப விசேஷமானது நம்முடைய மனதுக்கு நம்முடைய ஆன்மாவுக்கு ஏதோ ஒரு மிகப்பெரிய அமைதி ஏதோ ஒரு பெருசா ஒன்னு அப்படின்னா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு ஆனந்தமான ஒரு நிலையை தரக்கூடியது தான் மௌனவிரதம் பல ஆண்டுகளாக நான் சொல்லி சொல்லி நிறைய பேர் மௌனவிரதம் இருக்கிறாங்க சில பேர் கூட இப்ப சொல்றாங்க இருக்கிறேன்,
ஆனா நடுவுல ரெண்டு வாட்டி பேசிட்டேன் அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் அதை பத்தி கவலைப்படாதீங்க, என்னடா நடுவுல பேசிட்டோமே அப்படின்னா அப்படியே பேசிரலாம்னு முடிவு பண்ணிடாதீங்க ஒரு ரெண்டு வாட்டி பேசிட்டேன் அப்படின்னா திரும்ப சிவாய நம அண்ணாமலைக்கு அரோகரா அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் நீங்க உங்களுடைய விரதத்தை தொடங்கிக்கலாம் ஒன்னும் தப்பு இல்லை ரெண்டு மணிக்கே பேசிட்டேன்மா அப்படின்னா 6:00 மணி வரைக்கும் நேரம் இருக்கு இல்லையா அதனால அதை நீங்க திரும்ப தொடர்ந்து கொள்ளலாம் மௌன விரதம் இருக்க
பழகுங்கள் முடிந்தவரை யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கோ அவங்க மௌனமா இருங்க வாய்ப்பு இல்லாதவங்க,
இந்த மாதிரி விரதத்தை நீங்க எடுத்துக்கலாம் அது உங்களுடைய வாழ்வியல் சூழலை பொறுத்ததானது அதனால நெய்வேத்தியமா அன்னைக்கு என்ன வைக்கிறது அப்படின்னா பொறி வைக்கணும் கார்த்திகை பொறினே விக்கும் அதை நல்லா வெல்லம் கலந்து அதுல நிறைய சேர்ப்பாங்க பொட்டுக்கடலை எள்ளு, தேங்காய் எல்லாம் சேர்த்து அதை நல்லா உருண்டையா பிடிச்சு வைப்பாங்க உருண்டை வரலைன்னா அப்படியே உதித்து பொரியாவே வைப்பாங்க அது இல்லாம நிறைய பேர் வந்து இலை போட்டு படைக்கிற வழக்கம்
அப்படிங்கறது இருக்கு அதனால சாதம், சாம்பார், காய்கறி கூட்டு, வடை, பாயாசம் எல்லாம் வச்சு படைக்க போறீங்கன்னா, அப்படியும் நீங்க படைச்சுக்கலாம் உங்களுடைய சௌகரியம் என்னன்னு பார்த்துக்கோங்க, அதே மாதிரி தீபத் திருநாள் அன்னைக்கு இந்த ஒரு சின்ன விஷயத்தையும் மறந்துடாதீங்க,
இறைவனுக்கு நாம தீபம் எல்லாம் ஏத்திட்டு சிவபுராணம் பாராயணம் பண்ணனும், முருகன் படிக்கிறீங்கன்னா கந்த சஷ்டி கவசம் படிங்க, இந்த மாதிரி நீங்க நல்ல விஷயங்களை தீபத் திருநாள் அன்னைக்கு படிக்கணும், திருப்புகழ் தெரியுதா, கந்தர் அலங்காரம் தெரியுதா, கந்தர் அனுபூதி தெரியுதா படிங்க படிச்சு இறைவனுக்கு தீப தூப ஆராதனை பண்ணி வழிபாடு பண்ணுங்க தீபத் திருநாள் அன்னைக்கு நாம விரதம் இருக்கிறோம் அப்படிங்கறதுனால எல்லாரும் பட்டினியா தான் இருக்கணும் அப்படின்னு
நினைக்கக்கூடாது அன்னைக்கு கண்டிப்பா அன்னதானம் பண்ணனும்.
காலையில உங்களால பண்ண முடியல அப்படின்னா மாலை 6:00 மணிக்கு மேலயாவது அன்னதானம் பண்ணுங்க ஏன்னா விரதம் இருக்கிறவங்க அந்த அன்னத்தை வாங்கி சாப்பிடுற போது இன்னும் அதீதமான பலன் அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் கார்த்திகை தீபத் திருநாள் அன்னைக்கு அன்னதானம் செய்வது மிக மிக விசேஷமானது அதனால வாய்ப்பு இருக்கிறவங்க தீபம் ஏத்திட்டு ஏதோ ஒரு ரெண்டு பேத்துக்கோ மூணு பேத்துக்கோ மாலை நேரம் ஆயிடுதா ஏதாவது ஒரு டிபனாவாவது நீங்க வாங்கி கொடுங்க ஒரு நாலு இட்லி வாங்கி
கொடுங்க அது ரொம்ப ரொம்ப விசேஷமான பலன்களை பெற்றுத்தரும் இப்ப வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு என்னன்னா எங்க நேரம் ரொம்ப வித்தியாசமானது அண்ணாமலையார் காலையிலேயே வந்துருவாரு எங்களுக்கு தீபம் காலையில ஏற்றப்படும் எங்க நாட்டு நேரத்துக்கு நள்ளிரவில் ஏற்றப்படும் நாங்க எப்ப தீபம் ஏத்துறது அப்படிங்கறவங்க எல்லாம் உங்க நாட்டு கணக்குக்கு மாலை ஆறு மணி எந்த நாடா இருந்தாலும் சரி அந்த நாட்டு நேரப்படி மாலை 6:00 மணிக்கு நீங்க தீபம் ஏற்றுங்க அதுதான் உங்களுக்கு கணக்கு அந்த கணக்கை நீங்க பார்த்துக்கோங்க இப்போ தீபம் எப்ப
ஏத்தணும் எத்தனை மணிக்கு ஏத்தணும்னு எல்லாம் பார்த்துட்டோம் தீபத் அன்னைக்கு பௌர்ணமி வருமேமா இந்த ஆண்டு பௌர்ணமி வரலையே ஆரம்பத்திலிருந்து அதை பத்தி நீங்க சொல்லுவீங்கன்னு நாங்க யோசிச்சுட்டே இருந்தோம் நீங்க சொல்லவே இல்லையே அப்படின்னு நிறைய பேர் நினைப்பீங்க அதை பத்தி உங்களுக்கு நிறைவுல சொல்லலாம், அப்படின்னு யோசிச்சுட்டு இருந்தேன் பொதுவாகவே இந்த தீபத் திருநாள் அன்னைக்கு பௌர்ணமியும், கிருத்திகை நட்சத்திரமும் ஒன்றாக இணைகிறபோது தீபத் திருநாள் வரும் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாதிரி இரண்டும் இணையாமல் போகக்கூடிய சூழலும் ஏற்படும்.
அப்படி வந்தால் எதை அடிப்படையாக வைத்து தீபத் திருநாளை கொண்டாடுவது அப்படின்னும், நமக்கு பெரியவங்க சொல்லி இருக்காங்க, ஏன்னா இந்த சுழற்சியின் காரணமாக ஒரு சில ஆண்டுகள்ல இந்த மாதிரி சில மாற்றங்கள் ஏற்படுவது என்பது இயற்கை அப்படி வந்துருச்சுன்னா கிருத்திகை என்கின்ற நட்சத்திரம் தான் அங்கு பிரதானமானது.
அதனால் கிருத்திகை நட்சத்திரம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு மாலையில 6:00 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும், அப்படிங்கறதுதான் கணக்கு அதனுடைய அடிப்படையில தான் பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல ஒரு சூழல் அமைந்திருக்கிறது,
அதை மீண்டும் இந்த ஆண்டு 2024 பௌர்ணமி இல்லாமல் கிருத்திகை மட்டுமே அமைந்திருக்கக்கூடிய ஒரு தீபமாக, இந்த ஆண்டு நமக்கு வருது இப்ப தேதி என்ன, கிருத்திகை நட்சத்திரம் என்னைக்கு வருது, அப்படிங்கறத ஒரு முறை பார்த்துருவோமா 13/12/2024 வெள்ளிக்கிழமை அன்னைக்கு காலை 6 மணி 51 நிமிஷத்துக்கு கிருத்திகை நட்சத்திரம் ஆரம்பிக்குது. 14/12/2024 காலை 4 மணி 56 நிமிஷம் வரைக்கும் கிருத்திகை நட்சத்திரம் நமக்கு அமைந்திருக்கிறது அதனால 13 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு நாம தீபத் திருநாளை கொண்டாடணும், பௌர்ணமி நமக்கு என்னைக்கு வருது அப்படின்னா
14/12/2024 மாலை 4 மணி 17 நிமிஷத்துக்கு ஆரம்பிச்சு 15/12/2024 மாலை நமக்கு மூணு மணி 13 நிமிஷம் வரைக்கும் பௌர்ணமி என்பது அமைந்திருக்கிறது, ஆக 14 ஆம் தேதிதான் நமக்கு பௌர்ணமி சாயங்காலம் தான் ஆரம்பிக்குதே, இதனாலதான் இந்த ஆண்டு பௌர்ணமி இல்லாம கிருத்திகை நட்சத்திரத்தை மட்டும் மையமாக வைத்து நாம் இந்த தீபத் திருநாளை கொண்டாடுகின்றோம், அதனால இந்த ஒரு யோசனை இருந்தவங்க இது வழக்கம் அப்படிங்கறத ஞாபகம் வச்சுக்கோங்க பௌர்ணமி அன்னைக்கும் நாம தீபம் வைப்போம் ஆனா கிருத்திகை இருக்காது, அன்னைக்கு அது ஒன்னுதான் ஏன்னா மூன்றாவது நாள் பாஞ்சராத்திர தீபம்
அப்படின்னு நாம சொல்றோம் இல்லையா 14 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கும் நம்ம தீபம் ஏத்தணும், அது எத்தனை தீபம் ஏத்தணும் அப்படின்னா, ஏற்கனவே பரணி தீபத்துக்கு சொன்ன மாதிரிதான் நீங்க எளிமையாக ஒரு 15, 20 இந்த மாதிரி ஒரு சின்ன எண்ணிக்கையில கூட நீங்க ஏத்திக்கலாம் இல்ல வழக்கமா எங்களுக்கு நிறைய ஏத்துற வழக்கமே இருக்குன்னா நிறையவே ஏத்திக்கலாம் மூன்றாவது நாளும் தீபம் ஏற்றலாம், ஆக இந்த ஆண்டு நாம பரணி நட்சத்திரத்திலேயும் ஏத்துறோம், கிருத்திகை நட்சத்திரத்திலேயும் ஏத்துறோம், பௌர்ணமி திதியிலயும் ஏத்துறோம் என்ன நாள்தான் கொஞ்சம் முன்ன பின்ன நமக்கு
அமைந்திருக்கிறது ஆக தீபத் திருநாள் அன்றைக்கு எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும், உங்களால என்ன செய்ய முடிகிறதோ எளிமையான நெய்வேத்தியங்கள் செய்து வைத்து சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபாடு பண்ணினோம்னா எல்லாவிதமான நன்மைகளும் வாழ்க்கையில எப்படி உயரனும்னு நாம நினைக்கிறோமோ, அப்பேற்பட்ட ஒரு உயரத்தை நிச்சயமாக சிவபெருமானும் முருகப்பெருமானும் நமக்கு அருளுவார்கள், இந்த பதிவை உங்களுடைய நண்பர்கள் உச்சார் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்க.
Also Read: முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan
Also Read: அறுபடை வீடு
Also Read: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
Also Read: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
Also Read: முருகப் பெருமானின் அறுபடை வீட்டிற்கான திருப் புகழ்
Also Read: ஆன்மீக தகவல்கள்