Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஆன்மீக தகவல்கள்அருணகிரிநாதர் சொன்ன 3 முக்கிய நாமங்கள் - அதிலும் இந்த நாமம் மிகவும் சிறந்தது |...

அருணகிரிநாதர் சொன்ன 3 முக்கிய நாமங்கள் – அதிலும் இந்த நாமம் மிகவும் சிறந்தது | Best Nama for Murugan

முருகப்பெருமானுடைய உயர்ந்த நாமங்கள்ல ஒரு மூன்று சிறப்புக்குரிய நாமங்களை பத்தி இந்த பதிவுல பார்க்கலாம் வாங்க.

முருகப்பெருமானுக்கு எத்தனை நாமங்கள் இருக்கு யார்கிட்ட போய் கேட்கலாம் அருணகிரிநாதர் அவர்கிட்ட கேட்கலாமா அப்படின்னு அவர்கிட்ட போய் கேட்டா அவர் சொல்றாரு வெகுக்கோடி நாம சம்பு குமாரா நமோ நம அப்படிங்கிற

அருணகிரிநாதரே பலகோடி நாமம் படைத்தவன் முருகன் அப்படின்னு சொல்லும்போது பலகோடி நாமத்தை தேடி கண்டுபிடிச்சு கஷ்டப்பட்டு அந்த நாமத்துல எதை சொன்னா முருகன் சீக்கிரம் கருணை காட்டுவார்

அப்படின்னு தேடுவதற்கு நமக்கு காலமாவது பத்துமா இல்ல பிறவியாவது பத்துமா கண்டிப்பா பத்தாது இல்லையா அப்ப அதே அருணகிரிநாதர் கிட்ட போயி நாங்க ஏதோ இந்த ஜென்மத்துல கடை தேறுவதற்கு ஏதாவது எளிமையா சில நாமங்களை

சொல்லுங்க சுவாமின்னு கேட்டா இப்படி பல கோடி நாமம்னு சொல்றீங்களே எங்களுக்கு வாயில வர்ற மாதிரி உயர்ந்த நாமமா ஏதாவது சொல்லுங்க அப்படின்னா சில நாமங்களை

அருணகிரிநாத சுவாமிகள் நமக்கு தந்திருக்கிறார் அதுல ஒரு மூன்று சிறப்புக்குரிய நாமத்தை இன்னைக்கு உங்களோட நான் பகிர்ந்து கொள்கின்றேன்.

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்தது கந்தர் அனுபூதி அப்படிங்கிற ஒரு அற்புதமான பகுதி இந்த கந்தர் அனுபூதியில ஒரு அழகான பாட்டு முதல்ல பாட்டு என்னன்னு பாருங்க முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் பொறுப்புங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ என் குண பஞ்சரனே அப்படின்னு முருகப்பெருமானைப் பற்றி இந்த பாடல்ல நமக்கு அருளி இருக்கிறார் அருணகிரி

பெருமான் முருகனுடைய நாமங்களை சொல்லி உருகுதல் வேண்டும் அப்படிங்கிறார் இந்த உருக்கத்தை பத்தி நாம அப்புறமா பார்ப்போம்.

முதல்ல மூன்று நாமங்களை சொல்றார் முருகன் குமரன் குகன் இதை சொல்லும்போதே குமரன், முருகன், குகன் அல்லது குகன் குமரன் முருகன் அப்படின்னு சொல்லி இருக்கலாம் இல்ல முதல்ல எடுத்ததும்

அவர் சொன்ன நாமா முருகன் என்கின்ற நாமம் முருக நாமங்களிலேயே மிக மிக மிகப் பழமையான நாமா என்ன தெரியுமா

முருகு என்கின்ற நாமாதான் முருகுகள் இளமை நாற்றம் முருகவேல் விழா வணப்பாம் என்று பிங்கல நிகண்டிலேயே பேசப்பட்ட நாமா முருகநாமா

முருகு என்பது தமிழின் பிம்பமாக இருக்கும் இருக்கக்கூடியது அதற்கு சில உதாரணங்களை நான் உங்களுக்கு சொல்றேன்.

இப்ப தமிழ்ல மூன்று இனங்கள் இருக்குது வல்லினம், மெல்லினம், இடையினம் இன்னும் மறந்திருக்க மாட்டோம் அப்படின்னு நினைக்கிறேன்,

கசட தவற வல்லினம் ஞன நமன மெல்லினம் யரழ வழல இடையினம் இப்படி நாம படிச்ச காலத்துல மூன்று இனங்கள் படிச்சோமா

இந்த மூன்று இனங்கள்ல இருந்தும் ஒரு ஒரு எழுத்து எடுத்து வைக்கப்பட்ட ஒரு பெயர்தான் தமிழ் என்கின்ற பெயர்

அதேபோல மூன்று இனங்களில் இருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்து வைக்கப்பட்ட ஒரு நாமாதான் முருகு என்கின்ற

நாமா அதுல மு அப்படிங்கறது மெல்லினத்தில் இருந்து நமக்கு துவங்குகிறது எடுத்த உடனே வல்லினம் அல்ல முருக நாமம் மெல்லினத்தில் இருந்து தான் நமக்கு துவங்குகிறது ஆக அவன் மென்மையானவன் அப்படிங்கறதையே முதல்ல நம்மளால புரிஞ்சுக்க முடியுது.

அப்படி துவங்கக்கூடிய மு ரு கு அப்படின்னு சொல்லக்கூடிய இந்த முருகு என்கின்ற நாமம்தான் பின்னாளில் மருவி முருகு முருகன் என வந்தது ஆக முருகு என்று யாரெல்லாம் உருகுகிறார்களோ அவர்களுக்கு முருகனுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும் அப்படின்னா என்ன அர்த்தம் முருகு முருகன் அப்படின்னா என்ன அர்த்தம் இளமையானவன் அப்படின்னு அர்த்தம், அழகானவன் அப்படின்னு அர்த்தம்

வேண்டுவோர்க்கு வேண்டுவரங்களை வாரி வாரி வழங்கக்கூடியவன் அப்படின்னு அர்த்தம், இந்த ஒரு நாமத்துக்கு எத்தனையோ அர்த்தங்கள் அடங்கி இருக்கின்றது. அதுமட்டுமல்ல அகர உகர மக அகரம் இது மூன்றினுடைய கூட்டாகவும் நமக்கு அமைந்திருக்கக்கூடிய நாமா அகரம் சிருஷ்டிக்கிறது உகரம் ரட்சிக்கிறது.

மகரம் சம்ஹாரம் செய்கின்றது சிருஷ்டி எழுத்து ரட்சக எழுத்து சம்ஹார எழுத்து என எல்லாம் சேர்ந்த ஒரு நாமா அப்படின்னா அது முருகன் என்கின்ற நாமாதான் முருகா முருகா முருகா அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா

நம்முடைய வாழ்க்கையில செய்த வினைகள் எல்லாம் நீங்கி நமக்கு நம்முடைய கர்மாக்கள் எல்லாம் தொலைந்த நல்ல கதியை முருகப்பெருமான் நமக்கு அருளுவார் அதனால்தான் முருகனுடைய நாமங்களிலேயே உயர்ந்த நாமமாக இந்த முருக நாமம் என்பது பேசப்படுகிறது

எப்படி சிவபெருமானுக்கு சிவாய நம என்கின்ற பஞ்சாக்ஷர நாமம் உயர்ந்ததோ நாராயணருக்கு ஓம் நமோ நாராயணாய நமஹ அப்படிங்கிற நாமம் உயர்ந்ததோ அதேபோல முருகப்பெருமானுக்கு சரவண பவ அப்படிங்கிற மந்திரம் எப்படி உயர்ந்ததோ அதேபோல தான் இந்த முருக நாமா

இதுவும் ஒரு மந்திரச்சொல் இந்த முருகா அப்படிங்கிற நாமத்தை சொல்லிக்கிட்டே இருக்கிறவர்களுக்கு வாழ்க்கையில எந்தவிதமான துன்பங்களையும் அவன் அண்ட விடமாட்டான்.

ஆனால் உணர்ந்து உருகி அன்போடு சொல்லணும், அதனால முதல்ல எல்லாரும் சொல்றது முருகா அப்படிங்கிற இந்த நாமம் தான் முருகனுக்கு அடுத்ததாக இரண்டாவது நாமம் அவர் சொல்லுகிறார் குமாரன் அப்படின்னு குமாரன் என்பதுதான் மருவி குமரன் என்று வந்தது குமாரன், அப்படின்னா இளமையானவன் அப்படின்னு அர்த்தம் குமரன்னாலும் இளமையானவன் தான அர்த்தம் கூ மாறன் அப்படின்னா என்ன அர்த்தம் கூ அப்படின்னா தேவையற்ற குப்பைகள் இப்ப உதாரணத்துக்கு இப்படி எடுத்துக்கோங்களேன் கோபம் ஆசை, பகை இதை

இன்னும் சித்தாந்தமா நாம சிந்திக்கணும்.

அப்படின்னா ஆணவம், கன்மம், மாயை இது போன்ற மலங்கள் நான் நமக்கு புரியுற மாதிரி எளிமையா சொல்றேன், கோபம், ஆசை, பகை, பொறாமை, வஞ்சனை எவ்வளவு குப்பை இருக்கு நம்ம மனசுல அப்படி தேவையற்ற குப்பைகளை எல்லாம் மாறன் என்றால் அழிப்பவன் அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கு.

குமாரன் அப்படின்னா தேவையற்ற நம்முடைய மனதில் இருக்கக்கூடிய குப்பைகளை எல்லாம் நீக்கி, அகற்றி சுத்தம் செய்து நம்மை தூய்மைப்படுத்தக் கூடியவன் அவன்.

அதனால் அவனுக்கு குமாரன் என்று பெயர் நீங்க இப்படியே இதே அர்த்தத்திலேயே நீங்க யோசிச்சு பாருங்களேன்

மனம் அது செம்மையானால் மந்திரமே தேவையில்லை, இது திருமூலரின் உடைய வாக்கு அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது நம்ம எல்லாரும் தெரிஞ்ச வாக்கியம் தான் எப்போ நம்முடைய மனதில் இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாம் நீங்குகிறதோ, அப்போதே நமக்கு இளமை தக்க வைத்துக் கொள்ளப்படுகிறது.

அப்படின்னு தான அர்த்தம் அதனால்தான் அவனுக்கு குமாரன் என்று பெயர் அப்ப நம்மகிட்ட இருக்கக்கூடிய தேவையற்ற குப்பைகளை எல்லாம் தூக்கி அவன் வெளியே போட்டுட்டு நம்மை தூய்மைப்படுத்தி விடுவான் ஆக முருகன் குமரன்,

அடுத்து குகன், குகன் அப்படின்னா இதய குகையில் வாழ்பவன் அதனால் அவனுக்கு குகன் அப்படின்னு பேர் இந்த இதயம் ஒரு குகையா அப்படின்னா நிறைய பேருக்கு அப்படித்தானே இருக்கு எல்லாரும் நம்ம சொல்றோம்

எனக்குள்ள ஒரு மிருகம் தூங்கிட்டே இருக்கு அப்படின்னு என்ன மிருகம் தூங்குது பேர் தெரியாத மிருகம் எவ்வளவோ இருக்கு எல்லா மிருகமும் உள்ள தூங்கிட்டு தான் இருக்கு

என்ன இந்த மிருகத்துல எந்த மிருகம் எப்ப முழிச்சுக்கும் எப்ப வெளிய வரும் எது கத்தும் எது அமைதியா இருந்து பழி வாங்கும் யாருக்கும் தெரியாது அப்ப குமாரன் என்ன பண்ணுவாராம்மா

நம்முடைய மனதில் இருக்கக்கூடிய குப்பை எல்லாம் வெளியே தள்ளி எல்லாத்தையும் தூய்மைப்படுத்திருவார் இப்ப இந்த குகை என்ன ஆச்சு சுத்தமா இருக்கு இப்ப இந்த குகைக்குள்ள வந்து வாசம் செய்யக்கூடிய

அவனுக்கு பெயர் என்ன குகன் என்று பெயர் அவன் இதய குகையில் வாசம் செய்வான் முருகனை கொண்டு வந்து இந்த இதயத்துக்குள்ள வச்சுக்கிட்டோம் அப்படின்னு சொன்னா அதற்குப் பிறகு அது மனித ஆன்மாவாகவா இருக்கும்

புனித ஆன்மாவாக மாறும் அவர்களைத்தான் அருளாளர்கள்னு நம்ம சொல்றோம் அருணகிரிநாத சுவாமிகள் வள்ளல் பெருமானார் பாம்பன் சுவாமிகள் என்னுடைய குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள் இது மாதிரி முருகன் அடியார்கள் எல்லாம்

பாருங்க அவங்க மனசுல கோபம் இல்ல, ஆசை இல்ல, பகை இல்ல, வஞ்சனை இல்லை இல்ல, பொறாமை இல்ல அப்ப அங்க யார் இருக்கிறா குகன் இருக்கிறார்.

அதனால்தான் அவனுக்கு பெயர் என்ன குகன் அப்போ யாரெல்லாம் முருகா அப்படின்னு அவனுடைய திருவடியை தஞ்சம் அடைந்து சரணடைந்து நீயே எனக்கு கதி அப்படின்னு எந்நேரமும் முருக நாமம் ஜெபம் செய்து கொண்டிருந்தால்,

அவன் நம்முடைய மனதில் இருக்கிற குப்பைகளை எல்லாம் அழித்து குமாரனாக நின்று நம்மை தூய்மைப்படுத்துவான் அப்புறம் அதே மனதிற்குள்ளே அவன் குகனாகவும் எழுந்தருளுவான்.

இதுக்கெல்லாம் நம்ம என்ன செய்யணும் தெரியுமா அருணகிரிநாதர் சொல்றாரு உருகும் செயல் தந்து முருகான்னு சொன்னா உள்ளம் உருகனுமா அந்த உள்ளம் உருகாம வாய் மட்டும் சும்மா அந்த நாமா சொல்லி அதுல ஏதாவது பிரயோஜனம் இருக்கா,

இறை வழிபாடு என்பது உண்மையான உருக்கத்தை எப்போது தரும் நம்முடைய மனம் அதில் லயித்துப் போனால் தரும் நாம் மனதார அந்த இறைவனை உணர்கிற போது நமக்கு தரும் பலபேரும் சொல்றாங்க எனக்கு வந்து முருகப்பெருமானை நினைச்சாலோ முருகப்பெருமானை பத்தி பேசினாலோ அப்படியே என்னுடைய கண்களிலிருந்து கண்ணீராய் வருகிறதே அப்படின்னு உண்மைதானே நம்முடைய உள்ளம் அவனிடத்தில் உருகுகிறதே அவனை பார்த்தாலே நமக்கு அவ்வளவு ஒரு பரவசம், அவ்வளவு ஒரு ஆனந்தம் அப்படியே நம்மகிட்ட இருக்கிற எல்லா கவலைகளும் மறந்து, எல்லா துன்பங்களும் மறந்து ஏதோ அவன் ஒரு மிகப்பெரிய இமயமலை அளவுக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தூக்கி நம்ம கையில கொடுத்த மாதிரி அவனை பார்த்த உடனே அப்படி ஒரு இன்பம் வருகிறதே அதீதமான ஆனந்தம் வந்தாலும் கண்களில் இருந்து கண்ணீர் தானே வரும்.

அப்போ உள்ளம் என்பது உருக வேண்டும், உள்ளம் உருகினால் தான் அந்த உருக்கத்தில் இறைவனை காண முடியும், சும்மா நான் கோவிலுக்கு போனேன் சாமி கும்பிட்டேன், அப்படி பார்த்தேன் இப்படி பார்த்தேன்  கடவுள் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் இதெல்லாம் வெளியில, ஆனால் உள்ளம் உருகிவிட்டால் அதற்குப் பிறகு

ஒண்ணுமே வாயிலிருந்து வராது உருகினவன் எப்படி பேசுவான் நீங்க யோசிச்சு பாருங்க உள்ளம் உருகிவிட்டால், எப்படி பேசுவது அது அனுபவமான உண்மை அதை அனுபவிக்கத்தான் முடியும்.

பல நேரங்கள்ல மேடையில் சொற்பொழிவு செய்கிற போதும் சரி அல்லது முருகப்பெருமானைப் பற்றி பேசுகிற போதும் சரி, ரொம்ப நினைச்சு, ரொம்ப ஆத்மார்த்தமா உள்ளன்போடு, அப்படி அவரோடு இணைந்து பேசிவிட்டால் அதற்குப் பிறகு பேசுவதற்கு வார்த்தை வராது அப்புறம் அதுக்கு பிறகு வார்த்தை என்ன பண்ணும் நின்னு போயிடும் அந்த இடத்துல அது நின்றுவிடும்.

அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் ஆகி சமாதானமான பிறகுதான் அந்த வார்த்தை வரும் அப்போ உருக்கம் என்பது வந்துவிட்டால், ஓட்டங்கள் அனைத்தும் நின்றுவிடும்.

அதனால்தான் அடியார்கள் எல்லாருமே சொன்னாங்க, இந்த நாமத்தை சொல்லு அந்த நாமம் உன்னை பண்படுத்தும், அப்ப நீ உருகுவ, உள்ளம் கசிந்து அவனை கும்பிடுவ அதைத்தான் அருணகிரிநாதர் இங்க கேட்கிறார்,

அப்படி உன்னை கும்பிடக்கூடிய நிலை எனக்கு என்னைக்கு நீ கொடுப்ப என்றைக்கு அப்படி ஒரு சிறப்பை எனக்கு நீ அருளுவ அப்படின்னு முருகப்பெருமானிடத்திலே அவர் விண்ணப்பம் செய்கிறார்.

நம்மள பொறுத்தவரைக்கும் நாம இறைவனை வழிபாடு செய்வது என்பதை ஒரு கடமை அப்படின்னு நினைக்கக்கூடாது, முதல்ல அதை மறந்துடனும் அது ஆன்மாவோடு தொடர்புடையது, ஆக முருகா அப்படின்னு எங்க கேட்டாலும் நம்முடைய உள்ளம் அதில் போய் ஒட்டி, அதில் போய் பதிந்து அந்த நாமத்தோடு இரண்டற கலந்து அதையே நம்முடைய மூச்சுக்காற்றாக சுவாசிக்க ஆரம்பித்து விட்டால் அதுக்கு மேல நம்ம வாழ்க்கையில வேற என்ன வேணும்.

அவ்வளவுதான் அதனால எத்தனையோ அடியார்கள் முருகப்பெருமானை வழிபடக்கூடியவர்களுக்கு இந்த முருகன் அடியார்கள் என்ற பெயர்தான் இன்னைக்கும் நிலைத்திருக்கிறது.

அப்ப இந்த நாமத்துக்கு எவ்வளவு சிறப்பு அப்படிங்கறத அதிலிருந்தே நம்ம தெரிஞ்சுக்கலாம். இனிமே எப்ப உங்களுக்கு நாமம் சொல்லணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கனாலும், முருகாங்கிறதை எடுத்துக்கோங்க நின்னாலும் முருகா உட்கார்ந்தாலும் முருகா நடந்தாலும் முருகா பேசினாலும் முருகா தும்முனாலும் முருகா எல்லாமே உண்ணும்போதும் உறங்கும் போதும் முருகச் சிந்தை ஒன்றை நாடும்போதும் நடிக்கும் போதும் முருகச் சிந்தை பாடும்போதும் படிக்கும் போதும் முருகச் சிந்தைன்ற மாதிரி எல்லாமே முருகா முருகா முருகா முருகான்னு கொஞ்ச நாளைக்கு நீங்க பழக்கிட்டீங்க அப்படின்னா

அதுக்கப்புறம் அந்த நாமம் நம்மளே

நினைச்சாலும் நம்ம வாயிலிருந்து போகாது.

அதனால சொல்லி சொல்லி முருகப்பெருமானுடைய நாமத்தை உணர்ந்து,  உருகி, உருகி இந்த நாமங்களின் உடைய பலனை நீங்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் அப்படிங்கறதுக்காக தான் இந்த பதிவு, இனிமே முருகா அப்படின்னு வாயார மனசார உள்ளம் உருகி சொல்லி பாருங்க அந்த நாமத்துல எவ்வளவு சுவை இருக்கிறது அப்படிங்கறத நீங்க கண்டிப்பா உணர்வீங்க.

Also Read: அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

Also Read: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

Also Read: முருகப் பெருமானின் அறுபடை வீட்டிற்கான திருப் புகழ் 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments