Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஆன்மீக தகவல்கள்முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship...

முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan

முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan

48 days fasting lord muruga bakthi news

முருகப்பெருமானை நினைத்து தொடர்ந்து 48 நாட்கள் இருக்கக்கூடிய விரதத்தை எவ்வாறு துவங்குவது என்ன முறையில அந்த விரதங்களை கடைபிடிப்பது அப்படிங்கிற தகவல்கள் அனைத்தையும் இந்த பகுதியில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்

அநேகம் பேருக்கு முருகப்பெருமானை நாங்க வழிபாடு பண்றோங்க ஆனா தொடர்ந்து அவரை நினைத்து ஒரு விரதம் இருக்கணும், அப்படின்னா ஒரு 48 நாட்கள் என்ன விரதமாக அதை நாம் இருக்கலாம், அப்படின்னு நிறைய பேர் கேக்குறீங்க, முருக பெருமானுக்கு அதிகபட்சமாக ஒரு நீண்ட நெடிய நாட்கள் இருக்கக்கூடிய தொடர் விரதம், அப்படிங்கறது என்னன்னா கந்த சஷ்டி, மகா கந்த சஷ்டி அப்படின்னு நாம் சொல்லக்கூடிய தீபாவளியை ஒட்டி வரக்கூடிய சஷ்டி விரதம் அதுதான்.

நமக்கு ஏழு நாட்கள் இருக்கக்கூடிய விரதம், அதற்குப் பிறகு வாரம் வாரம் இருக்கக்கூடிய விரதம் அப்படின்னு பார்த்தீங்கன்னா கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சோமவார விரதம்.

இப்ப சில பேர் பேருக்கு என்ன ஒரு சந்தேகம் அப்படின்னா நாங்க ஒரு காரியம் நடக்கணும், அப்படின்னு நினைக்கிறோம் அந்த நடக்கணும்னு நினைக்கிற காரியம் முருகப்பெருமானை வேண்டிக்கிட்டு ஒரு 48 நாள் ஒரு விரதமாக இருந்து செய்யலாமா அப்படின்னு கேக்குறீங்க, தாராளமாக செய்யலாம் அதை எப்ப துவங்குவது

எப்படி அந்த விரதம் இருப்பது அப்படிங்கறதுல நிறைய குழப்பம் இருக்கு முருகனை நோக்கி நாம விரதம் இருக்கிறோம்.

அப்போ முருகப்பெருமானுக்கு எது உகந்த காலங்கள் அப்படிங்கறத முதல்ல நாம தீர்மானம் பண்ணனும் செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை கூட முருகப்பெருமானை நினைத்து விரதத்தை எடுத்துக்கொள்ளலாம்.

வாய்ப்பு இருக்கு அப்படின்னா இல்ல இந்த கிழமைகள் அப்படிங்கறது எங்களுக்கு சரியா ஒத்து வரல அப்படின்னா, நாங்க ஏதாவது ஒரு விடுமுறை நாள்ல இருந்து நாங்க ஆரம்பிக்க போறோம் அப்படின்னா ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நீங்க இதை ஆரம்பித்துக் கொள்ளலாம்.

அதுல திதி பார்த்து நீங்க ஆரம்பிக்க போறீங்க நட்சத்திரம் பார்த்து ஆரம்பிக்க போறீங்க அப்படின்னா, முருகனுக்கு உகந்த விசேஷமான திதிகள் நட்சத்திரங்கள் நிறையவே இருக்கு, அதுல வந்து நமக்கு சஷ்டி அப்படிங்கறது ரொம்ப ரொம்ப முக்கியமானது, அது நீங்க பார்த்தீங்கன்னா ஒரு மாதத்துக்கு ரெண்டு சஷ்டி வரும், ஒன்னு வளர்ப்பிறையில வரும், இன்னொன்னு தேய்ப்பிறையில வரும். ஆக வளர்ப்பிறை சஷ்டியும் நல்லது தேய்ப்பிறை சஷ்டியும் நல்லது.

நீங்க ஏதாவது ஒரு சுபகாரியம் நடக்கணும் ஒரு செல்வம் வரணும், எனக்கு வாழ்க்கையில் ஒரு வளர்ச்சி வரணும், அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா வளர்ப்பிறையிலிருந்து ஆரம்பிங்க.

கடன் நீங்கணும் எனக்கு இருக்கிற துன்பங்கள், நீங்கும் அதாவது பிரச்சனைகள் தேய வேண்டும், என்று நினைத்தால் தேய்ப்பிற சஷ்டியில இருந்து ஆரம்பிச்சுக்கோங்க, ஆக சஷ்டி அப்படிங்கிற திதியை நீங்க காலண்டர்ல பார்த்தீங்கன்னாலே கொடுத்திருப்பாங்க, அந்த சஷ்டி திதியை தீர்மானம் பண்ணிக்கலாம், அதுக்கப்புறமா விசாக நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம்.

இதுபோல முருகப்பெருமானுக்கு விசேஷமான இன்னொன்னு பூச நட்சத்திரம் இதெல்லாம் மாசம் தோறும் நமக்கு வரக்கூடிய நட்சத்திரங்கள் தான்.

அதெல்லாம் என்னைக்கு வருது அப்படின்னு பார்த்துக்கோங்க, எல்லாருக்கும் ஒரே நாள்ல ஆரம்பிங்க அப்படின்னா, அது எல்லாருக்கும் ஒத்து வரும்.

அப்படின்னா கிடையாது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கால சூழ்நிலை இருக்கு இப்ப ஒரு பெண்கள் ஆரம்பிக்கணும்னா மாதவிடாய் முடிஞ்சு

அவங்க ஆரம்பிக்கணும் 48 நாட்கள் அவங்க எடுத்துட்டு போகணும்னா எப்படி ஆரம்பிக்கிறது மாதவிடாய் முடிச்சு நீங்க எப்படி நம்ம பூஜை அறைக்கு போவோமோ

அதை முதல் நாளாக கணக்கிட்டு ஆரம்பிங்க 27 நாள் 28 நாள்தான் நம்ம எடுக்க முடியும் தொடர்ந்து ஒரு விரதம்னு எடுத்தா அந்த 27 நாள்லையோ 25 நாள்லையோ நீங்க மாதவிடாய் ஆயிட்டீங்கன்னா அதோட அந்த விரதத்தை நிறுத்திக்கோங்க.

திரும்ப எப்ப பூஜை அறைக்கு போக போறீங்களோ, அதிலிருந்து மறுபடி நீங்க வந்து 28 29 30 அப்படின்னு கணக்கு வச்சிட்டு போனீங்கன்னா தான் பெண்கள் 48 நாள்ல பூர்த்தி பண்ண முடியும்.

ஆண்கள் கணக்கே இல்ல, நீங்க ஆரம்பிச்சதுல இருந்து பூர்த்தி பண்ணிக்கலாம் அதனால அவரவர்களுடைய சௌகரியத்துக்கு ஏற்ற மாதிரிதான் இவ்வளவு நெறிமுறைகளை உங்களுக்கு சொல்றேன்.

இதுல உங்களுக்கு எது சௌகரியமா இருக்கோ முதல்ல அந்த நாளை தீர்மானம் பண்ணிக்கோங்க தேர்வு செய்து கொண்டு பக்கத்துல முருகர் கோயில் இருக்கு

அப்படின்னா அங்க போய் முருகப்பெருமானை வழிபாடு பண்ணி எதுக்கு விரதம் இருக்க போறீங்க அப்படிங்கிறதை முருகப்பெருமான்ட்ட சொல்லிட்டு

அந்த விரதத்தை ஆரம்பிங்க பக்கத்துல கோயில் இல்லைங்க நாங்க வேற மாநிலத்துல இருக்கிறோம் வேற ஊர்ல இருக்கிறோம் அப்படிங்கிறீங்களா

வீட்டிலேயே முருகருடைய படம் வச்சு முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு மலர் உங்களுக்கு சிவப்பு நிறத்திலயோ மஞ்சள் நிறத்திலேயோ மலர் கிடைச்சா அது போட்டுக்கலாம் இல்லை.

எங்களுக்கு வெள்ளை நிறத்துலதாமா கிடைச்சிருக்கு அப்படின்னா பரவாயில்லை தாராளமா நீங்க போட்டுக்கலாம் ஏதாவது ஒரு மலர் சாத்தி முருகப்பெருமானுக்கு

ஒரு நெய்வேத்தியமா பால் அந்த பால்ல சர்க்கரையோ அல்லது தேனோ கலந்து வச்சுக்கோங்க இல்ல தேன் தினை மாவு கிடைக்குது

அப்படின்னா அதை கலந்து சுவாமிக்கு நெய்வேத்தியமா வச்சுக்கோங்க ஏதாவது ஒரு இனிப்பு பாயாசம் வைக்கிறீங்கன்னா வச்சுக்கோங்க பொங்கலே செய்ய முடியுமா எங்களால அப்படின்னா ஒரு சர்க்கரை பொங்கல் செஞ்சு வச்சுக்கோங்க

எது உங்களால முடியுமோ அதை ஏதாவது ஒரு எளிமையான ஒரு நெய்வேத்தியத்தை வச்சுக்கோங்க பதிகம் என்ன படிக்கலாம் இப்ப பொதுவா கஷ்டங்கள் தீரணும் எங்க மனசுல இருக்கிற சுமைகள் தீரணும் பாரங்கள் தீரணும்

ஏதோ ஒரு ஒரு நல்லதே எங்களுக்கு நடக்க மாட்டேங்குது எங்க வாழ்க்கையில ஒரு முன்னேற்றமே இருக்க மாட்டேங்குது அப்படிங்கிறீங்களா

lord muruga

கந்த சஷ்டி கவசம் படிங்க, ஷண்முக கவசம் நோய் இருக்கிறவங்க நோய் நீங்குவதற்கு சண்முக கவசம் பாராயணம் பண்ணுங்க,

திருப்புகழ்ல அநேகமான திருப்புகழ் இருக்கு, குழந்தை வேணும்னாலும் திருப்புகழ், இருக்கு, நோய் நீங்கணும்னாலும் திருப்புகழ் இருக்கு சொந்த வீடு வேணும்னாலும் திருப்புகழ் இருக்கு

அதுபோல திருப்புகழை நீங்கள் பாராயணம் பண்ணலாம் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா இப்படி நிறைய இருக்கு.

உங்களுக்கு எது தெரியுமோ எளிமையாக படிக்கக்கூடியது தான்,

இது எல்லாமே இதுல ஏதாவது ஒன்னை தீர்மானம் பண்ணிக்கோங்க தேர்வு பண்ணிக்கிட்டு அதை நீங்க முருகப்பெருமானிடத்திலே விண்ணப்பம் பண்ணி

அந்த திருப்புகழை பாடி இப்போ ஒருத்தர் கல்யாணம் ஆகணும் அப்படின்னு வேண்டிக்கிறாருன்னு வச்சுக்கோங்களேன்.

விரல் மாறணைந்து மலர்வாழி சிந்த மிகவான் நெளிந்து வெயில் காய அப்படிங்கிற திருச்செந்தூர் திருப்புகழும் நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே அப்படிங்கிற திருப்புகழ் இரண்டே திருப்புகழ் தான் இந்த ரெண்டு திருப்புகழை பாராயணம் பண்ணுங்க.

இந்த நெய்வேத்தியத்தை சுவாமிக்கு நெய்வேத்தியம் பண்ணுங்க முடிஞ்சது அப்படின்னா ஒரு பொழுதேனும் உபவாசமாக இருக்கலாம்.

48 நாளும் தொடர்ந்து உபவாசமாக இருக்க நம்மளால முடியாது.

அதனால ஏதாவது ஒரு பொழுது அதிலேயும் எளிமையாக இப்ப சுவாமிக்கு ஒரு நெய்வேத்தியம் பண்றோமா அந்த நெய்வேத்தியத்தை சாப்பிட்டுக்கோங்க.

காலையில இதை பண்ணிட்டீங்கன்னா மதியத்துல இருந்து நீங்க உணவு எடுத்துக் கொள்ளலாம் அல்லது காலையிலும் மதியமும் உணவு எடுத்துக்கிட்டு இரவு எளிமையாக பாலோ பழமோ அல்லது ஒரு ஜூஸோ

அந்த மாதிரி ஏதாவது ஒன்னு குடிச்சுக்கலாம் இது உடம்பு ஆரோக்கியமா இருக்கிறவங்களுக்கு நான் எப்போதும் சொல்ற அடுத்த வசனம் என்ன உடல்நிலை சரியில்லையா கவலையே பட வேண்டாம் மூன்று வேளையும்

நீங்க எடுத்துக்கிற உணவு எடுத்துக்கோங்க ஆனா சைவம் எடுத்துக் கொள்வது அப்படிங்கறது முக்கியமானது இப்ப பெண்களுக்கு நிறைய கேள்வி இருக்கும்

நாங்க சைவம் தான்மா சாப்பிடுவோம் ஆனா எங்க வீட்ல பிள்ளைகளுக்கு கணவருக்கு மாமனார் மாமியாருக்கு எல்லாம் சமைச்சு கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கே

அப்படின்னா நீங்க தான் சைவமா இருக்கணும் அவர்களுக்கு செய்ய வேண்டியது உங்கள் கடமை அதை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் நீங்க சைவமா இருந்துக்கோங்க விரதம் இருக்கக்கூடியவர்கள்

சைவத்தை கடைபிடித்துக் கொள்ளலாம் இதற்கு அப்புறமா நாம அன்றாடம் செய்யக்கூடிய நம்முடைய பணிகளை தாராளமாக செய்து கொண்டே இருக்கலாம் இதுல எதுவும் வந்து நமக்கு இது பிரச்சனையா

அது பிரச்சனையா இங்க போலாமா வேலைக்கு போலாமா வெளியில போலாமா வேற கோயிலுக்கு போலாமா வேற சாமியை கும்பிடலாமா இந்த மாதிரி எந்த சந்தேகமும் வேண்டாம் வழக்கமா நாம எப்படி நம்முடைய இயல்பான வேலைகளை செய்வோமோ அதை செய்வோம்,

காலையிலயும் மாலையிலயும் ஷடோண தீபம் ஏற்றி ஏற்கனவே நான் உங்களுக்கு ஷட்கோண தீபம் எப்படி ஏத்துறதுன்னு சொல்லி இருக்கேன் இருந்தாலும் இந்த படத்துல நான் காட்டுறேன் காலையிலயும் மாலையிலயும்

சட்கோண தீபம் ஏற்றி முருகப்பெருமானுடைய ஓம் சரவண பவ அப்படிங்கிற அந்த மந்திரத்தை ஜெபம் பண்ணிக்கொண்டே இருங்க.

அந்த 48 நாளும் வேற எந்த சிந்தனையும் இல்லாம நீங்க என்ன வேலை வேணாலும் செய்யலாம் பஸ்ல போலாம் ட்ரெயின்ல போலாம் அலுவலகத்துல போய் வேலையில உட்கார்ந்து இருக்கலாம் ஆனா மனசுக்குள்ள ஓம் சரவணபவ ஓம் சரவணபா அப்படிங்கிற அந்த நாமம் நமக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கணும்.

அதுக்கு பயிற்சியாதான் காலையிலயும் மாலையிலும் நீங்க சாமி கும்பிடும்போது ஒரு 108 முறை அந்த நாமத்தை நீங்க சொல்லி பயிற்சி எடுத்தீங்க.

அப்படின்னா அந்த இறைச்சிந்தனையோடயே அந்த நாட்களை நம்மால் நகர்த்த முடியும் இது மிக மிக முக்கியமானது ஒரு கடுமையான விரதம் தான்.

இது 48 நாட்கள் தொடர்ந்து ஒரு கடவுளை கும்பிடனும் அப்படின்னு ஆரம்பிக்கும் போதே நமக்கு நிறைய சோதனைகள் வரும்

நான் அதை இப்பவே உங்களுக்கு சொல்லிடுறேன் பத்து நாள் செஞ்சோமா அதுக்கு மேல என்னால செய்ய முடியல

ஒரு வாரம் செஞ்சோமா அதுக்கு மேல என்னால செய்ய முடியல அப்படிங்கிற சோதனைகள் எல்லாம் வரும் ஒரு மாணவர் பத்தாவது படிக்கிறார் வச்சுக்கோங்க பத்தாவதுல இருந்து 11வதுக்கு அவர் போகணும்

அப்படின்னா ஒரு பள்ளியில அந்த மாணவனுக்கு எவ்வளவு சோதனைகள் வைக்கிறாங்க சோதனைன்னா பரீட்சை எவ்வளவு பரீட்சைகள் வைக்கிறாங்க இத்தனை பரீட்சையும் ஏன் என் பிள்ளை எழுதணும்

அப்படின்னு நினைச்சா 11வதுக்கு அந்த பையன் போக முடியுமா 12வது போக முடியுமா காலேஜ் போக முடியுமா பையன் சம்பாதிக்க முடியுமா முடியாது

அப்ப வாழ்க்கையில பலக்கட்ட சோதனைகளை இந்த ஆத்மா கடந்து வருகிற போதுதான் அது ஒரு வெற்றி அப்படிங்கிற இலக்கை அதனால் அடைய முடியும் முடியும் 48 நாள் வைராக்கியமா எடுத்து

நாங்க இந்த விரதத்தை முடிச்சிட்டோம்னா கண்டிப்பா இது நடந்துருமா அப்படின்னு கமெண்ட்ஸ்ல கண்டிப்பா நீங்க கேட்பீங்க இப்பவே நான் ஒரு விஷயம் உங்களுக்கு சொல்றேன்

நீங்க தெளிவா தெரிஞ்சுக்கோங்க 48 நாள் அப்படிங்கறது ஒரு மண்டலம் அப்படின்னு நமக்கு சொல்லுவாங்க யார் ஒருத்தர் ஒரு மண்டல காலத்திற்கு வைராக்கியமா ஒரு விஷயத்தை நான் செய்தே தீருவேன் அப்படின்னு உறுதியோடு செய்கிறார்களோ அவர்களுக்கு உண்மையிலேயே

அந்த காரியம் கைகூடக்கூடிய நேரம் வந்து விட்டது அப்படின்னு அர்த்தம் அந்த நேரம் வந்தாதான் இந்த பதிவையே உங்களால கேட்க முடியும் நான் சொல்றத எல்லாருமா கேட்டுறாங்க இல்ல இல்ல

அப்ப இந்த பதிவை நீங்க கேக்குறீங்க அப்படினாலே உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது அப்படின்னு அர்த்தம் நீங்க அதை கடைபிடிக்கிறீங்க அப்படின்னாலே நீங்க நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள

முருகன் உங்களை அழைக்கிறார் அப்படின்னு அர்த்தம் இது எல்லாமே இருந்தாதான் நம்மளால விரதத்தை ஆரம்பிக்க முடியும் அப்ப ஆரம்பிச்சுட்டோம்னா

அவன்கிட்ட நாம முழுமையா என்ன பண்ணிரனும் சரணாகதியா அடைஞ்சிடனும் நான் எவ்வளவோ நான் முயற்சி பண்ணேன் முருகா என்னால முடியாது நீதான் என்ன காப்பாத்தனும் கலியுகத்தின்

கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய உன்னுடைய திருவடிகளை நான் பிடிச்சிருக்கிறேன் நீ அருணகிரிநாதருக்கு அருள் பண்ணின பாம்பன் சுவாமிகளுக்கு அருள் பண்ணின

வள்ளல் பெருமானாருக்கு அருள் பண்ணின எனக்கும் நீ அருள் பண்ணனும் அப்படின்னு அவரை உறுதியா இருக்கமா பிடிச்சு நம்பிக்கையோட 48 நாள் எனக்கு தா எனக்கு தா எனக்கு தா அப்படின்னு கேட்டா

முருகன் தராமலா போயிருவார் அப்ப அந்த நம்பிக்கை அந்த உறுதி வழிபாடு என்பது

இந்த 48 நாட்கள் ஒரு மண்டலம் நமக்குள்ளே பிறக்கிறபோது நாம் நினைத்த காரியம் நிறைவேற்றுவதற்கு உண்டான சூழல் அங்கே தானாக உருவாகிவிடும் ஆக இது அதி அற்புதமான பலன்களை நமக்கு பெற்றுத் தருவதற்கு

நாமே தான் முயற்சி செய்யணும் நமக்கு வேணும்னா நாம தான் செஞ்சுக்கணுமே தவிர நான் போய் நான் கும்பிட்டேன் எனக்கு கிடைக்கல நான் போன வருஷம் வரதா இருந்தேன் நான் இந்த வருஷம் வரதா இருந்தேன் இருந்தேன்

அப்படின்னா வருஷத்துக்கு ஒரு முறை தானே கேட்கிறோம் ஆனா இது அப்படி இல்ல 48 நாட்கள் தொடர்ந்து ஒரு குழந்தை ஒரு அப்பாகிட்ட தினம் எனக்கு சாக்லேட் வாங்கி  கொடு சாக்லேட் வாங்கி கொடு சாக்லேட் வாங்கி கொடுன்னு கேட்டுக்கிட்டே இருந்தா ஒரு பத்து நாள் கழிச்சு அப்பாவுக்கு மனசு இறங்கிராதா கண்டிப்பா அவர் வாங்கிட்டு வரமாட்டாரா

அப்பாவுக்கே இவ்வளவு மனம் இறங்குதே எத்தனையோ பிறவிகளாக நமக்கு தகப்பன் சுவாமி அப்படிங்கிற பெயரோடு இருந்து அனுக்கிரகம் பண்ற முருகப்பெருமானுக்கு நம்மேல இரக்கம் வராமலா போகும்

அதனால கண்டிப்பாக முருகன் அருளுவார் நம்பிக்கையோடு அந்த விரதத்தை நீங்கள் இருந்து பாருங்கள் நிச்சயமாக முருகப்பெருமானுடைய அருள் கிடைக்கும் இதுல நிறைய பேர் வந்து இந்த விரதம் இருக்கிற

காலத்துல இல்லற வாழ்க்கை அப்படிங்கறது ஈடுபடலாமா அப்படின்னு சில பேருக்கு ஒரு சந்தேகம் வரும் குழந்தைக்காக இருக்கக்கூடியவர்கள் மட்டும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாது 48 நாட்கள் கழித்து தங்களுடைய வாழ்க்கையை துவங்குதல் அப்படிங்கறது

சிறப்பானது மற்றவர்களுக்கு இந்த விதி பொருந்தாது ஏன் நான் குழந்தைக்காக காத்திருக்கிறவங்களுக்கு மட்டும் இதை சொல்றேன் அப்படின்னா ஒரு கருமுட்டை நன்றாக வளர்ச்சி

அடைந்து விந்தணு நன்றாக வளர்ச்சி அடைகிறது அப்படின்னு சொன்னா நிச்சயமாக அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான கரு உருவாகுவதற்கு உண்டான

ஒரு கால அவகாசத்தை நாம கொடுக்கிறோம் அப்படின்னு அர்த்தம்

அந்த ஒரு அவகாசம் இந்த 48 நாள் ஒரு மண்டல காலம் அப்படிங்கறதுக்குள்ள ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நல்ல உடல் ரீதியான மாற்றத்தையும் மனரீதியான மாற்றத்தையும் முருகன் அருளோடு பிறக்க கூடிய ஒரு

அருளான குழந்தையும் அவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அதனால அவர்கள் மட்டும் இந்த விதியை கடைபிடிச்சுக்கோங்க

மற்றவர்கள் நீங்க இயல்பா எப்படி உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இருப்பீங்களோ அதுபோல உங்களுடைய வாழ்க்கையை எடுத்துக்கோங்க சிறப்பாக இந்த விரதம் இருங்க இந்த விரதம்

இருக்கும்போது இன்னொரு விஷயமும் ஞாபகம் வச்சுக்கோங்க எல்லார்கிட்டயும் போய் நான் 48 நாள் விரதம் நான் 48 நாள் விரதம் நான் 48 நாள் விரதம் அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க

அமைதியா உங்க குடும்பத்துக்கு மட்டும் தெரிஞ்சா போதும் உங்க கணவருக்கோ உங்க அப்பா அம்மாவுக்கோ உங்களை சுற்றி இருக்கிறவங்களுக்கு மட்டும் சொல்லுங்க

இந்த விரதத்தை இருந்து பாருங்க முருகப்பெருமானுடைய அருளோடு நீங்கள் நினைத்த காரியம் நிச்சயமாக நிறைவேறும்.

Also Read: ஆன்மீக தகவல்கள்

Also Read: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

Also Read: அறுபடை வீடு 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments