Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஜோதிடம்வார ராசி பலன்மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் நவ.14 – 20

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சந்திரன் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சூரியன் – அஷ்டம ஸ்தானத்தில் புதன்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் இருந்தத் தடைகள் அகலும். புதிய வீடு வாகன சேர்க்கை ஏற்படும். பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சாதுர்யமாக சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். பெண்களுக்கு தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். பெற்றோர் ஆசிரியர்கள் ஆதராவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருக்கும் மனத்தாங்கல்கள் அகலும்.

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ப்பணித்து வர இடர்பாடுகள் அகலும்.

 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் குரு (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் – களத்திர ஸ்தானத்தில் புதன்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த கடன் சுமை நீங்கும். பங்குதார்களுக்குள் இருந்து வந்த வேற்றுமை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். மேலிடத்தின் கருணை கிடைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

 

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்(வ) – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு நீடிக்கும்.

பரிகாரம்: புதன் அன்று லட்சுமிநரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழில் போட்டிகள் குறையும்.

 

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சூரியன் – பஞ்சம ஸ்தானத்தில் புதன்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்லுவீர்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வேற்று மதத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர் சீராகக் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் வெற்றிபெறும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சினை, தொழில் பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகும்.

 

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் – சுக ஸ்தானத்தில் புதன் (வ) – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் குரு (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அதீத கவனம் தேவை.

முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும்.

தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு குழப்பம் நீங்கும். அரசிய்லவாதிகளுக்கு பதவி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் பைரவரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன்(வ) – சுக ஸ்தானத்தில் சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூர்யன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல்கள் அகலும் . மனக்கவலை நீங்கி சந்தோஷம் உண்டாகும். சொன்ன வார்த்தையை காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உதிக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு.

உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுந்து வந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு வீண் பழி ஏற்படலாம்

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

 

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சூரியன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன்(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு வேலைப்பளு ஏற்படும். அரசியல்வாதிகளின் மீது மேலிடத்தின் கவனம் விழும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – ராசியில் புதன்(வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும்.

பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சக தோழர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சூரியன் – அயன சயன போக ஸ்தானத்தில் புதன்(வ) என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து இடுதல் கூடாது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். நீண்ட காலமாக நிலவி வந்த வெறுமை நிலை மாறும்.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன் – லாப ஸ்தானத்தில் புதன்(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம்.

குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் குரு (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் – தொழில் ஸ்தானத்தில் புதன்(வ) – லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவர்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.

தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள்.

செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். கலைத்துறையினருக்கு பயணங்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய நோக்கம் உதயமாகும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ) – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து கூடும். உடல் சோர்வு நீங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருந்தினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு காரியங்களில் வேகம் பிடிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் பிறக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று நவக்கிரகங்களை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சினை தீரும்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments