திருத்தணியில் முருகனை எப்படி வணங்குவது
அறுபடை வீட்டில் ஐந்தாவது படை வீடு, திருத்தணி திருத்தலம் ஆகும்
நம் மனதில் ஏற்படும் தேவையற்ற பயங்களை நீக்கி, வாழ்வில் தரும பலன்களை பெற்று தரக் கூடிய படை வீடு
குன்று இருக்கும் இடம் எல்லாம், குமரன் இருக்கும் படை வீடு என்பதை மெய்ப் பிக்கும் விதமாக அமைந்த படை வீடு
குமரன் என்றால் அழகன், குமரன் என்ற வார்த்தையில் உள்ள இலக்கணத்தை, ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு விதமாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது
வள்ளியை மணம் புரிய வேண்டும் என்று அமர்ந்த மலை இந்த திருத்தணிகை மலை.
வள்ளி அம்மையார் நலத்தை வாரி வாரி வழங்கக் கூடியவர்
இச்சா சக்தியாக விளங்க கூடிய வள்ளி அம்மையாரை மணம் புரிய வேண்டும் என்று சொல்லி, முருகன் சினம் தணிந்து வந்து அமர்ந்த மலை என்பதாலே இம் மலைக்கு சிறுத்தணிகை மலை என்ற பெயர் பெற்று பின்பு, திருத்தணிகை என்று மருவி வந்தது.
இந்த திருத்தணிகை மலைக்கு சென்று வழிபடும்போது நமக்கு என்னவெல்லாம் சிறப்பு கிடைக்கும் என்றால், இந்த முருகப் பெருமான் தருமம் செய்த பலன், அதாவது
நாம் பிறருக்கு செய்யக் கூடிய தருமம், தானம்
தருமம் என்பது வேறு, தானம் என்பது வேறு
தன்னை விட மேலானவருக்கு ( வசதியானவர்) கொடுப்பது தானம்
தன்னை விட கீழானவருக்கு (வசதி இல்லாதவருக்கு ) தருவது தருமம்.
உதாரணத்திற்கு ஒரு மஹானுக்கு பட்டு எடுத்து கொடுத்தால் அது தானம்,
ஒரு ஏழைக்கு துண்டு எடுத்து கொடுத்தால் அது தருமம்
தானம் வேறு, தருமம் வேறு
தானம் செய்யாமல் கூட வாழ்ந்து விடலாம், ஆனால் தருமம் செய்யாமல் வாழவே கூடாது என்று சொல்கிறது நம்முடைய நியதிகள்
தருமச் சிந்தனை நம்முள் எழ வேண்டும் என்று முருகப் பெருமான் திருத்தணியில் எழுந்து அருள் பாலிக்கிறார்
இம் மலைக்கு சென்று முருகப் பெருமானை நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே, நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் வாழ்வில் கிடைக்கும் என்பது பெரும் நம்பிக்கை
இந்த திருத்தணிகை மலை பற்றி அருணகிரி நாதர் குறிப்பிடும் போது, மலை மீது அமைந்துள்ள முருகப் பெருமான் ஆலயங்களிலே, மிகவும் உயர்ந்த மலை இச் திருத்தணிகை மலை ஆகும்.
இங்கு இருக்க கூடிய முருகன் மகிழ்ச்சியான வாழ்க்கையை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வழங்கக் கூடியவர்.
Also Read: திருத்தணி திருத்தலத்திற்கான திருப்புகழ்
Also Read: திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டால் என்ன கிடைக்கும்
Also Read: திருச்செந்தூர் முருகன் கடலைப் பார்த்து ஏன் காட்சி தருகிறார்