திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டால் என்ன கிடைக்கும்
கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்கக் கூடிய கந்தக் கடவுள் குடியிருந்து, அருள் புரியக் கூடிய இடங்களை நாம் அறுபடை வீடுகள் என்று குறிப்பிடுகின்றோம்.
இந்த அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபடக் கூடிய அனைவருக்கும் வாழ்வில் வேண்டிய நலன்கள் எல்லாம் நாம் பொதுவாக படித்து, கேட்டு அனுபவித்து கொண்டு இருக்கின்றோம்
ஆனால் ஒவ்வொரு படை வீட்டிற்கும் ஒரு தனிப் பெரும் சிறப்பு உண்டு,
அப்படி ஓவ்வொரு படை வீடு முருகனும் எதை நமக்கு அருள வல்லார் என்பதை இப்பதிவில் காண்போம்
ஒரு படை வீட்டுக்கு செல்லும் போது, இப் படை வீட்டு முருகன் எதை நமக்கு அருள வல்லவர்
எல்லா ஆலயங்களில் உள்ள முருகனும், நமக்கு எல்லா விதமான நலன்களையும் நமக்கு அருளி விடுவாரா என்பது கேள்விக்கு உரிய விஷயம்
ஆகவே ஒவ்வொரு திருத்தலங்களிலும் இருந்து அருள் புரியக் கூடிய முருகப் பெருமான், ஒவ்வொரு வகையான நன்மைகளை வழங்க கூடியவர்
அதில் முதல் படை வீடாக நமக்கு வரிசைப் படுத்தப் பட்டது திருப்பரங்குன்றம்
நக்கீரர் திருமுருகாற்றுப் படையை துவங்கிய திருத்தலம் இத் திருப்பரங்குன்றம்
தென் திருப்பரங்குன்றம் என்று அழைக்கப் பெற்று தற்போது திருப்பரங்குன்றம் என்று அழைக்கப் பெரும் திருத்த தலம் இத் திருப்பரங்குன்றம்
படை வீடுகளில் முதல் படை வீடு
முருகப் பெருமான் மணந்த கோலத்தில் காட்சி தரும் அற்புதமான படை வீடு
மதுரையில் இருந்து ஐந்து கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம்
இது ஒரு குடைவரைக் கோவில்.
இங்கு முருகப் பெருமான் மட்டுமல்லாது, விநாயகர், காளி தேவி, சிவன் அது மட்டுமல்லாது பெருமாளும் இருந்து அருள் புரியக் கூடிய கருவறை அமைந்துள்ள அற்புதமான ஆலயம்.
இந்த ஆலயத்தினுடைய தனிச் சிறப்பாக, சனி பகவான் இங்கு தனி சன்னதியாக இருந்து அருள் பாலிக்கிறார்.
நிலம் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைத்து, முருகப் பெருமான் நம் வாழ்வில் நிலத்தை நமக்கு சொந்தமாக அமைத்து கொடுக்க கூடிய வல்லமையும் இந்த பெருமானுக்கு உண்டு
இங்குள்ள முருகப் பெருமானை வழி படுவோருக்கு வாழ்வில் திருமணத் தடைகள், தோஷங்கள் இவை அனைத்தும் நீங்கும்
எம்பெருமான் தெய்வானையை மணந்து கொண்ட தலம் ஆதலால், நம் வாழ்விலும் திருமணத்தை அமைத்துக் கொடுக்க கூடியவர்.
சிலருக்கு திருமணத்தில் ஏற்படும் தடங்கல்கள், நிச்சத்திய திருமணம் தடை படுதல், கால தாமதம் ஏற்படுதல் இப்படி எப்படிப் பட்ட திருமண சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவரானுலும் திருப்பரங்குன்றம் சென்று முருகப் பெருமானை உள் அன்போடு தரிசித்து, சிவ பெருமான், விநாயகர், காளி தேவி மற்றும் பெருமாளையும் தரிசித்து,
நம் கையால் உணவு கொண்டு சென்று, அடியார்களுக்கு உணவளித்து வழி பட்டு வந்தால் முருகப் பெருமான் அருளோடு எப்படிப்பட்ட திருமண தோஷங்கள் என்றாலும் விரைவிலேயே நீங்கி விடும்
முதற் படை வீடே, மணத்தில் துவங்கும் படை வீடு, வாழ்க்கையில் திருமணம் தானே நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரக் கூடியது
எது நம் வாழ்வில் அத்தியாவசிய தேவையோ அவை அனைத்தையும் நிறைவேற்றி தரக் கூடிய கந்த கடவுள், இங்கே திருமணத்தை அமைத்து கொடுக்க கூடிய பெருமானாக நமக்கு காட்சி தருகிறார்.
திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை நாம் தரிசித்து வாழ்வில் எல்லா விதமான நலன்களையும் பெறலாம்
Also Read: திருப்பரங்குன்றம் திருத்தலத்திற்கான திருப்புகழ்