திருச்செந்தூர் முருகன் கடலைப் பார்த்து ஏன் காட்சி தருகிறார்
இரண்டாவது படை வீடாக அமைந்து இருக்க கூடிய அற்புதமான திருத் தலம் திருச்செந்தூர்
செந்தில் ஆண்டவனாக, சுப்ரமணிய சுவாமி என்கிற பெயரிலும், ஜெயந்தி நாதராக முருகப் பெரும் அருள் பாலிக்க கூடிய அற்புதமான திருத் தலம் திருச்செந்தூர்
இந்த திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்தால் வாழ்வில்
என்ன நலன் கிடைக்கும் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்வோம்
பிறவி என்கின்ற பெருங் கடலில் விழுந்து தத்தளிக்க கூடிய நம் ஒவ்வொருவருக்கும், பிறவாமை என்கின்ற பெரும் பேற்றை அருளக் கூடியவர் செந்தில் ஆண்டவர்.
செந்தில் ஆண்டவர் நமக்கு தரக் கூடிய கருணை பிறவாமை.
பிறந்தால் தானே நமக்கு வீடு வேண்டும், கல்வி வேண்டும், செல்வம் வேண்டும், நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் மற்றும் முக்தி வேண்டும் என்று அனைத்தையும் கேட்க தோன்றும்
பிறக்கவே இல்லை என்றால், எதை பற்றிய கவலையும் நமக்கு இல்லை, எதை பற்றிய சிந்தனையும் நமக்கு இல்லை
ஆகவே பிறவாமை என்னும் பெரும் வரத்தை நமக்கு பெற்று தரக் கூடிய அற்புதமான நாதராக விளங்கக் கூடியவர் சுப்ரமணிய சுவாமி என்கின்ற முக்தி
சுவாமி என்றாலே அது முருகப் பெருமானை குறிக்க கூடியது
சுப்பிரமணியர் என்கிற நாதம் தான் வேதத்தில் ஓத பட்டது
அதனால் தான் இங்கே முருகப் பெருமான் பூஜா மூர்த்தி என்கின்ற பெயரோடு விளங்குகின்றார்
பூஜா மூர்த்தி என்றால் பூ – பூர்த்தி செய்தல், ஜா – உண்டாக்குதல்
மலர், மாய கர்மங்களை பூர்த்தி செய்து, சிவ ஞானத்தை உண்டாக்குவது பூஜா
திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்கும் போது அவரது கையில் ஒரு மலர் இருக்கும்.
முருகப் பெருமான், பஞ்ச லிங்கங்களை வைத்து பூஜை செய்கிறார் சிவ பெருமானை
ஈசானம், தத் புருஷம், அகோரம், வாம தேவம், சத்தியாஜூதம் என்கின்ற ஐந்து லிங்கங்களை வைத்து தன்னுடைய தந்தையாரை பூஜை செய்கிறார் முருகப் பெருமான்.
முருகப் பெருமான் ஒவ்வொரு மலராக அர்ச்சிக்கிறார் சிவ பெருமானை, அவ் வாறு பூஜை செய்யும் போது திடீர் என்று தேவர்கள் வந்து அழைக்கின்றனர் முருகப் பெருமானை
கையில் மலரோடு தாமதிக்காமல், உடனடியாக தேவர்களுக்கு காட்சி கொடுக்கிறார்
அதனால் தான் மூலவர் திருச் செந்தூர் முருகப் பெருமான் இன்றும் மலரோடு காட்சி தருகிறார், முருகப் பெருமான் அதனால் தான் பூஜா மூர்த்தி என்று அழைக்கப் படுகிறார்
மலர், மாய கர்மங்களை நீக்க செய்து சிவ ஞானத்தை உண்டாக்க செய்வது பூஜா,
அந்த ஜெயந்தி நாதர் தான் பூஜா மூர்த்தியாக அருள் புரிகிறார்,
வெற்றியை தரக் கூடியவர்
திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலயத்தின் உள்ளே செல்லும் போது, நாம் கீழாக இறங்கி செல்லும் வழியாக இருக்கும், அதுவே தரிசனம் முடிந்து வெளியே வரும் போது மேலே ஏறி செல்லும் வழியாக இருக்கும்
நாம் வாழ்வில் எவ்வளவு இறங்கிய வாழ்க்கை உள்ளவராக இருந்தாலும் சரி அந்த திருச்செந்தூர் முருகனை தரிசித்து விட்டு வரும் போது வாழ்க்கை ஏறு முகமாகத் தான் இருக்கும் என்பதை காட்டுவதற்க்காகவே திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலயத்தின் அமைப்பு இவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது
திருச்செந்தூர் முருகனை தரிசிக்கும் ஒவ்வொருவருக்கும் முருகப் பெருமான் கருணையை வாரி வாரி வழங்கும் வள்ளலாக, வெற்றியை தருகின்ற ஜெயந்தி நாதராக நம் ஒவ்வொருவருக்கும் நன்மையை தரக் கூடிய செந்தில் ஆண்டவரை வணங்கி வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவோம்
Also Read: திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டால் என்ன கிடைக்கும்
Also Read: திருப்பரங்குன்றம் திருத்தலத்திற்கான திருப்புகழ்