முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தது ஏன்?
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழ கூடிய சுவாமி மலை திருத்தலம் பற்றி இப் பதிவில் காண்போம்
இவ்வுலகில் எல்லா உயிர்களுக்கும் தன் குழந்தை என்றால் மகிழ்வை தரும், காக்கைக்கும் தன் குஞ்சு போன் குஞ்சு
தன்னுடைய குழந்தை எது சொன்னாலும் அது உயர்வு தான் என்பது உலகத்தினுடைய இயல்பு
அந்த வகையில் தன் மகனிடத்தில் உபதேசம் பெற்ற தந்தையாக, தந்தைக்கு உபதேசம் செய்த தனயனாக முருகப் பெருமான் எழுந்தருளி அருளக் கூடிய அற்புதமான திருத்தலம் சுவாமிமலை
ஒரு மனிதனுடைய ஆயுள் என்பதை நாம் தமிழ் வருடத்தில் கணக்கிட்டால் 60 வருடங்கள் தான், அதற்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய வருடத்தை துவக்குவது போலத் தான் 61 வது ஆண்டு துவங்குகிறது.
அப்படி தமிழ் வருடங்கள் 60 என்கின்ற அற்புதமான எண்ணிக்கையில் இந்த ஆலயத்தின் படிகள் 60 என்ற எண்ணிக்கையில் அமைந்து உள்ளது.
இங்கு எழுந்து அருளக் கூடிய முருகப் பெருமான் குரு ரூபமாக நமக்கு அருள் பாலிக்கிறார்
உபதேசம் என்றால் ஏதோ மந்திரத்தை மட்டும் காதில் உதிப்பது அல்ல, ஒரு குரு – சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்.
குருவுக்கும், ஆசிரியர் என்ற அந்த வார்த்தைக்கும் என்ன வேறுபாடு ,
ஆசான் என்பவர் வேறு, குரு என்பவர் வேறு,
நாம் பல விஷயங்களை ஒன்றாக சேர்த்து கொண்டு எல்லாம் ஒன்றாக தான் உள்ளது என்று குழப்பி கொண்டு இருக்கிறோம்
ஆசிரியர்கள் என்றால் ஒருவர் சொன்னதை, ஏற்கனவே எழுதி வைத்ததை மீண்டும் எடுத்து, அதற்கு தங்கள் கருத்துக்களையும் சேர்த்து, மாணவர்களுக்கு கற்பித்து தரக் கூடியவர்கள் ஆசிரியர்கள்
ஆனால் குரு என்பவர் வேதத்தை, மந்திரிங்களை உபதேசம் செய்யக் கூடியவர்
அந்த உபதேசம் என்பது ஞான உபதேசமாக இருக்கும், அவர் கற்று இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
குரு பரம்பரை என்ற ஒன்று உள்ளது, இந்த குரு பரம்பரையில் ஆதி குருவாக விளங்க கூடியவர் சிவ பெருமான்
தட்சிணா மூர்த்தி என்பதும் குரு ரூபம் தான்
சிவ பெருமான் ஏற்கனவே சனாகா மூர்த்திகளுக்கு உபதேசம் செய்துள்ளார்
சனாகா மூர்த்தி பரம்பரையில் தான் சனகர், சனந்தனர், சனாதனர், சரத் குமாரர் என்று சொல்லக் கூடிய சனகாத முனிவர்களுக்கு உபதேசம் அருளியவர் சிவ பெருமான்
ஆனால் அவருக்கே முருகப் பெருமான் உபதேசம் செய்கிறார் என்றால், அங்கே தான் இருக்கிறது அந்த உபதேசத்தின் சிறப்பு என்ன என்பது
சிவ பெருமான் உபதேசம் செய்ததை உலகமே அறிந்து விட்டது, எங்கே நாம் உபதேசம் செய்தது போல், மக்கள் அனைவரும் தாங்கள் உபதேசம் செய்தால் இந்த நாடு தாங்காதல்லவா
அதனால், தான் உபதேசம் பெற்று காட்ட வேண்டும் என்று பெருமான் நினைத்தார்
அவருக்கு யார் உபதேசம் செய்ய முடியும்
பெருமான் என்ன செய்தார் தனக்கு தானே மகனாகி, தனக்கு தானே குருவாகி இறைவன் உபதேசித்து கொண்ட அற்புதமான திருத்தலம் தான் சுவாமி மலை
இந்த சுவாமி மலையில் முருகப் பெருமான் எழுந்து அருள்புரியக் கூடிய பெயரே சுவாமி நாதன்,
சுவாமி நாதன் என்ற பெயரோடு எழுந்து அருளி அருள் புரிகின்ற அற்புதமான திருத்தலம், 60 படிகளை கடந்து மேலே சென்று முருகப் பெருமானை தரிசிக்கும் போது குரு ரூபமாக நமக்கு காட்சி தருகிறார்
மாணவர்களுடைய கல்வியில் உயர்வு பெற வேண்டும் என்றால் இத்திருத்தலத்திற்கு சென்று முருகப் பெருமானை வழிபடலாம்
கல்வி, ஞானம் இவை இரண்டையும் பெற வேண்டும் என்றால் சுவாமி மலை முருகப் பெருமானை உள்ளன்போடு வழிபட்டு பயன் பெறலாம்
கல்வியும், ஞானமும் நம்மை தேடி வரும் ஞானத்தையும், கல்வியையும் வாரி வாரி வழங்க கூடிய முருகப் பெருமானை வழிப்பட்டு வாழ்வில் வளம் பெறுவோம்
Also Read: சுவாமி மலை திருத்தலத்திற்கான திருப்புகழ்
Also Read: பழனி திருத்தலத்திற்கான திருப்புகழ்
Also Read: திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டால் என்ன கிடைக்கும்
Also Read: திருச்செந்தூர் முருகன் கடலைப் பார்த்து ஏன் காட்சி தருகிறார்