பூஜை அறையிலோ, ஆலயத்திலோ முருகனிடம் படிக்க எளிய வேண்டிய பதிகங்கள் | Simple Padhigangal to Lord Murugan
அன்றாடம் முருகப்பெருமானுக்கு சொல்ல வேண்டிய பதிகங்கள் என்ன ஒரு கோயிலுக்கு போனோம்னா முருகப்பெருமானுக்கு என்னென்ன பதிகங்கள் சொல்லி எளி நாம வழிபாடு பண்ணலாம், அப்படிங்கிற நிறைய பேருடைய கேள்விக்கு இன்னைக்கு நாம ஒரு விளக்கமான பதிலை பார்க்கலாம்.
வாங்க முருக வழிபாட்டை பத்தி நிறையவே தொடர்ந்து இந்த பதிவுல நம்ம பார்த்துட்டு இருக்கிறோம் இப்ப முருகப்பெருமானை நாம அன்றாடம் வழிபாடு பண்ணும்போது அது வீடா இருந்தாலும் சரி கோவிலாக இருந்தாலும்,
சரி வழிபாடு பண்ணும்போது சில கவசங்களை நாம வழிபாடு செய்றது தொடர்ந்து படிக்கிறது அப்படிங்கறது உண்டு
இப்ப உதாரணத்துக்கு பார்த்தீங்கன்னா, கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், குமாரஸ்துவம்
இந்த மாதிரி மாதிரி நிறைய இருக்கு முருகனுக்கு பாராயணம் செய்வதற்கு இப்போ சில தேவைகளுக்காக நம்ம படிக்கிறோம் அப்படின்னா இப்போ ஒரு குழந்தை வேணும்
அப்படின்னா அதுக்கு ஒரு திருப்புகழ் இருக்கு நோய் நீங்கணும் அப்படின்னா அதற்கு ஒரு திருப்புகழ் இருக்கு சொந்த வீடு கிடைக்கணும் அப்படின்னா அதற்கு ஒரு திருப்புகழ் இருக்கு இந்த மாதிரி நம்முடைய பிரார்த்தனைக்கு ஏற்ப
சில திருப்புகழ்களை நாம பாராயணம் பண்றோம்
இப்ப சில பேருக்கு கேள்வி என்ன அப்படின்னா இதெல்லாம் எதுவுமே இல்லாமமா நம்ம ஒரு கோயிலுக்கு போறோம் முருகனை பார்க்கிறோம் அப்படியே அவருடைய அழக நாம ரசிக்கிறோம் அப்ப அந்த நேரத்துல என்ன சொல்றது
என்ன பதிகத்தை அந்த நேரத்துல சொல்றது இப்ப முழுசா கந்த சஷ்டி கவசம் அங்க நின்னு நம்மளால சொல்ல முடியுமானா முடியாது அதே மாதிரி அன்றாடம் பூஜை செய்கிறோம்
அன்றாடம் பூஜை செய்கிறபோது நம்முடைய தேவைக்காகன்னு ஒரு திருப்புகழ், நாம படிக்கிறோம் அது இல்லாம முருகனுக்கு தொடர்ந்து நாம செய்யக்கூடிய பூஜையில என்ன பாட்டு பாடுறது என்ன சொல்றது
அப்படின்னு நிறைய பேருக்கு ஒரு கேள்வி இருந்துகிட்டே இருக்கு அதுக்கு தான் இன்னைக்கு நான் உங்களுக்கு பதில் சொல்ல போறேன் நான் என்னுடைய இளம் வயதிலிருந்து எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து
நான் முருகப்பெருமானுடைய வழிபாட்டை செய்கிறபோது என்னென்ன பதிகங்கள் படிக்கிறேனோ அதைத்தான் இன்னைக்கு நான் உங்களுக்கு சொல்லப்போறேன் என்னுடைய பூஜையின் போது நான் நிறைய பதிகங்கள் படிக்கிறது உண்டு
அதுல ஒன்னு கந்த சஷ்டி கவசம் அன்றாடம் நான் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வேன் இந்த கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து
நிறைவு செஞ்ச உடனேயே அப்படியே வரிசையா ஒரு ஏழு எட்டு பதிகங்கள் நான் படிப்பேன் அது திருமுருகாற்றுப்படையில
நக்கீரர் அருளியது அருணகிரிநாத சுவாமிகள் அருளியது
அப்படின்னா அதிலிருந்து நான் படிப்பேன் இதை எந்த வரிசையில படிக்கிறேன் அப்படின்னு எனக்கும் தெரியாது
என்னுடைய மனதில் எனக்கு தோன்றியது முருகனை பார்த்ததும் இதெல்லாம் சொல்லணும் அப்படின்னு தோணுச்சு அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் இப்படித்தான் நான் படிச்சிட்டு இருக்கிறேன்
இது என்னுடைய பூஜையில மட்டும் கிடையாது எந்த முருகர் கோவிலுக்கு போனாலும் எந்த முருகருடைய சன்னதியில நான் நின்னாலும் முதல்ல இதை ஆரம்பிச்சேன்னா அந்த சன்னதியிலிருந்து வெளியே வர்ற வரைக்கும்
இந்த பதிகங்களை நான் கண்டிப்பா சொல்லுவேன் கண்டிப்பா நான் படிப்பேன் என்னுடைய மனதுக்கு இது எல்லாத்தையும் முருகர்கிட்ட நான் படிச்ச பிறகு எனக்கு அப்படி ஒரு நிம்மதி அப்படி ஒரு சந்தோஷம் ஒண்ணுமே
அவர்கிட்ட கேட்கவே வேண்டாம் எதுவுமே எனக்கு நீ செய் எனக்கு இதை கொடு அப்படின்னு அவர்கிட்ட கேட்கவே வேண்டாம் ஏதோ ஒரு முழுமையான மனதிருப்தி நமக்கும் முருகனுக்கும் நடுவுல நடந்த ஒரு உரையாடல் போல எனக்கு அமையும் அப்படிப்பட்ட ஒரு அழகான சில பதிகங்களை தான் நான் உங்களுக்கும் சொல்லப்போறேன் இந்த பதிகங்கள் புதுசா அப்படின்னு கேட்டா கண்டிப்பா கிடையவே கிடையாது,
அதனால ரொம்ப ரொம்ப எளிமையான இந்த பதிகங்கள் தான் இதையும் நீங்க அன்றாட படிச்சு பாருங்க என்னுடைய மனசுக்கு எப்படி ஒரு திருப்தியும் ஒரு நிறைவும் கிடைக்கிறதோ
அது அப்படியே உங்களுக்கு கிடைக்கும் இப்ப நான் எப்படி படிக்கிறேங்கிறதையும் நான் உங்களுக்கு சொல்றேன்
இப்ப நான் சஷ்டி கவசம் அப்படியே படிச்சிட்டு வரேனா சஷ்டி கவசம் வந்த உடனே நிறைவு செய்கிற போது சரணம், சரணம் சண்முகா சரணம் அப்படின்னு நிறைவு செய்வோமா
அதை நிறைவு செய்த உடனேயே சண்முகக் கடவுள் போற்றி சரவணத்து உதித்தாய் போற்றி கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி தன்மலர் கடப்ப மாலை தாங்கிய தோழா போற்றி
விண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றியே முருகனே செந்தில் முதல்வனே உமாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய
தண்டைக்கால் எப்போதும் நம்பியே கைத்தொழுவேன் நான் உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிறேன் பின்னை ஒருவரையும் யான் பின் செல்லேன்
பண்ணி கோலப்பா வானோர்கள் கொடியவினை தீர்த்த அருளும் வேலப்பா செந்தில் வாழ்வே அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் நாளன் செய்யும் வினைதான் என் செய்யும்
என்னை நாடி வந்த கோள் என் செய்யும், கொடும் கூற்று என் செய்யும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும்
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினேன் செயல்பட்டு அழிந்தது
செந்தூர் வயற்பொழில் தேங்க்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியாள் மனம் மாமையிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெப்பும் அவன் கால்பட்டு அழிந்தது இங்க என் தலைமேல என் கையெழுத்தே தேந்தனை
கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கும் வள்ளிக் காந்தனை கந்தக் கடம்பனை கார்மயில் வாகனனை சாஞ்சுனைப் போதும் மறவாதவர்க்கு
ஒரு தாழ்வும் இல்லையே விழிக்கத் துணை திருமென்மலர் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா
என்னும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணைவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
இந்த பாடல்கள் தாங்க ஒரு எட்டு பாட்டு இருக்கும்னு நினைக்கிறேன் இந்த பாடல்களை நான் முருகனை பார்த்து சொல்லாத நாளும் இல்ல முருகன் நான் வந்தாலே
இந்த பிள்ளை வந்தா இதை கண்டிப்பா படிச்சிரும் அப்படின்னு அவருக்கும் கண்டிப்பா தெரியும்.
ஏன்னா எந்த முருகனை பார்த்தாலும் இந்த பாடல்கள் நான் சொல்லாம அவரை விட்டு வந்ததே கிடையாது எனக்கு என்னவோ இதை எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டேன்னா ஏதோ என் மனசுல இருக்கிற ஒரு பெரிய பாரம் ஒரு பெரிய கவலை
இல்ல என் மனசுல இருக்கிற ஒரு பெரிய சந்தோஷத்தை நான் அவர்கிட்ட பகிர்ந்து கொண்டது போல தோணும் இது தவிர அவர்கிட்ட நான் எதுவுமே கேட்கணும்
அப்படின்னு எனக்கு தோணவே தோணாது இதைத் தவிர வேற என்ன தேவை இருக்கு உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிறேன் அப்படின்னு சொல்லும்போதே உன்னை தவிர நான் யார்கிட்டயும் போய் கேட்க மாட்டேங்குறத திடமா சொல்லிடுறோமா
முருகா நீதான் எனக்கு எல்லாம் அஞ்சுகிற முகம் தோன்றில் உன்னுடைய ஆறு முகம் தோன்றும் எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அப்ப நீதான் வந்து முன்னாடி நின்னு என்னை காப்பாத்தணும் அப்படின்னு அவர்கிட்ட
கேட்கிறோமா துணை இல்ல அப்படின்னு கஷ்டப்படும்போது விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள் உன்னைத் தவிர எனக்கு வேற துணை இல்லை அப்படின்னு அவர்கிட்ட நம்பிக்கையா சொல்றோமா அவரைப் போற்றுகிறோமா அவரை
வாழ்த்துகிறோமா அவரை வணங்குகிறோமா எனக்கு தெரிஞ்சு என்னுடைய மனதுக்கு அறிஞ்சி இந்த பாடல்களை சொன்னா எனக்கு ஒரு பெரிய திருப்தி இருக்கும் ஒரு ஒரு பெரிய மனநிறைவு கிடைக்கும் ஒரு பெரிய ஆத்மார்த்தமான சந்தோஷம் இருக்கும்
இதை நான் எப்படி படிக்கிறேனோ அது மாதிரி நான் கடகடன்னு நான் அப்படியே உங்களுக்கு நான் சொல்லிட்டேன் ஆனா இதை ஒவ்வொரு முறையும்
நான் படிக்கிற போது ஒவ்வொரு முறையும் அந்த முருகனுக்கு முன்னாடி நின்னு அதை நான் சொல்றபோது நான் என்னுடைய வாழ்க்கையில எனக்கு முருகன் காட்டிய அந்த கருணை அவர் எங்கெல்லாம் என்னை காப்பாற்றுகிறாரோ அதெல்லாம்
நினைச்சு நினைச்சு அப்படியே கண்ணீர் பெருக பெருக ஒரு சில வார்த்தைகளை எனக்காக என்னுடையதாக நான் அதுல சேர்த்துக்கொண்டு நான் முருகன் கிட்ட அதை நான் பேசுறது உண்டு இதையே தான் நானும் உங்களுக்கு சொல்றேன் நாம முருகன்
கிட்ட போய் ஏதோ சும்மா கோவில்ல அப்படியே நின்னோமா ஏதோ சுவாமியை பார்த்தோமா ஏதோ ஆரத்தி பார்த்தோமா தொட்டு கண்ணுல
ஒத்திக்கிட்டோமா விபூதி குங்குமம் வாங்கிட்டு வந்தோமா அதோட இல்லாம அவர்கிட்ட நீங்க பேசுங்க அவர்கிட்ட நீங்க சொல்லுங்க முருகா எனக்கு நீதான் துணை நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என்
செய்யும் கொடும் கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து வந்து தோன்றிடுனேன் அப்ப முருகனை அப்படியே நம்ம பார்க்கிறோம் பாருங்க அப்படி
பார்த்துக்கிட்டே நாம அவர்கிட்ட நாம சொல்றோம் என்னை தேடி வர்ற நாள் என்ன செஞ்சிட போகுது கோள் என்ன செஞ்சிட போகுது
நீ இருக்கிற நீ எனக்கு துணையா இருக்கிற இதெல்லாம் என்னை என்ன முருகா செஞ்சிட போகுது நான் ஏன் பயப்பட போறேன் நீ என் கூட இருக்கும்போது எனக்கு ஏன் அச்சம் அப்படியே அச்சம் வந்ததுன்னா உன்னுடைய அஞ்சுகின்ற முகம்
வந்தால்தான் உன்னுடைய ஆறு முகம் வருமே அப்படிங்கிற நம்பிக்கையை நாம அங்க முருகன் கிட்ட காட்டுறோம் என்னுடைய வாழ்க்கையில நான் நீண்ட காலம் காலமாக என்னுடைய முருக வழிபாட்டுக்கு நான் பயன்படுத்தக்கூடிய இந்த அழகான
பாடல்கள் நம்முடைய எல்லாருடைய வாழ்க்கையிலும் இது கண்டிப்பா பொருந்தும் நம்ம எல்லாரும் முருகனை அப்படித்தான் பார்க்கிறோம்
முருகனை ஒரு தந்தையாக பார்க்கிறோம் முருகனை ஒரு தாயா பார்க்கிறோம் முருகனை ஒரு உற்ற துணையாக பார்க்கிறோம் முருகனை நம்முடைய காதலனாக பார்க்கிறோம் என்ன இதையும் தாண்டி முருகனை குழந்தையாக பார்க்கிறவங்களும்
உண்டு எப்படி நாம அவனை நினைக்கிறோமோ அப்படியெல்லாம் நம்முடைய மனதிற்குள்ள அவனை நாம உருவகப்படுத்தி படுத்திக்கொண்டு அப்படியெல்லாம் அவனை நாம் சரணாகதி அடைந்து இதை நாம படிக்க படிக்க படிக்க நமக்கு ஒரு பக்குவம் வரும், சொல்ல சொல்ல தான் நமக்கு எல்லாமே வரும்.
அதனால எளிமையான விஷயங்கள் எல்லாம் படிங்க, எழுதியே வச்சுக்கோங்க எழுதி வச்சுக்கிட்டு ஒரு பத்து நாள் நீங்க அப்படியே சொல்லிட்டே இருந்தீங்கன்னா 11வது நாள் தானா உங்களுக்கு மனப்பாடம் ஆயிடும்
நீங்க அப்படியே இதை எல்லா முருகப்பெருமான் முன்னாடியும் நீங்க சொல்லலாம் இந்த பதிவை உங்களைச் சார்ந்த அனைவருக்கும் நீங்க பகிர்ந்து கொள்ளுங்க குறிப்பா குழந்தைகளுக்கும் இந்த பாடல்களை கத்துக்கொடுங்க ஏன்னா ஒரு
கோயிலுக்கு போனா என்ன பதிகம் படிக்கணும் எந்த தெய்வத்துக்கிட்ட எதை பாராயணம் பண்ணனும் அப்படின்னு நிறையவே இப்ப குழந்தைகளுக்கு தெரியறதே இல்லை அதனால இது எளிமையான தமிழ்ல இருக்கிறத தான் இது குழந்தைகளுக்கும் நீங்க கத்துக்கொடுக்கலாம்
Also Read: ஆன்மீக தகவல்கள்
Also Read: முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan
Also Read: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
Also Read: அறுபடை வீடு