புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் விழாவையொட்டி 55வது ஆண்டாக, ஆலங்குடியில் உள்ள தர்தசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் ஆலயத்தில், அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு, கடந்த 2ம் தேதி முதல் அபிஷேக ஆராதனைகளும், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவையொட்டி பேராசிரியர் இரா. விஜயகுமார்” “கந்தன் தருவான் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்!
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேராசிரியர் இரா. விஜயகுமார்” “கந்தன் தருவான் எதிர்காலம்” என்ற தலைப்பில் திருப்புகழ் பற்றியும், அருணகிரி நாதர் பற்றியும், திருப்புகழ் சிறப்பினையும் மிகச் சிறப்பாக உரையாற்றி பக்தர்கள் அனைவரையும் மெய் சிலிர்ப்பில் ஆழ்த்தினார்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நடைபெற்ற “கந்தன் தருவான் எதிர்காலம்” என்ற ஆன்மீக சொற்பொழிவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்புகழ் பற்றியும், திருப்புகழை இயற்றிய அருணகிரி நாதரை பற்றியும், அதற்கும் மேலாக கந்தனின் அருளையும் பெற்றனர்.
கந்த சஷ்டி விழாவையொட்டி பேராசிரியர் இரா. விஜயகுமார்” “கந்தன் தருவான் எதிர்காலம்” ஆன்மீக சொற்பொழிவு பற்றிய காணொளி