புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் விழாவையொட்டி 55வது ஆண்டாக, ஆலங்குடியில் உள்ள தர்தசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் ஆலயத்தில், அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ்க் கடவுள் எம்பெருமான் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.