பழநி முருகன் ஆண்டியாய் நிற்பது ஏன்?
அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக விளங்கக் கூடிய பழநி முருகன் திருத்தலம் பற்றிய சிறப்புகளை இப் பதிவில் அறிவோம்
பழம் நீ என்கின்ற அற்புதமான மலை பழநி என்று அழைக்கப் படுகிறது
தற்போது பழநி அன்று அழைக்கப் பெரும் இத்தலம் முன்னர் திருவாவினன்குடி என்று அழைக்கப்பட்டது.
திருவாவினன்குடி – திரு என்கின்ற லட்சுமியும், ஆ என்கின்ற காமதேனுவும், இன என்கின்ற சூரிய பகவானும் தன்னுடைய செல்வ, நலன்களை முருகப் பெருமானுக்கு தந்து வழிபட்ட திருத்தலம் பழநி.
அது திருவாவினன்குடி என்று அழைக்கப் பெற்று மலைக்கு மட்டும் பழநி என்று இருந்தது, தற்போது எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து பழநி என்கின்ற முழுப் பெயரோடு அழைக்கப் படுகிறது.
பழநி முருகன் என்ன தருவார்:
திருவாவினன்குடி – திரு என்கின்ற லட்சுமியும், ஆ என்கின்ற காமதேனுவும், இன என்கின்ற சூரிய பகவானும் தன்னுடைய செல்வ, நலன்களை தந்து வழிபட்ட திருத்தலம் ஆதலால், பழநி முருகன் செல்வத்திற்கு அதிபதி ஆவார்.
முருகனுக்கு மாமியார் மகா லட்சுமி, அதனால் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்து, செல்வத்தையும் மகா லட்சுமி முருகனுக்கு கொடுத்தவர், மேலும் மகா லட்சுமி முருகப் பெருமானிடம் செல்வதை தன்னை வழிபட வருவோருக்கு மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொடுக்க சொன்ன திருத்தலம்
மற்ற முருகன் கோவிலில் இல்லாத சிறப்பு பழநி முருகன் கோவிலில் உள்ளது, என்னவென்றால் இராஜ அலங்காரம் பழநியில் மட்டுமே சிறப்பு உடையது, இராஜ அலங்கார கோலத்தில் முருகனை தரிசனம் செய்தால், நமக்கு இராஜா போல வாழ்க்கை கிடைக்கும்
அதாவது ஆண்டியாக இருந்தாலும் என் சன்னதிக்கு வந்து விட்டால் உன்னை இராஜாவாக மாற்றுவேன் என்று சொல்லுவதற்கு தான் ஆண்டி கோலம்
அதை போல பண்டாரம் என்கின்ற வார்த்தைக்கு செல்வதை குவித்து வைத்து இருப்பவன் என்பது பொருள்
செல்வத்தை தன் அகத்தே குவித்து வைத்திருக்கின்ற பண்டாரமாக, செல்வமே வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு, ஞானத்தை தன் அகத்தே சேர்த்து வைத்து இருக்கின்ற ஞான பண்டாரமாக விளங்க கூடியவர் பழநி முருகப் பெருமான்
ஆகவே பழநி முருகன் செல்வ நலத்தை அள்ளி, அள்ளி தரக் கூடியவர்,ஞானத்தை வாரி வாரி வழங்கக் கூடிய வள்ளல்
பழநி முருகப் பெருமானை உள்ளன்போடு வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவோம்
Also Read: பழனி திருத்தலத்திற்கான திருப்புகழ்
Also Read: திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டால் என்ன கிடைக்கும்
Also Read: திருச்செந்தூர் முருகன் கடலைப் பார்த்து ஏன் காட்சி தருகிறார்