கூட்டுக் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் காட்டும் முருகன் – பழமுதிர்சோலை
அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடாக விளங்கக்கூடிய பழமுதிர் சோலையை திருத் தலம் பற்றிய இப் பதிவில் காண்போம்
பழமுதிர்சோலை – ஞானப் பழமாக இருந்து அருள் புரியக் கூடிய முருகப் பெருமான், பக்தர்களுக்கு கருணையை வாரி வாரி வழங்கக் கூடிய அற்புத திருத்தலம்
இங்கே பழமுதிர் சோலையில் எழுந்து அருளியுள்ள முருகப் பெருமான் குடும்ப ஒற்றுமையை நமக்கு தரக் கூடியவர்.
எங்கேயும் காண முடியாத அழகிய கோலத்தை நாம் காண முடியும், பழமுதிர் சோலையில் முருகப் பெருமான் குடும்ப சகிதமாக இங்கே அருள் புரிகிறார்.
இந்த பழமுதிர் சோலையின் கீழ் இருக்கும் அழகர் மலையில், கள்ளழகர் இருக்கின்றார்.
பதினெட்டாம் படி கருப்பெண்ண சுவாமி அவர் தான் இம் மலைக்கு காவல் தெய்வமாக இருக்கின்றார்.
உள்ளே மலைக்கு நுழைந்தால் கள்ளழகர் ஆலயம், மாமனார் மலையின் கீழ் உள்ளார், மாமனாரை தரிசித்து விட்டு, மேலே மருமகனை தரிசிக்க செல்ல வேண்டும்.
பழமுதிர் சோலையில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை இருவருடன் அருள் பாலிக்கிறார்.
இந்த ஆறு படை வீட்டில் முருகப் பெருமான் பழமுதிர் சோலையில் மட்டும் தான் குடும்ப சகிதமாக காட்சி தருகிறார்.
இம் மலையில் ராக்காயி அம்மன் என்னும் அம்மன் அருள் பாலிக்கிறார்
இந்த ராக்காயி அம்மன் திருவடியில் இருந்து வரக்கூடிய நுபுர கங்கை என்னும் சுவை மிகுந்த தண்ணீர் உள்ள சுனை உள்ளது
இங்கே வந்து வழிபடக் கூடிய அனைவருக்கும், குடும்ப வாழ்வில் ஓற்றுமை அடைந்து மகிழ்வான நிகழ்வு நடக்கும்
கணவன், மனைவி பிரச்சனை தீர பழமுதிர் சோலை முருகப் பெருமானை வழிபடலாம்.
Also Read: பழமுதிர்சோலை திருத்தலத்திற்கான திருப்புகழ்
Also Read: திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டால் என்ன கிடைக்கும்
Also Read: திருச்செந்தூர் முருகன் கடலைப் பார்த்து ஏன் காட்சி தருகிறார்