விதியை மாற்றும் ஷீரடி சாய்பாபா | சீரடி சாய்பாபாவின் வரலாறு | shirdi sai baba temple | Maharashtra
ஜாதகம் பார்த்து விட்டு வந்தேன், ஜோசியர் நம் பெண்ணுக்கு கல்யாணமே ஆகாது
என்கிறார், இந்த நோய் நிச்சயம் குணமே ஆகாதாம், இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரவே முடியாது என்கிறார் வக்கீல்,
இப்படி அலுவலகத்தில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, வியாபாரத்தில் நஷ்டம், ஏன் வாழ்வே பிரச்சனை என்று மனம் காரிருளில் மூழ்கி, கவலைக்கடலில் ஆளும் நிலையில் யார் மூலமாவது யாரோ சொல்லக் கேட்டு அல்லது திடீரென எங்கோ செல்லும்போது ஆறுதல் தருவது போல,
ஒரு போட்டோவாக ஒருவர் வந்து பேசினால் அல்லது அழுது துடித்தபோது நடுத்தெருவில், வழியற்று நின்ற வேளையில் உங்கள் முன் ஏதோ ஒரு ஆட்டோ வந்து நிற்க,
அந்த ஆட்டோ பின்னால் ஒரு வாசகம் ஏன் அழுகிறாய் நான் இருக்கிறேன், கவலைப்படாதே பொறுமையாக இரு, என்மேல் நம்பிக்கை வை, உன் வாழ்வில் நிச்சயம் நான் அதிசயம் நிகழ்த்துவேன் என எழுதப்பட்டிருந்தால்,
அது பிறருக்கு எப்படி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் தீராத பிரச்சனையில் சிக்கி, திக்கற்று நிற்போருக்கு எல்லாம் அது ஆண்டவனின் அசரி என்றோ, இப்படி எப்படியோ ஏதோ ஒரு வகையில் ஒரு நொடியில் பலரது வாழ்வில் நித்தம் நித்தம் அற்புதங்கள் செய்து,
கொண்டிருக்கிறார் ஒரு மகான், அதுமட்டுமல்ல பசித்தோருக்கு எல்லாம் வயிறார உணவளித்து உதி பஸ்பம் மூலம்
மலையளவு கஷ்டத்தையும் தீராத மனக்கவலைகளையும் சிறு தூசாக்கி துன்பத்தில் துவண்ட இதயத்திற்கு ஆறுதலாகி,
ஜாதி, மத, இன, மொழி தேசம் வேறுபாடு பாராது, அனைத்துயிரும் ஒன்றென்று சமமாக கருதி எல்லாம் ஆத்மா அன்பே சிவம் என்பதை,
வாழ்ந்து காட்டி கடவுளை நம்பாதவர் வாழ்விலும், அதிசயங்களை நிகழ்த்தும் சீரடி சாய் பாபா.
விதியை மாற்றும் சீரடி சாய் பாபா
காரணம் இல்லாமல் காரியம் இருக்காது, 19 ம் நூற்றாண்டு மிக, மிக கொடுமையானது, அறியாமை இருளில் சிக்கியிருந்த ஆதிக்க வெறியோரால் அப்பாவி மக்கள் பஞ்சம் என்ற பெயரில் உண்ண உணவு இல்லாமல் பசி பட்டினியில் உயிரை விட நேர்ந்தது கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர் அப்பாவி ஏழை மக்கள், அதாவது சுமார் 1824 முதல் 1877 வரை நாட்டில் இறந்தவர்கள் எத்தனை லட்சம் என்பது கணக்கில் இல்லை உயிருள்ள எலும்புக் கூடுகளாக மக்கள் உணவு இல்லாமல் செத்தனர்.
அந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் இது நம் நாடா அல்லது ஆப்பிரிக்காவா என்ற சந்தேகம் வருகிறது. இதை கிரேட் ஃபேமைன் என்கிறார்கள், இதில் எத்தனை பேர், நமது கொள்ளு தாத்தா, பாட்டிகள் என்பது தெரியாது, ஆனால் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் உண்ண எதுவும் கிடைக்காமல், அடுத்த சந்ததிகளை வாழ வைக்க போராடி, எப்படி எல்லாம் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருப்பார்கள் என்பதை நினைத்தால் ஈரக்குலை நடுங்குகிறது.
இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையிலும், இந்த மண்ணில் அவர்கள் சிந்திய கண்ணீர் செந்நீரான சோகக்கதை மறைக்கப்பட்ட வரலாறாக, வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கொடூரமான காலத்தில் தான்,
தெற்கே வள்ளலாரும், வடக்கே சீரடி சாய் பாபாவும் வாழ்ந்தனர், இருவர் நம்பிக்கையும், இருவர் லட்சியமும் ஒன்றே, அது பசித்தவருக்கு உணவளிப்பது.
இருவர் வாழ்ந்த இடத்திலும், ஒரு அணையா அடுப்பும், ஜோதியும் இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது. இருவரும் ஜாதி, மத, இன, மொழி, நிற, குல வேறுபாடு பாகுபாடு எதுவும் பாராது, ஜீவ காருண்யத்தில் அனைத்து உயிரும் ஒன்றே என்று வாழ்ந்த மகான்கள்.
இதில் சாய் பாபா எப்பொழுது பிறந்தார், என்பது யாருமே அறிய முடியாத ஒரு அறிய முடியாத ஒரு ரகசியமாகவே இன்னும் இருக்கிறது.
தெய்வம் மனுஷ ரூபத்தில் மனுஷ ரூபனே என்பார்கள், அப்படி மனித வடிவில் எல்லோர் மனங்களிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும், சாய் பாபாவின் அவதார மகிமையை இனி காணலாம்.
சீரடியில் சுயம்பாக தோன்றிய ஞான விருட்சம்
இன்றைய மகாராஷ்டிராவில் ஒரு சிறிய கிராமம் சீரடி, அன்றைய கால கட்டத்தில்
வறுமை, பஞ்சம், நோய் என்று மக்கள் பலவிதமான கஷ்டங்களால் தவித்து வந்த நேரம் அது, அப்பொழுது எங்கிருந்தோ ஒரு 16 வயது இளைஞன் வந்தான், அவன் யாரிடமும் பேசுவதில்லை,
ஒரு வேப்பமரத்து அடியில் இருந்து சிந்தித்தபடியே இருப்பான் அதுவே அவனது இருப்பிடமும் ஆனது, அவனுக்கு ஈயும், எறும்பும், சொறி பிடித்த நாயும், நரகலை உண்ணும் பன்றியும், காக்கா, குருவி, பல்லி, பாம்பு என எல்லாமே ஒன்றுதான். எல்லாவற்றுடனும் பேசுவான், அவனது மொழி அன்பாகும், அவனை ஆரம்பத்தில் எவரும் கவனிக்கவில்லை, ஆனால் காலப்போக்கில் அவனது காந்தப் பார்வையால் கஷ்டங்கள் தீர்ந்தன, கருணைக்கரத்தால் தீராத நோய்கள் எல்லாம் மறைந்தன, அந்த கிராமமே சொர்க்க பூமியானது. மக்கள் மனதில் ஆனந்தம் குடி கொண்டது
அந்த இளைஞனை சீரடி மக்கள் பாபா, சாய் பாபா என்று பாசத்துடன் அழைக்கத் தொடங்கினார்கள்,
ஆரம்பத்தில் சீரடியில் சாய்பாபா சித்தர் என்றோ, யோகி என்றோ யாருமே நினைக்கவில்லை,
சாய் பாபா யாரிடமும் பேசாமல், தினமும் யாசித்து, யார் என்ன கொடுத்தாலும் உண்டு, வேப்பமரத்து அடியிலே யோகத்தில் இருந்தார், ஆனால் காலப் போக்கில் மக்கள் சாய் பாபாவின் மகிமைகளை கண்ணால் கண்டனர், பின்னர் தான் கடவுளே சாய் பாபா ரூபத்தில் வந்திருப்பதாக எண்ணி தொழுது மகிழ்ந்தனர்.
நீரில் விளக்கேற்றிய சாய் பாபா
“இல்லங்கள் தோறும் குடியிருக்கும் சாயிநாதனே செல்வங்கள் யாவும் சேர்த்திடும் சாயிநாதனே”
சாய் பாபாவுக்கு விளக்கு ஏற்றுவது என்றால் மிகவும் பிடிக்கும், அவர் எங்கு இருந்தாலும் ஒளி மயமாக இருக்க வேண்டும், ஒருநாள் அவர் விளக்கேற்ற என் எண்ணெய் கிடைக்கவில்லை அதனால் அவர் துளியும் கவலைப்படாமல், உடனே தண்ணீரை எண்ணையாக பாவித்து, அகலில் ஊற்றினார், என்ன ஆச்சரியம் பச்சை தண்ணி எண்ணையாக மாறியது, ஊரே அதிசயத்து போனது,
அன்று முதல் அந்த மக்கள் அவர் எதையும் கேட்காமலே எல்லாமே கொடுக்க முன்வந்தனர்,
இதே போல ஒருநாள் துணியுள் அதாவது அக்னிகுண்டத்துள் திடீரென பார்த்தவர் பதறிப்போய்விட்டனர், நெருப்பு சுட்டதால் சாய்பாபா கை முழுவதும் வெந்து போனது, ஏன் இப்படி செய்தார் என்று ஒருவருக்கும் காரணம் புரியவில்லை,
பின்னர்தான் விவரம் தெரிந்தது, அதாவது தொலைதூரத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தர் ஒருவரின் குழந்தை கைதவறி தீயில் விழுந்துவிட்டது,
அதை அந்த தாய் தூக்கும் முன்னமே சாய்பாபா தன் ஞான திருஷ்டியில் கண்டு, உடனே தூக்கி காப்பாற்றினார்,
குடலைக் கழுவிய சாய்பாபா ஒன்பது துண்டாக கிடந்த அதிசயம்
சாய்பாபா வழக்கமாக ஒரு ஆலமரத்தடியில் மறைவாக நின்றுதான் குளிப்பார், அப்படி குளிக்கும்போது அந்த ஊர்க்காரர் ஒருவர், சாய்பாபாவை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார், அந்த அதிர்ச்சிக்கு காரணம் இதுதான் பொதுவாக இனிமா கொடுத்து வயிறை சுத்தம் செய்வார்கள்,
ஆனால் சாய்பாபா குடலை சுத்தி செய்து கொண்டிருந்தார், அதாவது தனது குடலை வாய் வழியே வெளியே எடுத்து கழுவிக் கொண்டிருந்தார், குடலை ஏதோ துணி துவைப்பது போல சுத்தம் செய்தார், இது கூட பரவாயில்லை, இன்னொரு சந்தர்ப்பத்தில் சாய்பாபா நவகண்ட யோக பயிற்சி செய்து கொண்டிருந்தார்,
நவகண்ட யோகம் என்றால் உடலை ஒன்பது பாகங்களாக கை வேறாக கால் வேறாக பிரித்து தனியாக போட்டுவிட்டு பின் மீண்டும் மனோசக்தியால் ஒன்று சேர்ப்பது,
இது ஒரு ராஜ யோக சித்தர்கள் கலையாகும், அப்படி சாய்பாபாவின் உடல் ஒன்பது துண்டாக கிடந்ததை பார்த்த சீரடிவாசி பேச்சு, மூச்சற்று போனார். இந்த இரு சம்பவங்களுக்கு பிறகு சாய்பாபா சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு பெரிய யோகி, வாழும் சித்தர், என்று சீரடி மக்களால் புகழப்பட்டார்,
சீரடிக்கு வந்த காலன்
பஞ்ச பூதங்களில் மிக முக்கியமானது நீர், அந்த நீர் மூலம் 19நூற்றாண்டில் காலரா என்ற கொடிய நோய் பரவல் மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்தது.
இந்த நோய் மற்ற தொற்று நோய் போல இரண்டு மூன்று வருடங்கள் வந்துவிட்டு போகவில்லை இது ஒரு பயங்கரமான நோய் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு மேல் பல உயிர்களை காவு வாங்கியது
அதாவது 1817 தொடங்கி 1961 வரை தொடர்ந்து 10, 15 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும், மீண்டும் கண்டம் வீட்டு கண்டம் பரவி உலகையே உலுக்கியது. அதனால் அந்த காலகட்டத்தில் கங்கை முதல் காவிரி வரை நமது ஜீவ நதிகளில் நீர் அருந்துவது கூட தடை செய்யப்பட்டது, நீரை பார்த்தாலே இதில் காலரா இருக்குமோ என மக்கள் அஞ்சினர். காலரா வரும்போது எல்லாம் வாந்தி, வேதி, மயக்கம், ஜுரம் என மொத்த ஊரையே படுகொலை செய்துவிட்டு போகுமாம்.
அதனால்தான் அதற்கு பெயர் கொள்ளை நோயாம். காலராவின் தாக்கத்தை ஆங்கிலத்தில் பாண்டமிக் என்கிறார்கள். அந்த காலத்தில் காலரா வருகிறது என்றாலே ஊரே அஞ்சி சாகுமாம், நோயால் இறந்தார்களா அல்லது பீதியில் இறந்தார்களா என்று கண்டுபிடிக்க முடியாதபடி, அப்படி ஒரு பேரழிவு அந்த நோயால் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் சீரடியையும் காலராவால் கடுமையாக பாதிக்க இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை, அந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என இனி பார்க்கலாம்.
தவசக்தி மூலம் காலராவை விரட்டிய சாய்பாபா
ஒருநாள் சாய்பாபா கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்தார், ஏதோ மந்திரம்
சொல்வது போல மனது சொல்லிக்கொண்டே கோதுமை மாவை பிசைந்த அவர் தனது தவசக்தியால் சீரடியை சுற்றி ஒரு ஆகாய கவச வேலியை போட்டார். பின்னர் அந்த ஊரை தாக்க இருந்த நோய் கிருமிகளை எல்லாம், அந்த கோதுமை மாவில் சூட்சுமமாக வரவைத்து கொன்று, அதை உடனே ஊருக்கு வெளியில் கொண்டு போய் கொட்டச் செய்தார். என்ன ஆச்சரியம் அன்று முதல் சீரடியில் காலரா வரவே இல்லை. உலகையே உலுக்கிய காலரா சீரடிக்குள் நுழையாமல் ஓடியதாம்.
தீய சக்திகளை விரட்டும் உத்தியின் மகிமை
சீரடியில் சாய் பாபா உதி என்ற அக்கினி குண்டத்தை, முதன் முதலில் ஏற்றி வைத்தார். அது இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கிறது
அப்படி எறிந்த பின் அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் தான் உதி, இந்த உதியை கொண்டு தீய சக்திகளை, தீராத பிரச்சனைகளை தீர்த்தார் சாய்பாபா, உதி மூலம் இப்பொழுதும் கூட தீர்க்கப்பட முடியாத நாள் பட்ட பல நோய்களும், கூட தீர்கிறது என்கிறார்கள் சாய் பாபாவால் அதிசயங்கள் பல நிகழ்த்தப்பட்ட பூமி சீரடி. சீரடியில் சாய்பாபா வாழ்ந்த இடம், மசூதி அவர் அமர்ந்த கல் அந்த வேப்ப மரம், அவர் ஜீவ சமாதி அனைத்தும் இன்றும் அப்படியே உள்ளது. பலரது வாழ்வை மாற்றும் சீரடி சாய்பாபாவின் ஆலயத்தை காண்போம்.
விதியை மாற்றும் சீரடி சாய் பாபா கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்த படியாக,
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க ஆலயம் எனலாம் 250 தொலைவில் அகமது நகர் மாவட்டத்தில் டி சாபா கோயிலுக்கு வருவதே ஒரு பாக்கியமாகும் വடந்திய பாணியில் கட்டப்பட்ட ஒரு ஆலயமாகும் கோயில் என்பதை விட இது ஒரு சுற்றுலா தளம் போல
உலகம் முழுக்க இருந்தும் எண்ணற்ற பக்தர்களை ஈர்க்கும் ஒரே ஆலயம் சீரடி சாய் பாபா ஆலயம் எனலாம், மும்பையில் இருந்து 250 கி.மீ தொலைவில் அகமது நகர் மாவட்டத்தில் ரகதா தாலுகாவில் இருக்கும் சீரடி சாய் பாபா கோயிலுக்கு வருவதே ஒரு பாக்கியமாகும்.
கோயில் என்பதை விட இது ஒரு சுற்றுலா தலம் போல, எப்பொழுதும் கூட்டமாக காட்சி தருகிறது, கோயிலுக்கு செல்வோர் மிகப்பெரிய வரிசையில் காத்திருந்தே சாய்பாபாவை தரிசிக்க முடிகிறது,
இந்த இடம் முழுவதுமே ஒரு வகையான மின்காந்த தெய்வீக அலையாற்றல் இருப்பதை நன்கு உணர முடிகிறது, கஷ்டத்தில் இருப்பவர்கள் சீரடிக்கு வந்து போன பின்பு, நிச்சயம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் வரும் என்கிறார்கள், இதை இங்கு வரும் கோடான கோடி பக்தர்கள், நித்தமும் உணர்ந்து வருகிறார்கள்,
சீரடி கோயிலில் நாம் பார்க்க பல அற்புதமான இடங்கள் உள்ளன அதில் முதலில் வருவது சாய்பாபா அமர்ந்த அதிசய வேப்ப மரம்,
சீரடிக்கு வருவோர் அனைவரும் முதலில் தேடுவது பாபா அமர்ந்திருந்த வேப்ப மரத்தை தான், அந்த வேப்ப மரம் இன்றும் அப்படியே இருக்கிறது, இந்த மரத்தடியில் இன்னொரு அதிசயமும் மறைந்துள்ளது, இங்குதான் இந்த மரத்தடியில் தான் சாய்பாபாவின் குருவின் ஜீவ சமாதி உள்ளது, அதனால்தான் இதை குருஸ்தான் என்று அழைக்கிறார்கள் இந்த மரமே ஒரு ஆச்சரிய அதிசயம் தான், காரணம் இந்த வேப்ப மர இலைகள் கசப்பதில்லை, மேலும் இந்த வேப்ப மர நிழலில்
அமர்ந்தாலே தீராத நோயெல்லாம் தீர்வதாக சொல்லப்படுகிறது.
பாபாவின் அற்புத திருக்கோலம்
பாபாவை இங்கு வணங்க வருவோர் யாரும் அதை ஒரு சிலையாக பார்ப்பது இல்லை எல்லோருமே பாபா நிஜமாகவே அங்கு அமர்ந்திருக்கிறார், எத்தனை பிரச்சனை வந்தாலும் சரி, அவர் பாதத்தை தொட்டு வணங்கிச் சென்றால், அத்தனை பிரச்சனைகளும் உடனே சரியாகிறது என்கின்றனர்,
குறிப்பாக வியாழக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட தீராத கஷ்டங்களும் தீர்கிறதாம், இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல தினம் தினம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும் அதிசயம் என்கின்றனர்.
சாய்பாபாவை மனதார நம்பினால் நிச்சயம், அவரே உங்களிடம் ஆத்மார்த்தமாக பேசுவார், அது உங்களுக்கு மட்டுமே புரியும், சிலருக்கு ஸ்தூலமாக காட்சி தந்து அதிசயம் நடந்துள்ளது, அதேபோல கனவில் வந்து பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார்.
இன்னும் சிலருக்கு மற்றவர் கனவில் சென்றோ அல்லது யார் மூலமாவது பாபாவே நேரில் வந்து தீர்வு தந்த அதிசயம், எல்லாம் நித்தம் நித்தம் இங்கு நடக்கிறது என்கிறார்கள்.
பாபா வாழ்ந்த துவாரகமாயி மசூதி
பாபா வாழ்ந்த காலத்தில் தங்கியிருந்த மசூதிதான் துவாரகமாயி மசூதி.
இந்த மசூதியில் பலரின் சமாதி இருப்பதால் எப்பேர்ப்பட்ட தீய சக்தியும் இந்த மசூதிக்குள் நுழையவே முடியாதாம். த்ரிஷ்டி தோஷம், அபிசார பிரயோகம், மன முடக்கத்தால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்தாலே அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்வதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல துனி என்னும் அணையா அக்னிகுண்டம் உள்ளது இந்த அக்னிகுண்டமானது, தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எரிந்து
கொண்டே இருக்கிறது பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேண்டிக்கொண்டு மட்டை தேங்காய் அல்லது சமித்துகளை இதில் செலுத்துகிறார்கள், பின்னர் அதிலிருந்து பெறப்படும் பஸ்பத்தை தான் உதியாக பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள், சீரடிக்கு வருபவர்கள் பொறி, கல்கண்டு, தேங்காய், பழம் முதலியவற்றை வைத்து சாய்பாபாவை வழிபடுகிறார்கள், மேலும் சாய்பாபாவுக்கு பல வண்ணங்களில், அழகிய வஸ்திரங்களை வாங்கி சாற்றுகிறார்கள், இங்குள்ள மண்டபத்தில் தான் பூஜை வேளைகளில் பஜனைகள் சாய்பாபா பாடல்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறுகின்றன, அதை கேட்டாலே மனம் அப்படியே அமைதி அடைகிறது.
பாபா தங்கி ஓய்வெடுத்த சாவடி
துவாரகாமாயி அருகே பாபா தங்கி அருள் புரிந்த சாவடி உள்ளது, இந்த சாவடியில் இரு அறைகள் உள்ளன, இதில் முதல் அறையில் தான் பாபா அமர்ந்திருந்த நாற்காலி உள்ளது, மேலும் அவர் முக்தி அடையும் முன் அதாவது 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அன்று அவர் இறுதியாக படுத்திருந்த கட்டில் முதலியவை உள்ளன, இது தவிர பாபாவின் உருவச்சிலை மற்றும் பெரிய கண்ணாடிகள் உள்ளன, இங்கு வரும் பக்தர்கள் இந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.
சாய்பாபா அமர்ந்த கல்
சாய்பாபா வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு கல்லில் அமர்ந்திருந்து, வரும் பக்தர்களின் பிரச்சனைகளை தீர்ப்பாராம், சீலா என்ற அழைக்கப்படும் அந்த கல் இன்றும் பாபா கோயிலில் இருக்கிறது. பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு இந்த சீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள், அவ்வாறு வழிபட்டால் பாபாவே, தங்களது குறைகளை நீக்கி விடுவதாகவும் நம்புகிறார்கள், கோயில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணரும் உள்ளது அந்த கிணற்றை நாழிக்கிணறு என்றும் அழைக்கிறார்கள்,
அணையா அதிசய ஜோதி நந்தா தீபம்:
பாபா தன் கையாலே ஏற்றிய தீபம் இன்றும் அணையாமல் அப்படியே எரிகிறது.
அதை நந்தா தீபம் என்கிறார்கள்
கோயிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அறைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் எல்லாம்
பக்தர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.
மகா ஆர்த்தியும் சத்திய நாராயண பூஜை மகிமையும்
சீரடியில் மிகவும் பிரசித்தி பெற்றது மகா ஆரத்தி ஆகும்
ஒவ்வொரு நாளும் பாபாவுக்கு காட்டப்படும் இந்த மகா ஆரத்தியை கண்டாலே போதும் பல ஜென்ம பாவம் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.
மேலும் இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்
சத்யநாராயண பூஜை மிகவும் விசேஷமாகும் இதில் குழந்தை இல்லாத 100 தம்பதியர் கலந்து கொள்கிறார்கள், இந்த பூஜையில் குழந்தை இல்லாத தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் உடனே கிட்டும் என்பதும் நம்பிக்கை
“அன்பை அள்ளி கொடுக்கும் உனக்கு அழகு ஆரத்தி
பண்பை சொல்லி வளர்க்கும் உனக்கு பாச ஆரத்தி
நல்லதெல்லாம் நடத்தும் உனக்கு நித்திய ஆரத்தி
நாள்தோறும் சாய் உனக்கு பக்தர்களின் ஆரத்தி
குருவாக இருக்கும் உனக்கு திவ்ய ஆரத்தி
ஆரத்தி எடுப்போம், சுப ஆரத்தி எடுப்போம்
சீரடி வாசனின் சேவையை துதிப்போம்”
தினம் தினம் அன்னதானம்
பாபா தான் வாழும் காலத்தில் பிறரின் பசி பொறுக்காமல்
எந்நேரமும், எல்லோருக்கும் உணவு என்பதை செயல் படுத்தினார்,
அது இன்றுவரை சீரடியில் சிறப்பாக நடைபெறுகிறது, திரண்டு வரும் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக, அதிக இடவசதி கொண்ட உணவு கூடம் உள்ளது, இந்த உணவு கூடத்தில் ஒரே சமயத்தில் சுமார் 7000 பேர் அமர்ந்து சாப்பிடலாம் என்பது இதன் தனிச்சிறப்பாகும்,
இன்றும் எல்லோர் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்த்தி வரும் சீரடி சாய் பாபாவை தேடி, இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் இங்கு வருகிறார்கள்.
சாதாரண நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வருவதாகவும், விசேஷ நாட்களில் அதாவது வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவதாகவும் சொல்லப் படுகிறது
தலை விதியை மாற்றும் சாய் பாபா
எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி, என்னுடைய பிரச்னை எங்கு சென்றால் சரி ஆகும், எப்பொழுது சரி ஆகும், நானும் வாழ்வில் ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் நாளும் வராதோ என்பதே ஆகும்.
ஒரு முறை சீரடிக்கு சென்று சாய் பாபா வை வணங்கி வாருங்கள்
சாய் பாபாவை நம்பினோர் என்றுமே கைவிடப் படுவதில்லை, நீங்கள் நம்பி ஒரு முறை நினைத்தால் கூட போதும், சாய்பாபா உங்களைத் தேடி வருவார், எப்படி வருவார் என்பது ஒரு அதிசயமாக இருக்கும், அப்படி வந்த பின் அவர் உங்கள் மனதோடு பேசுவார், உறவாடுவார் அது உங்களுக்கு மட்டுமே புரியும்,
அந்த ஆனந்தத்தை அந்த உணர்வை சொல்லவே முடியாது, அது ஒரு தெய்வீக அனுபவம். சாய்பாபாவை துன்பத்தில் இருப்போர் மட்டுமல்ல இன்பத்தில் இருப்போரும் நினைக்கும் போது அதிசயங்கள் வாழ்வில் நிச்சயம் நடக்கும்,
இது பொய் அல்ல கண் கண்ட உண்மை என்பது பக்தர்களின் அனுபவ வாக்காகும் பல கோடி பேரின் விதியை தினம் தினம் மாற்றும் சாய்பாபாவை ஒருமுறை சீரடி சென்று தரிசித்துவிட்டு,
அவரின் உருவச் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் என்ற மந்திரத்தை கூறி வணங்கி வாருங்கள், நிச்சயம் சாய்பாபா யார் மூலமாவது உங்கள் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவார்.
விதியை மாற்றும் ஷீரடி சாய்பாபா | சீரடி சாய்பாபாவின் வரலாறு ஒலி வடிவில் கேட்க