Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeஜோதிடம்தினசரி ராசி பலன்இன்றைய ராசிபலன் – 09.12.2024

இன்றைய ராசிபலன் – 09.12.2024

இன்றைய ராசிபலன் – 09.12.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

டிசம்பர் 9
கிழமை: திங்கட்கிழமை

தமிழ் வருடம்: குரோதி
தமிழ் மாதம்: கார்த்திகை

நாள்: 24
ஆங்கில தேதி:9
வருடம்:2024

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.09 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி: இன்று அதிகாலை 4.16 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம்: மரண, சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 9.15 – 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45
ராகு காலம் காலை: 07.30 – 09.00

எமகண்டம் காலை: 10.30 – 12.00

குளிகை மாலை: 1.30 – 3.00
கௌரி நல்ல நேரம் காலை: 01.45 – 2.45

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 – 8.30
சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது உத்தி களை கையாள்வீர்கள்.

ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

மிதுனம்: பிரபலங்களின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிக நாட் டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாளர்களை மாற்றுவீர்கள்.

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

சிம்மம்: பணம், நகை, ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: நீண்டகால பிரச்சினையில் இருந்து விடுபட, மாற்றுவழி காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதிய பதவி, பொறுப்புகள் தேடிவரும்.

விருச்சிகம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகன பழுது நீங்கும். தொழில் ரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண் செலவை குறைத்து, சேமிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த அரசு, வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓயும்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். முன்கோபம், காரியத் தடைகள் வரக்கூடும். பிள்ளை களின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் உண்டாகும்.

Also Read: நவம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)

Also Read: தினசரி ராசி பலன்

Also Read: டிசம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments