இன்றைய ராசிபலன் – 02.12.2024
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
டிசம்பர் 2
கிழமை; திங்கட்கிழமை
தமிழ் வருடம்; குரோதி
தமிழ் மாதம்; கார்த்திகை
நாள்; 17
ஆங்கில தேதி; 2
ஆங்கில மாதம்; டிசம்பர்
வருடம்; 2024
நட்சத்திரம்: இன்று மாலை 04.38 வரை கேட்டை பின்பு மூலம்
திதி: இன்று பிற்பகல் 01.06 வரை பிரதமை பின்பு துவிதியை
யோகம்:சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 09.15 – 10.15
ராகு காலம் காலை: 07.30 – 09.00
எமகண்டம் காலை: 10.30 – 12.00
குளிகை மாலை: 01.30 – 03.00
கௌரி நல்ல நேரம் காலை: 01.45 – 02.45
கௌரி நல்ல நேரம் மாலை: 07.30 – 08.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டம்: பரணி, கார்த்திகை
மேஷம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வாகன பழுது நீங்கும்.
ரிஷபம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படவும். குடும்பத்தில் மூத்தோர் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும்.
மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி, மகிழ்ச்சி உண்டு.
கடகம்: தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப் பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்து, முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பேச்சில் பொறுமை தேவை.
கன்னி: அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. வாயு கோளாறால் நெஞ்சுவலி வந்து நீங்கும். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.
துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்: வெளியூர் பயணத்தால் அலைச்சல், அசதி இருக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். திடீர் செலவுகள் வரும். மாலைப்பொழுதில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
தனுசு: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை. தொழில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள்.
மகரம்: சொந்த ஊரில் மரியாதை, அந்தஸ்து அதி கரிக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். சகோதர உறவு களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பங்கு சந்தை, கமிஷன் வகையில் அனுகூலம் உண்டு.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாளர்களின் ஆதரவு உண்டு.
மீனம்: வெளி வட்டாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகன பழுது நீங்கும்.
Also Read: மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்
Also Read: நவம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)