Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஜோதிடம்தினசரி ராசி பலன்இன்றைய ராசிபலன் - 26.11.2024

இன்றைய ராசிபலன் – 26.11.2024

இன்றைய ராசிபலன் – 26.11.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 04.01 வரை உத்திரம் பின்பு அஸ்தம்

திதி: இன்று அதிகாலை 03.17 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45

ராகு காலம் மாலை: 03.00 – 04.30

எமகண்டம் காலை: 09.00 – 10.30

குளிகை மாலை: 12.00 – 1.30

கௌரி நல்ல நேரம் காலை:10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை:7.30 – 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: சதயம்

இன்றைய ராசிபலன்கள்:

Also Readஇன்றைய ராசிபலன் – 25.11.2024

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்கு பிறகு பால்ய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர் . தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். சக ஊழியர்கள் மதிப்பர்.

சிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் புதிய அதிகாரியின் அன்பை பெறுவீர். பொறுப்பு அதிகரிக்கும்.

கன்னி: உடல்சோர்வு, அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்

துலாம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபம் தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைப்படி செயல்படவும். அலு வலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தில் பணியாட்கள் நன்றியுடன் இருப்பார்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்.

தனுசு: வெளிவட்டாரத்தில் புதிய நண்பர்கள் சேருவர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அன்பாக நடந்து கொள்வர். மேலதிகாரி பாராட்டுவார்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும்.

Also Read:   இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் நவம்பர் 16, 2024

Also Read:  மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

Also Read: நவம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments