Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeஜோதிடம்தினசரி ராசி பலன்இன்றைய ராசிபலன் - 25.11.2024

இன்றைய ராசிபலன் – 25.11.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 10-ந்தேதி திங்கட் கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 01-37 வரை பூரம் பின்பு உத்திரம்

திதி: இன்று அதிகாலை 1-21 வரை நவமி பின்பு தசமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 6-00 to 7-00

நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45

ராகு காலம்: காலை 07-30 to 09-00

எமகண்டம்: காலை 10-30 to 12-00

குளிகை: மாலை 1-30 to 3-00

கௌரி நல்ல நேரம்: காலை 01-45 to 2-45

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: அவிட்டம்

இன்றைய ராசிபலன்கள்:

Also Readஇன்றைய ராசிபலன் – 24.11.2024

மேஷம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால், தடைபட்டிருந்த வேலையை முடிப்பீர்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர் வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம்.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான வீட்டு உபயோக பொருட்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. பழைய கடன் பாக்கிகள் கைக்கு வரும்.

கடகம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகன கடனுதவி கிடைக்கும். அரசு, வங்கி காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கன்னி: திடீர் பயணம், உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் நிதானமாக முடிவெடுப்பது அவசியம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.

துலாம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் நிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் விலகும்.

தனுசு: வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங் கள் தேடி வருவார்கள். பொது காரியங்களில் ஈடுபட்டு, பாராட்டு பெறுவீர்கள்.

மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கும்பம்: வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த உதவி, வாய்ப்புகள் தடைபடும். குடும்பத்தில் யாருடனும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பயணத்தால் அசதியுடன், அனுகூலமும் உண்டு.

மீனம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியாக இருந்த திருமண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி கூடும்.

Also Read:   இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் நவம்பர் 16, 2024

Also Read:  மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

Also Read: நவம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments