இன்றைய ராசிபலன் – 19.11.2024
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம்: இன்று மாலை முழுவதும் 07-15 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம் திதி: இன்று இரவு 10-00 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்: மரண, சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 7.45 – 8.45 நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45
ராகு காலம் மாலை: 03.00 – 04.30
எமகண்டம் காலை: 09.00 – 10.30
குளிகை மாலை: 12.00 – 1.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 – 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 – 8.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டம்: விசாகம், அனுஷம்
Also Read – இன்றைய ராசிபலன் – 18.11.2024
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு தேடி வரும். வீண் விவாதங்களை தவிர்த்து விடவும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர். பொது காரியங்களில் ஈடுபடுவீர். அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்தியோகத்தில் மேன்மையுண்டு.
மிதுனம்: எதிர்பாராத செலவுகள் வரும். குடும்பத்தா ரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாட்கள் தொந்தரவு தரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியை பகைத்து கொள்ளாதீர்.
கடகம்: குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் இடமாற்றம் கிடைக்கும்.
சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். புதுகருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். பண வரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டும்.
விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். வீண் விவாதங்களையும் தவிர்க்கவும்
தனுசு: முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. வாகனத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் நீங்கள் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் தடைபட்ட வேலை முடியும்.
கும்பம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: உங்கள் உழைப்புக்கு பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரம் லாபம் தரும்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் நவம்பர் 16, 2024
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்
நவம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)